!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Sunday, April 20, 2008

ஆஞ்சனேயரை ஸ்மரிப்பவர்களுக்கு




ஜகத்குரு ஸ்ரீ காஞ்சிப் பெரியாவாள் அருள் வாக்கு.

புத்திர் பலம் யசோர் தைர்யம் நிர்பயத்வம் ஆரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்.

ஆஞ்சனேயரை ஸ்மரிப்பவர்களுக்கு அவர் என்னென்ன அனுக்கிரஹிக்கிறார் என்று இந்த‌ ஸ்லோகம் சொல்கிறது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக் வன்மை, இத்தனையும் தருகிறார் அவர். சாதாரணமாக இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லாமல் இருப்பான்.பெரிய‌
பலசாலி புத்தியில்லாமல் இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக இருப்பான்.
பயந்தாங்கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும் அவற்றைப் பிரயோகிக்க‌
சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும்
தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான். இந்த மாதிரி
ஏறு மாறான குணங்கள் இல்லாமல், எல்லா ஸ்ரேயஸ்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார்
ஆஞ்ச நேயர். காரணம், சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத பல குணங்கள்,
சக்திகள், அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருந்தன். நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவை
கூட அவரிடம் ஸ்வபாவமாகச் சேர்ந்திருந்தன. உதாரணமாகப் பெரிய புத்திசாலிக்கு அகங்காரம்
இல்லாத பக்தி இராது. ஆஞ்ச நேயரோ தேக பலம், புத்தி பலம், இவற்றைப்போலவே வினயம்,
பக்தி, இவற்றிலும் முதல்வராக நிற்கிறார். வலிவு இருக்கிறவன் கெட்ட வழியில் போவதுண்டு.
அவனுக்கு பக்தி இருக்காது. பக்தி இருக்கிறவர்களுக்கு கூட அதன் ஞானத்தின் தெளிவு இலலாமல்
மூட பக்தியாகவோ, முரட்டு பக்தியாகவோ இருப்பதுண்டு. ஆஞ்ச நேயர் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியின்
பரம பக்தராக இருக்கும்போதே பரம ஞானியாகவும் இருந்தார். எப்படி தக்ஷிணாமூர்த்தி ஸனகாதி
முனிவர்களை முன்னிட்டு உபதேசம் செய்கிறாரோ, அப்படியே ஸ்ரீராமன் ஆஞ்சனேய ஸ்வாமியை
முன்னால் வைத்துக்கொண்டு ஞான உபதேசம் செய்கிறார் என்று "வைதேஹி ஸஹிதம் " ஸ்லோகம்
சொல்கிறது. பைசாச பாஷையில் கீதைக்குத் தத்துவமயமான ஒரு பாஷ்யம் இருப்பதாகவும் அது
ஆஞ்ச நேயர் செய்தது என்றும் சொல்வார்கள். அப்படிப்பட்ட தத்துவ ஞானி அவர் ஒன்பது வியாகரணமும்
தெரிந்த ' நவ வியாகரண வேத்தா ' என்று ராமரே அவரைப் புகழ்கிற அளவுக்குப் பெரிய கல்விமான்.

ஞானத்தின் உச்ச நிலை, பலத்தில் உச்ச நிலை, பக்தியில் உச்ச நிலை, வீரத்தில் உச்ச நிலை, கீர்த்தியில்
உச்ச நிலை, சேவையில் உச்ச நிலை, வினயத்தில் உச்ச நிலை இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற‌
ஸ்வரூபம் ஒன்று உண்டு என்றால் அது ஆஞ்ச நேய ஸ்வாமிகள் தான்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய பிரம்மசர்யத்தைச் சொல்லவேண்டும். ஒரு க்ஷணம் கூடக்
காமம் என்கிற நினைப்பே வராத மஹா பரிசுத்த மூர்த்தி அவர்.

அவரை நம் தேசத்தில் அனுமார் என்போம். கன்னடச்சீமையில் அவரே ஹனுமந்தையா. சித்தூருக்கு
வடக்கே ஆந்திரா முழுவதும் ஆஞ்சனேயலு. மஹாராஷ்டிரம் முழுவதும் மாருதி. அதற்கும் வடக்கில்
மஹாவீர் .

ஆஞ்ச நேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் நமக்கு தைரியம் வரும், பயம் நிவ்ருத்தி ஆகும். புத்தி வரும். பக்தி வரும். ஞானம் வரும். காமம் நசித்துவிடும்.

ராம் ராம் என்று எங்கெங்கே சொல்லிக் கொண்டிருந்தாலும், ரகுனான கீர்த்தனம் எங்கெங்கே நடந்தாலும்
அங்கெலாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்ச நேயர் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக்கொண்டு நின்று கேட்கிறார். இந்த காலத்தில் நமக்கு மற்ற எல்லா அனுக்கிரஹங்களோடு
முக்கியமாக அடக்கமாக இருக்கிற பண்பு ரொம்பவும் அவசியப்படுகிறது. அதை நமக்கு ஆஞ்ச நேயர்
அனுக்கிரஹம் பண்ணவேண்டும். அவரைப் பிரார்த்திப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை.

நன்றி : கல்கி.

Thursday, April 17, 2008

Totakashtakam




Totakacarya
One of the chief disciples of Sankara composed an octad of verses in praise of the Master. The metre he has used in this composition is the difficult but beautiful totaka. Hence he was himself given the name Toûakácárya. Every word of this exquisite hymn bespeaks the utter devotion of its author to Sañkara. Sañkara, the Guru, is all to him. There is nothing equal to the Guru; nothing superior to him. The Guru is the dispeller of the darkness of ignorance. There can be no greater good than the removal of ignorance. The spirit of devotion of the disciple is best expressed in the soul-moving burden of this song : Be Thou my refuge, O Master, Ùañkara (bhava Sañkara deùika me ùaraïam)!
Courtesy:



O Thou, the knower of all the milk-Ocean of Scriptures! The expounder of the topics of the great Upanisadic treasure-trove! On Thy faultless feet I meditate in my heart, Be Thou my refuge O Master, Sankara!
பாற்கடலன்ன மறைகளை அறிந்தவரே ! பெரும் புதையலாம் உபனிஷத்துக்களின் உண்மைக்கருத்துக்களை
எடுத்துரைத்தவரே ! தங்கள் மாசிலா அடிகளை என் இதயத்திற் கொண்டு தங்களைத் தியானிக்கிறேன். எனக்கு அடைக்கலம் தந்து அருள்வீர் சங்கரரே !

O the Ocean of compassion! Save me whose heart is tormented by the misery of the sea of birth! Make me understand the truths of all the schools of philosophy! Be Thou my refuge, O Master, Sañkara.
கருணைக் கடலே ! பிறவிக்கடலின் துன்பத்திற் தவித்திடும் என் இதயத்தைக் காத்திடுவாய் ! தத்துவத்தின் எல்லாப்பிரிவுகளிலும் உள்ள உண்மைகளை அறியச்செய்திடுவாய் !எனக்கு அடைக்கலம் தந்து அருள்வீர் சங்கரரே !

By thee the masses have been made happy, O Thou who hast a noble intellect, skilled in the inquiry into self-knowledge! Enable me to understand the wisdom relating to God and the soul. Be Thou my refuge, O master, Sañkara.
நின் அளவிலாக் கருணையினாலே மக்கள் இன்பமுற்றுள்ளார். சீரிய நுண்ணறிவும் தன்னுள் உறையும் ஆன்மாவினைப்பற்றியும் அறிந்திடும் திறன் கொண்டவரே ! பரமனைப் பற்றியும் ஆன்மாவைப்பற்றியும் நல்லறிவு யான் பெற உதவிடுவாய். எனக்கு அடைக்கலம் தந்து அருள்வீர் சங்கரரே !

Knowing that Thou art verily the Supreme Lord, there arises overwhelming bliss in my heart. Protect me from the vast ocean of delusion. Be Thou my refuge, O Master, Sankara.
உண்மையில் நினையே பிரம்மன் என நான் அறிவதால், எனது இதயத்தில் சொல்லவொண்ணா ஆனந்தம் பெருகுகிறது. மாயை எனும் பெருங்கடலிருந்து எனைக் காப்பாய் !எனக்கு அடைக்கலம் தந்து அருள்வீர் சங்கரரே !

Desire for the insight into unity through Thee will spring only when virtuous deeds are performed in abundance and in various directions. Protect this extremely helpless person. Be Thou my refuge, O Master, Sañkara.
இன்பமும் துன்பமும் இரைந்து கிடக்கும் இவ்வுலகில் சமனிலையில் நின்று நற்கருமங்கள் நால் திசைகளிலும் செய்வோரையே நீ அடைவாய் என நான் அறிவேன். எனைக் காப்பாற்றிடு. எனக்கு அடைக்கலம் தந்து அருள்வீர் சங்கரரே !


O Teacher! For saving the world the great assume various forms and wander in disguise. Of them, Thou shinest like the Sun. Be Thou my refuge, O Master, Sañkara.

உலகத்தினைக் காப்பாற்றிட குருவே 1 நீ பல தருணங்களில் பல உருவங்களில் வருவாய். அவைகளில் நீ சூரியன் போன்று ஒளியானாய். எனக்கு அடைக்கலமாக ஆவாய்.
எனக்கு அடைக்கலம் தந்து அருள்வீர் சங்கரரே !

O the best of Teachers! The Supreme Lord having the built as banner! None of the wise is equal to Thee! Thou who art compassionate to those who have taken refuge! The Treasure-trove of truth! Be Thou my refuge, O Master Sankara.
குரு எனப்பட்டோருக்கெல்லாம் குருவே ! நின் கொடிதனையும் அவ்விறைவன் ஏற்றினானோ ! நினைப்போல் அறிவிற்சிறந்தோர் யாருமில்லை. நினை அடைக்கலம் என அடைந்தார் மேல் கருணையுள்ளம் கொண்டாயே !
உண்மைப் பொருளின் புதையலே !
எனக்கு அடைக்கலம் தந்து அருள்வீர் சங்கரரே !


Not even a single branch of knowledge has been understood by me correctly. Not even the least wealth do I possess, O Teacher. Bestow on me quickly Thy natural grace. Be thou my refuge, O Master Sañkara.

அறிவின் எந்த ஒரு கிளையும் நான் சரிவர அறிந்ததில்லை. செல்வம் எனச் சொல்லும் ஏதும் என்னிடம் இல்லை. ஆகவே குருவே ! உனது இயல்பான அருள்மழைதான் என்மேல் பொழிவாய். எனக்கு அடைக்கலம் தா.எனக்கு அடைக்கலம் தந்து அருள்வீர் சங்கரரே !


ORIGINAL SANSKRIT TEXT TRANSLITERATED INTO ENGLISH IS AS FOLLOWS:


viditákhilaùástrasudhájaladhe
mahitopanisatkathitárthanidhe
hødaye kalaye vimalam caraïam
bhava ùañkara deùika me ùaranam.(1)


karuïávarunalaya pálaya mám
bhavaságaraduçkhavidünahødam
racayákhiladarùanattattuavidam
bhava ùañkara deùika me ùaraïam.(2)

bhavatá janatá suhitá bhavitá
nijabodhavicárana cárumate
kalayeùvarajivavivekavidam
bhava ùañkara deùika me ùaranam.(3)


bhava eva bhavániti me nitarám
samajáyata cetasi kautukitá
mama váraya mohamahájaladhim
bhava ùaïkara desika me ùaraïam.(4)


sukøte' dhikøte bahudhá bhavato
bhavitá samadarsanalalasata
atidinamimam paripálaya mám
bhava ùaïkara deùika me ùaraïam.(5)


jagatimavitum kalitákøtayo
vicaranti mahamahasaùchalatah
abhimámsurivatra vibhási guro
bhava ùañkara deùika me ùaraïam.(6)


gurupuñgava puñgava ketana te
samatámayatám nahi ko pi sudhiç
ùaraïágatavatsala tattvanidhe
bhava ùañkara deùika me ùaraïam.(7)


viditá na mayá viùadaikakalá
na ca kimcana káòcanamasti guro
drutameva vidhehi køpám sahajám
bhava ùañkara deùika me ùaraïam.(8)

Sunday, April 13, 2008

Sarvadhari New Tamil Year Panchanga Patanam





ஸர்வதாரி வருஷம் கலியப்தம் 5109 வருஷம்
விக்ரமசகம் 2064 = 65 வள்ளுவம்2040
இங்க்லீஷ் 2008 =2009 பிரபவாதி 22
கொல்லம் 1183 1184 சேஷகலி 426891

இவ்வருஷத்திற்கு ராஜா சந்திரன். மந்திரி சூரியன். சேனாதிபதி சூரியன்
அர்க்காதிபதி சூரியன் ஸ்ஸ்யாதிபதி புதன்.
தான்யாதிபதி செவ்வாய்
ரஸாதிபதி சுக்கிரன்
நீரஸாதிபதி புதன்
மேகாதிபதி சூரியன் வருஷ தேவதை லக்ஷ்மி நாராயணன்.
பசு நாயகர் பல பத்தரர்.
இவ்வருஷத்தில் தென் கிழக்குத் திக்கில் காள மேகம் உற்பத்தி ஆகிறது.
தேவமானத்தால் 100 யோஜனை உயரமும், 60 யோஜனை அகலமும்
உள்ள மரக்காலால் 3 மரக்கால் மழை பொழியும். இதில் 10 பாகம்
சமுத்திரத்திலும் 6 பாகம் மலையிலும் 4 பாகம் மற்ற பூமியிலும் மழை பொழியும்.

ஸர்வதாரி வருஷத்திய பலன்

நற்சர் வதாரி தனில் நல்ல மழை உண்டாம்.
அற்பவித்தான் என்பதெல்லாம் ஆகாது. சொற்பெரிய‌
ஐந்து வகை விளைவு மாகும். சுகமுடனே
மைந்தரெல்லாம் வாழ்ந்திருப்பார் மற்று.

எல்லா நன்மையும் உண்டாகும்.

நாராயண.. நாராயண ....

Monday, April 7, 2008

Sankshepa Ramayana .. Fruits of Chanting this Text is Immense





ஸ்ரீ ராகவன் அனேக அஸ்வ மேதங்க‌ளையும் பஹு ஸுவர்ணமென்கிற யாகங்களையும் செய்து பதினாயிரம்
கோடி கோதானமும் செய்து ப்ராமணர்களுக்கு அளவற்ற த்ரவ்யத்தைக் கொடுத்து, பிறகு, பரபிரும்மஸ்வரூபமான தன்னுடைய லோகத்தை அடையப்போகிறார்.

ஸ்ரீ ராகவன் அனேகம் க்ஷத்திரியர்களுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து பரிபாலனம் செய்வார். நால்வகை வர்ணத்தில் உள்ளவர்களுக்கும் அவரவர்களுக்குரிய தர்மத்தில் நடத்திவைப்பார்.

பதினோராயிரம் வருஷங்கள் ஸ்ரீராமன் ஜனங்களைப் பரிபாலனம் செய்த பிறகு ஸ்ரீ வைகுண்ட மஹா நகரத்தை அடையப்போகிறார்.

இந்த ஸ்ங்க்ஷேப ராமாயணமாவது, வேதங்களைப் போல் தன்னை நியமத்துடன் ஓதுபவர்களுக்குப் புண்ணியத்தை விளைவிக்கும். பாபத்தைத் தொலைக்கும். பரிசுத்தியை உண்டாக்கும். இதை நியமத்துடன்
ஓதுகிறவன் ஸகல பாபங்களிலிருந்தும் விடுபடுவான்.

ஆயுஸ்ஸை வளர்க்கடவதாய், ஸ்ரீ ராமனுடைய முற்கதைகளை, உரைக்கிற இந்த பால ராமாயணத்தை நியமமாக
ஓதுகிறவன் புத்திர பொளத்திரர்களுடனும் பந்து மித்திரர்களுடனும் கூடி (இங்கிருக்கும் நாள் ஐஹிக போகங்களை
புஜித்துப் பின்பு ) ப்ரகிருதி ஸம்பந்தத்தை விட்டு வைகுந்தமா நகரம் சென்று அங்குள்ளவர்களால் பூஜிக்கப்படுவான்.

இந்த ஸங்க்ஷேப ராமாயணத்தை பாடம் செய்தானாகில் ஸகல் வேதார்த்தங்களையும் அறிய வல்லவனாவன்.
பெரிய ராஜ்யத்தை ஆள வல்ல சக்ரவர்த்தியாவான். வியாபாரத்தில் பெரிய லாபத்தையும் பெருந்தன்மை அடைந்து
புகழப்படுவான்.

சுபம்.

***********************************************************

Sunday, April 6, 2008

Sri Rama Pattabishekam ஸ்ரீ ராம பட்டாபிஷேகம


ஸ்ரீ ராகவன், தேவர்களின் வரத்தினால் யுத்தத்தில் இறந்த வானரர்களையும் எழுப்பிக் கொண்டு அவர்களுடன் கூட புஷ்பக விமானத்தில் ஏறி அயோத்திக்குச் சென்றார்.

பரத்வாஜ மஹாமுனிவருடைய ஆச்ரமத்தை அடைந்து, அங்கு நின்றும் இராகவன், தான் வருவதாக பரதனிடம் அறிவிக்க அவரிடம் ஹனுமானை அனுப்பினார்.

ஸ்ரீ ராமன் முன் நடந்த கதைகளை ஸுக்ரீவனிடம் சொல்லிக்கொண்டு புஷ்பகத்தின் மேல் ஏறி பரதன் இருக்கிற நந்தி கிராமம் என்கிற ஊருக்குச் சென்றார்.

அந்த நந்திக் கிராமத்தில் ஸ்ரீ ராகவன் தம்பிகளுடன் கூட இன்னாள் தரித்த சடையை வாங்கி நீராடி ஸீதாதேவியுடன் சிம்மாசனத்தில் உட்கார்ந்து பட்டாபிஷேகம் செய்துகொண்டு இராஜ்யத்தை அடைந்தார்.

அக்காலத்தே ஜனங்கள் மயிர்க்கூச்சலுடன் மனம் சந்தோஷித்து, தாம் விரும்பிய விருப்பத்தை எல்லாம் அடைந்து மகிழ்ச்சியுடன் உடல் பருத்து அறம் பொருந்திய காரியங்களை நடத்திக் கொண்டு உடல் நோய் அற்றவர்களாய்,
ஏழ்மையற்றவராய், பயமுற்றவராய் ஆனார்கள்.

அக்காலத்தில் ஜனங்கள் தங்கள் புத்திர மரணத்தையோ பெண்கள் தமது கணவர் மரணத்தையோ பார்ப்பதில்லை. அவர்களிடத்தில் அவர்கள் இன்புற்றவறாக இருப்பர்.

அக்கினியினால், ஜலத்தினால், காற்றினால், ஜ்வரத்தினால், பசியினால், திருடர்களினால், எவ்வித
உபாதையும் உண்டாகாது.

பட்டணங்களில் செல்வமும் தேசங்களில் தானியமும் ஸம்பூரணமாக உண்டாகப் போகிறது. ஜனங்கள்
க்ருதயுகத்திற் போல், இந்த த்ரேதா யுகத்திலும் ஸந்தோஷத்தை அடைவார்கள்.

Vibhishana Pattabishekam

Sankshepa Ramayanam. Ramayana in just 100 verses, as translated by Sri Ramanujacharya, Mada boosi, in 1923.
Today is the narration of the crossing of sea, killing of Ravana, Coronation of
Sri Vibhishana

பின்பு ஸ்ரீ ராமன் ஸுக்ரீவனுடன் கடற்கரையை அடைந்து அங்கு அணை செய்யக்கருதி வருணனை
வேண்டிக் கொள்ள அவன் வராததால், சினம் கொண்டு, அக்கடலை பாணங்களினால் வியாகுலம்
செய்துவிட்டார்.

பின்பு சமுத்திர ராஜன் தன் மனைவிகளுடன் ஸ்ரீ ராமனிடம் வந்தான். அந்த ஸமுத்ர ராஜனுடைய
உத்திரவின்படி நளன் என்பவனைக் கொண்டு கடலில் அணை கட்டினார்.

அவ்வணையின் வழியே இலங்கைக்குச் சென்று போர்க்களத்தில் இராவணனைக் கொன்று ஸீதையை
அடைந்து, இ ந் நாள் பிறர் அகத்தில் இருந்த இவளை எப்படி அங்கீகரிப்போம் என்று வெட்கித்து இருந்தார்.

அனந்தரம், எல்லோரும் ஸீதையை பதிவ்ரதை என்று நம்புவதற்காக ஜனக் கூட்டத்தின் நடுவில் ஸீதையைப்
பார்த்து நீ அக்னிப் பிரவேசம் பண்ணவேண்டும் என்று கடூரமாக மொழிந்தார். ஸீதாதேவி அச்சொல்லைப்
பொறுக்க மாட்டாதவளாய் அக்னியில் குதித்தாள்.

பிறகு " இவள் மஹா பதிவிரதை " என்று அக்னிதேவன் சொல்லக்கேட்டு, சீதாதேவியை எவ்விதத்திலும்
தோஷமற்ற வளாயறிந்து மிகவும் மகிழ்ச்சியுற்றார். அப்பொழுது தேவர்கள் இவரைக் கொண்டாடினார்கள்.

ஸ்ரீ ராகவன் செய்த இராவண வதம் ஆகிற அப்பெருந்தொழிலினால் தேவர்களும் ருஷிகளும் மற்றும் மூன்று
உலகங்களில் உள்ள பிராணிகளும் மரம் முதலானவைகளும் களித்தனர்.

விபீஷணனை ராக்ஷச ராஜனாக இலங்கையில் முடி சூட்டித் தான் கடற்கரையில் ' இராவணனை முடித்து
உனக்கு ராஜ்ஜியத்தைத் தருகிறேன் " என்று சொன்னபடி செய்து மனதில் உள்ள தாபம் தீர்ந்து இராகவன்
ப்ரீதி அடைந்தார்.

Friday, April 4, 2008

" பார்த்தேன் ஸீதையை "


This Chapter of Sankshepa Ramayana reveals efforts of Hanuman in tracing Sita at Lanka, assuring Sita of the efforts of Sri Rama, burning Lanka, and getting back to Sri Rama to tell him of his successful mission.


வானர அதிபதியாகிய அந்த சுக்ரீவன் எல்லா வானரங்களையும் திரட்டிக் கொண்டு வந்து ஸீதா தேவியைத் தேடிக் கண்டுபிடிக்க எல்லாத் திசைகளுக்கும் அனுப்பினான்.

பிறகு, தெற்கு திசையை நோக்கிச் சென்ற ஹனுமான், ஸீதை இலங்கையில் இருப்பதி ஸம்பாதி சொல்லக் கேட்டு அங்கு போகக் கருதி, நூறு காதம் பரந்திருந்த கடலைத் தாண்டினார்.

அக்கரையில் இராவணன் பரிபாலித்து வருகிற இலங்காபுரியை அடைந்து அங்கு அசோக வனத்தில் எப்போதும் ஸ்ரீராமனையே தியானித்துக் கொண்டிருக்கிற ஸீதா தேவியைப் பார்த்தார்.

ஸீதா தேவிக்கு ராம நாம அங்கிதமான மோதிரத்தைக் கொடுத்து ஸ்ரீ ராகவன் ஸீதையை மீட்பதற்குச் செய்யப்படும் முயற்சியையும் தெரிவித்து சமாதானம் சொல்லி பிறகு இலங்கையின் கோட்டை வாசலை இடித்தார்.

அதைக்கேட்ட இராவணனால் ஏவி வந்த ஐந்து சேனாதிபதிகளையும் ஏழு மந்திரி குமாரர்களையும் சூரனான‌
அக்ஷணையும் கொன்றுவிட்டுப் பிறகு இந்திரஜித்து பிரயோகித்த பிரமாஸ்திரத்தினால் கட்டுண்டார்.

ஒரு முயற்சி இன்றியே பிரம தேவனுடைய வரத்தினால் தான் கட்டுண்ட அந்த அஸ்திரத்தின் கட்டு விடுபட்டுப் போனதை அறிந்த ஹனுமான், தன்னைக் கட்டியிழுக்கிற அரக்கர்களுடைய அபராதத்தைப் பொறுத்துக்கொண்டு பிறகு சீதை இருக்கும் இடம் தவிர மற்ற இலங்கையை முழுதும் கொளுத்திவிட்டு, ஸ்ரீராமனுக்கு ஸீதையைக்
கண்டதை ஆவலுடன் சொல்ல திரும்பி வந்தார்.

புத்திமானாகிய அந்த ஹனுமான் ஸ்ரீராமனிடம் வந்து அவரை வலம் வந்து " பார்த்தேன் ஸீதையை " என்று
சொல்லி அங்கு நடந்த கதையைச் சொன்னர்.

Thursday, April 3, 2008

Friendship with Sugriva..Vali killed..Sugriva Becomes the King

Sankshepa Ramayanam..Vali hatham.. Coronation of Sugriva.

பலசாலியாகிய இராகவன் தான் பிறந்தது முதல் நடந்த கதைகளை ஸுக்ரீவனுக்குச் சொல்லி ஸீதாதேவியின்
சம்பந்தமாக நடந்தவற்றையும் எடுத்துச் சொன்னார்.

ஸுக்ரீவனும் இராமனுடைய நடவடிக்கைகளை எல்லாம் கேட்டு மகிழ்ச்சி அடைந்தவனாய், அக்னி முன்னால்
அவருடன் நட்பு பூண்டான்.

பிறகு, வானர அரசனான ஸுக்ரீவன், வாலிக்கும் தனக்கும் நேர்ந்த விரோதத்தின் வரலாற்றைக் கேட்ட ஸ்ரீராமனுக்கு விசுவாசம் கொண்டு, கண்ணீர் விட்டுக் கொண்டே, நடந்த கதைகள் எல்லாம் சொன்னான்.

அப்பொழுது ஸ்ரீ ராகவன் தான் வாலியைக் கொல்வதாகச் சபதம் செய்தார். அவருக்கு ஸுக்ரீவன் வாலியுடைய பலத்தை எல்லாம் அறிவித்தான்.

இராகவனுடைய பலத்தை அறிவதற்காக, ஸுக்ரீவன், அங்கு பெருமலை போல் விழுந்திருந்த துந்துபியின்
வலிய சரீரத்தைக் காட்டி, " இதை வாலி தன் காலின் பெருவிரலினால் தூக்கி எறிவன் " என்றான்.

மஹா பலசாலியான இராகவன் அந்த எலும்பைப் பார்த்து " இது எவ்வளவு ?" என்று அலக்ஷ்யமாகக்
காலின் பெருவிரலினால் எடுத்து பத்து யோஜனைக்கு அப்புரம் போய் விழும்படி எறிந்தார்.

(வெகு நாட்களாக உலர்ந்து கிடக்கிற அவ்வரக்கனுடைய உடலைத் தூக்கி எறிந்த மாத்திரத்தில் இவர்
வாலியைக் கொல்ல வல்லவரோ என்று ஸுக்ரீவன் மனதில் சந்தேகம் இன்னும் இருப்பதை அறிந்து ) இன்னும்
அவனுக்கு நம்பிக்கை உண்டக்குவதற்காக ஒரு பெரிய அம்பினால் ஏழு மரா மரங்களை எய்தார். அந்த அம்பு
அந்த மரங்களையும் அருகில் இருந்த மலையையும் பிளந்து பூமியுள்ளே சென்று கீழ் உலகங்களில் ஆறாவது
ஆகிய ரஸாதலம் என்னும் உலகத்தையும் பிளந்துவிட்டது.

அதைக்கண்ட ஸுக்ரீவன் இவர் வாலியைக் கொல்லவல்ல பலசாலிதான் என்று நம்பிக் களிப்புற்றவனாய்,
அப்பொழுது, இராகவனைக் கூட்டிக் கொண்டு வாலியைக் கொல்லுவதற்காக, மலைக்குள் இருக்கிற
கிஷ்கிந்தைக்குப் போனான்.

பிரகு ஸுக்ரீவன் சந்தோஷத்தினால் புகழ் பெற்று, " இனி நாம் வானர அதிபதி ஆவோம் " என்று நிச்சயித்து பெரும் கூச்சலிட்டான்.

அக்கூச்சலைக் கேட்டு வாலி கிஷ்கிந்தையிலிருந்து வெளிக் கிளம்பினான்.

இப்பொழுது நீர் யுத்தத்திற்குப் போவது உசிதம் அன்று சொன்ன தன் மனைவியான தாரையை நல்வார்த்தைகள் சொல்லிச் சமாதானப்படுத்தித் தான் வந்து ஸுக்ரீவனுடன் யுத்தம் செய்தான்.

அப்போர்க்களத்தில் இராகவன் ஓர் அம்பினால் வாலியை முடித்துவிட்டார்.

ஸுக்ரீவன் கேட்டுக் கொண்டபடியே ஸ்ரீ ராகவன் வாலியை யுத்தத்தில் முடித்து, அந்த ராஜ்யத்தைக்
கொடுத்து, ஸுக்ரீவனுக்கு முடி சூட்டினார்.

Please read from the first chapter which commenced from 28th March 2008.

Sita Abducted ! Marichan killed..Rama meets Hanuman...

THESE ARE TRANSLATIONS FROM THE 108 VERSES OF SANKSHEPA RAMAYANA AS REVEALED BY SAGE NARADHA TO SAGE VALMIKI. IT IS STRONGLY ADVISED THAT DEVOTEES OF RAMA MAY PLEASE READ THIS PREFERABLY ONE OR TWO PER DAY, DEPENDING ON THEIR TIME AVAILABILITY.

PLEASE READ THIS NITHYA PARAYANA FROM THE BEGINNING.
THE FIRST CHAPTER COMMENCES FROM 28TH MARCH 2008.

அந்த மாரீசன் " ஓ இராவணா ! அந்த ஸ்ரீ ராமனுடைய பராக்கிரமத்தை ஜுஸத்தான யுத்தத்தில் கேட்டாயல்லவா? இனி நீ அந்த பெருமிடுக்கரோடு எதிர்ப்பது உனக்குரியது அன்று என்று சொல்லி
இராவணனைப் பலவிதமாகத் தடுத்தான்.

இயமனாலேவுண்ட இராவணன் அம்மாரீசனத்தைச் சட்டை செய்யாமலே ஸ்ரீ ராகவன் வீற்றிருக்கும்
ஆசிரமத்திற்கு மாரீசனைக் கூட்டிக்கொண்டு போனான்.

அங்கு அந்த மாரீசன் விசித்ரமான பொன் மான் உருவங்கொண்ட தன்னிடத்தில் ஆவலுற்றுப் பிடிக்க‌
முயன்ற ஸ்ரீ ராகவனையும் லக்ஷ்மணனையும் கைக்கு அகப்படாமல் வெகுதூரம் இழுத்துக் கொண்டு
போனான். அவ்விரு ராஜ குமாரர்களும் இல்லாத காலத்தில் இராவணன் புகுந்து ஸீதா தேவியை எடுத்துக் கொண்டு போகையில் அவளிடத்தில் பரிந்து வந்த ஜடாயுவையும் மடியச்செய்துவிட்டு அவளைத் தன் இலங்கைக்கு கொண்டு போய் விட்டான்.

பிறகு ஸ்ரீ ராகவன் வந்து ஸீதையைக் காணாமல், தேடிக்கொண்டே போகையில், குற்றுயிராய் அடிபட்டு
விழுந்திருக்கிற ஜடாயுவைப் பார்த்து ஸீதையை இராவணன் எடுத்துக்கொண்டு போனதாக அவர் சொல்லக் கேட்டு மிக்க வருத்தமுற்றவராய் இயங்கிப் பிரலாபித்தார்.

பிறகு ஜடாயுவுக்கு நேர்ந்த ஆபத்தை நினைந்துப் பெரும் துன்பம் உற்ற இராகவன் ஜடாயுவை தஹனம்
செய்துவிட்டு ஸீதையைத் தேடிக்கொண்டு போகையில் வழியில் பயங்கரமான உருவங்கொண்ட கபந்தன்
எனும் அரக்கனைப் பார்த்தார்.

இராகவன் அந்தக் கபந்தனைக் கொன்று தஹனம் செய்தார். அவன் ஸ்வர்க்கத்தை அடைந்தான்.

அந்தக் கபந்தன் ஸ்வர்க்கத்திற்குப் போகும்போது, " ஓ இராகவனே ! இவ்வழியே சென்றால் அங்கு
நல் ஒழுக்கமுடையவளாய் ஸன்யாஸ ஆச்ரமத்தில் ஒரு வேடுவப் பெண்மணி இருக்கிறாள். அவள் இருக்கும்
இடத்திற்கு நீர் செல்லும்" என்று சொன்னான்.

அடியாருடைய துன்பத்தைத் தொலைக்கவல்ல மிகுந்த புகழுடைய இராகவன் அந்த வேடுவப் பெண்மணி இருக்கும் இடம் சென்றார். ராஜகுமாரனாகிய இராகவனுக்கு அவ்வேடுவப்பெண்மணி சிறந்தவாறு பூசை செய்தாள்.

இராகவன் அங்கிருந்து சென்று பம்பை என்னும் ஸரஸ்ஸின் கரையில் ஹனுமான் என்கிற வானரத்தோடு
சேர்ந்தார்.

அந்த ஹனுமானுடைய சொற்படி இராகவன் சுக்ரீவனுடன் நேசித்தார்.

Wednesday, April 2, 2008

Surpanaka's nose cut.. Ravana enters the scene

பரதன் அயோத்திக்குப் போனபின், பரதன் இவ்வளவு கேட்டுக்கொண்டபின்னும், தான் செய்த பிரதிக்ஞயை விடாது, ராஜ்ய சுகத்தில் மனம் சேராது இருக்கும் ஸ்ரீ ராகவன், இந்த சித்ர கூடத்தில் பட்டணத்தில் உள்ள ஜனங்கள் வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆகையினால், இங்கிருக்ககூடாது என ஆலோசித்து, பிதாவின் சொல்லைப் பரிபாலனம் செய்வதற்காக தண்டக வனத்திற்கு சென்றார்.

செந்தாமரைக்கண்ணனான ஸ்ரீ ராகவன் அப்பெரிய காட்டினுள் புகுந்து அங்கு உள்ள வினோதங்களைப் பார்த்துக் களித்தவண்ணம் சென்றார். போகும் வழியில் வந்த விராதன் இன்னும் அசுரனைக் கொன்று பிறகு சரபங்க முனியையும் ஸுதீக்ஷ்ணரையும் அகஸ்திய மஹாமுனிவரையும் அவரது தம்பியான ஸுதர்சனரையும் பார்த்தார்.


அகத்தியரின் நியமனத்தின்படி, அவர் குடிலில் வைத்திருந்த இந்த்ர தனுசையும்
கத்தியையும், அம்புகளோடு எப்போதும் கூடியுருக்கும் இரண்டு அம்பறாத்தூணிகளையும் அன்புடன் (ப்ரிதியுடன் ) எடுத்துக்கொண்டார்.

ஸ்ரீ ராகவன் அந்த சரபங்க ஆச்ரமத்தில் இருக்கும்போது, முனிவர்கள் அசுர ராக்ஷனை வதம் செய்யவேண்டுமென இவரிடம் பிரார்த்திப்பதற்கு அங்கு வந்தார்கள்.

ஸ்ரீ ராகவன் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி அரக்கர்களைக் கொல்லுவேன் எனச் சபதம் செய்தார்.

(அதாவது) அக்னியோடு ஒத்த தேஜஸ்ஸை உடையவராய், தண்டக ஆரண்யத்தில் வசிக்கின்ற ரிஷிகளைக் குறித்து நான் யுத்தத்தில் அரக்கர்களைக் கொல்லுவேன் என்றார்.

ஸ்ரீ ராகவன் அந்தக் காட்டில் வசித்துக்கொண்டிருக்கும்போது, தான் விருப்பமுள்ள உருவை எடுக்கவல்ல, ஜகஸ்தானத்தில் வசித்துக்கொண்டிருக்கும் சூர்ப்பனகை என்னும் அரக்கியின் மூக்கை அறுத்து விட்டார்.

பிறகு, சூர்ப்பனகையின் சொல்லைக் கேட்டுச் சண்டைக்கு வந்த அரக்கர்களையும் அவர்களுக்குத் தலைவரான கரன், தூஷணன், த்ரிசிரஸ்ஸு என்பவர்களையும் அவர்களுடைய சேனையைஉம் ஸ்ரீ ராமன் யுத்தத்தில் கொன்றார்.

அவ்வனத்தில் வாசம் செய்கிற ஸ்ரீ ராமன் அந்த யுத்தத்தில் ஜ்னஸ்தானத்தில் இருக்கிற பதினாயிரம் அரக்கர்களையும் கொன்றார்.

பின்பு, இராவணன் கர தூஷணர்கள் இறந்த செய்தியை சூர்ப்பனகை அறிவிக்கக் கேட்டு, மிகுந்த கோபம் கொண்டு, ஸ்ரீ ராமனுக்குத் தீங்கு விளைவிக்க, மாரீசன் என்பவனைத் தனக்குத் துணையாக இருக்கும்படி வேண்டினான்.

அந்த மாரீசனோ " ஓ இராவணா ! அந்த ஸ்ரீ ராமனுடைய பராக்கிரமத்தை ஜுசுத்தான போரில் கேட்டாயன்றோ ! இனியும் நீ அந்தப் பெரு மிடுக்கோடு கூடியவரை எதிர்ப்பது உனக்கு உரியதல்ல எனச்சொல்லி, இராவணனைப் பலவிதமாகத் தடுத்தான்.

....தொடரும்.
..to be continued..
Readers desirous of doing NITHYA PAARAYANA
ARE ADVISED TO START FROM FIRST CHAPTER POSTED ON 28TH MARCH 2008

Tuesday, April 1, 2008

பரதன் ஸ்ரீ ராமனுடைய பாதுகைகளை சேவித்துக்கொண்டு,.....

Chapter 4.
In today’s parayana, are included
The Demise of King Dasaratha
Bharatha requesting Rama to return to Ayodya.
Sri Rama handing his Padukas with His advice.


ஸ்ரீ ராகவன் சித்ரகூடம் சேர்ந்த அதே தருணத்தில், தசரத மஹாராஜன் புத்திர சோகத்தின் மேலீட்டினால் பிள்ளையையே நினைத்து நினைத்து அழுது அழுது ஸ்வர்க்கத்தை அடைந்தார்.

தசரத மஹாராஜன் ஸ்வர்க்க லோகத்தை அடைந்தபின், அவனுக்கு மற்றொரு பிள்ளையாகிய பரதனை, வசிஷ்டர் முதலாகிய பெரியோர்கள் இராஜ்ய பட்டாபிஷேகம் செய்துகொள்ள நியமித்தாலும், பரதன் அரசை ஆள சாமர்த்தியவானாக இருந்தும், ராஜ்யத்தை விரும்பவில்லை.

அந்த பரதன், ஸ்ரீ ராகவனைக் கண்டு அவரைத் திரும்பவும் நாட்டுக்கு கொண்டுவருவதற்காக, நால்வகை சேனைகளுடன் ஸ்ரீ ராமன் இருக்கும் காட்டுக்கு சென்றார்.

பரதன் காட்டுக்குச் சென்று எல்லோரும் கொண்டாடும் வகையில் நல் ஒழுக்கமுடையவராய் மனதில் கலக்கமற்றவராய் சொன்ன சொல் தவறாதவராய் தன்னுடைய தமையன் ஸ்ரீ ராமனிடம் தன் விருப்பத்தைச்சொல்லி வேண்டினார்.

(அதாவது) ஓ ஸ்ரீ ராகவனே ! நீர் தசரத மஹாராஜனின் மூத்த பிள்ளையாகையால், நீரே இந்த ராஜ்யத்தை ஆள வேண்டுமென சொன்னார்.

ஆயினும், ஸ்ரீ ராகவன், அடியார்கள் இரந்ததை எல்லாம் கொடுக்கவல்ல சுபாவத்தை உடையவர் எனினும், அடியார்கள் இரப்பைக் கண்டு வேண்டுபவற்றைக் கொடுப்பவர் ஆயினும், கொடையில் பெரும் புகழை உடையவர் ஆயினும், தந்தை இட்ட கட்டளைதனை தவறக்கூடாதென நிச்சயித்து, பரதன் கோரிக்கைபடி, ராஜ்யத்தை
விரும்பவில்லை.

ஸ்ரீ ராகவன் இராஜ்யத்தில் தனக்குப் பதிலாக தன்னுடைய பாதுகைகளை வைத்துக்கொள்ளச் சொன்னார். சொன்ன பிறகும் தன்னை விட்டுப் போகாமல், அங்கேயே நிற்கிற பரதனுக்கு அனேக சமாதானங்களைச் சொல்லி அயோத்திக்கு அனுப்பிவிட்டார்.

அந்த பரதன் தன் கோரிக்கைதனை அடையாமல் ஸ்ரீ ராமனுடைய பாதுகைகளை தினந்தோறும் சேவித்துக்கொண்டு, ஸ்ரீராமன் திரும்பி வரும் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு அருகில் இருக்கிற நந்திகிராமத்தில் இருந்து ராஜ்ய பரிபாலனம் நடத்தி வந்தார்.

Note:
This is from Sankshepa Ramayana consisting of 100 Slokas as revealed by Sage Narada to Sage Valmiki . (Those desirous of going the Valmiki Ramayana in its entirety are advised to click at the link given at the right side)
This script is for daily parayana.
Those desirous of doing nithya parayana are humbly requested to start from the FIRST CHAPTER which has commenced on 28th March 2008.
Ramaya Rama bhadhraya Ramachandraya Vedhase
Raghunathaya nathaaya Sithaaya pathayE namaha.