ஸ்ரீ ராகவன் அனேக அஸ்வ மேதங்களையும் பஹு ஸுவர்ணமென்கிற யாகங்களையும் செய்து பதினாயிரம்
கோடி கோதானமும் செய்து ப்ராமணர்களுக்கு அளவற்ற த்ரவ்யத்தைக் கொடுத்து, பிறகு, பரபிரும்மஸ்வரூபமான தன்னுடைய லோகத்தை அடையப்போகிறார்.
ஸ்ரீ ராகவன் அனேகம் க்ஷத்திரியர்களுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து பரிபாலனம் செய்வார். நால்வகை வர்ணத்தில் உள்ளவர்களுக்கும் அவரவர்களுக்குரிய தர்மத்தில் நடத்திவைப்பார்.
பதினோராயிரம் வருஷங்கள் ஸ்ரீராமன் ஜனங்களைப் பரிபாலனம் செய்த பிறகு ஸ்ரீ வைகுண்ட மஹா நகரத்தை அடையப்போகிறார்.
இந்த ஸ்ங்க்ஷேப ராமாயணமாவது, வேதங்களைப் போல் தன்னை நியமத்துடன் ஓதுபவர்களுக்குப் புண்ணியத்தை விளைவிக்கும். பாபத்தைத் தொலைக்கும். பரிசுத்தியை உண்டாக்கும். இதை நியமத்துடன்
ஓதுகிறவன் ஸகல பாபங்களிலிருந்தும் விடுபடுவான்.
ஆயுஸ்ஸை வளர்க்கடவதாய், ஸ்ரீ ராமனுடைய முற்கதைகளை, உரைக்கிற இந்த பால ராமாயணத்தை நியமமாக
ஓதுகிறவன் புத்திர பொளத்திரர்களுடனும் பந்து மித்திரர்களுடனும் கூடி (இங்கிருக்கும் நாள் ஐஹிக போகங்களை
புஜித்துப் பின்பு ) ப்ரகிருதி ஸம்பந்தத்தை விட்டு வைகுந்தமா நகரம் சென்று அங்குள்ளவர்களால் பூஜிக்கப்படுவான்.
இந்த ஸங்க்ஷேப ராமாயணத்தை பாடம் செய்தானாகில் ஸகல் வேதார்த்தங்களையும் அறிய வல்லவனாவன்.
பெரிய ராஜ்யத்தை ஆள வல்ல சக்ரவர்த்தியாவான். வியாபாரத்தில் பெரிய லாபத்தையும் பெருந்தன்மை அடைந்து
புகழப்படுவான்.
சுபம்.
***********************************************************