Friday, April 4, 2008
" பார்த்தேன் ஸீதையை "
This Chapter of Sankshepa Ramayana reveals efforts of Hanuman in tracing Sita at Lanka, assuring Sita of the efforts of Sri Rama, burning Lanka, and getting back to Sri Rama to tell him of his successful mission.
வானர அதிபதியாகிய அந்த சுக்ரீவன் எல்லா வானரங்களையும் திரட்டிக் கொண்டு வந்து ஸீதா தேவியைத் தேடிக் கண்டுபிடிக்க எல்லாத் திசைகளுக்கும் அனுப்பினான்.
பிறகு, தெற்கு திசையை நோக்கிச் சென்ற ஹனுமான், ஸீதை இலங்கையில் இருப்பதி ஸம்பாதி சொல்லக் கேட்டு அங்கு போகக் கருதி, நூறு காதம் பரந்திருந்த கடலைத் தாண்டினார்.
அக்கரையில் இராவணன் பரிபாலித்து வருகிற இலங்காபுரியை அடைந்து அங்கு அசோக வனத்தில் எப்போதும் ஸ்ரீராமனையே தியானித்துக் கொண்டிருக்கிற ஸீதா தேவியைப் பார்த்தார்.
ஸீதா தேவிக்கு ராம நாம அங்கிதமான மோதிரத்தைக் கொடுத்து ஸ்ரீ ராகவன் ஸீதையை மீட்பதற்குச் செய்யப்படும் முயற்சியையும் தெரிவித்து சமாதானம் சொல்லி பிறகு இலங்கையின் கோட்டை வாசலை இடித்தார்.
அதைக்கேட்ட இராவணனால் ஏவி வந்த ஐந்து சேனாதிபதிகளையும் ஏழு மந்திரி குமாரர்களையும் சூரனான
அக்ஷணையும் கொன்றுவிட்டுப் பிறகு இந்திரஜித்து பிரயோகித்த பிரமாஸ்திரத்தினால் கட்டுண்டார்.
ஒரு முயற்சி இன்றியே பிரம தேவனுடைய வரத்தினால் தான் கட்டுண்ட அந்த அஸ்திரத்தின் கட்டு விடுபட்டுப் போனதை அறிந்த ஹனுமான், தன்னைக் கட்டியிழுக்கிற அரக்கர்களுடைய அபராதத்தைப் பொறுத்துக்கொண்டு பிறகு சீதை இருக்கும் இடம் தவிர மற்ற இலங்கையை முழுதும் கொளுத்திவிட்டு, ஸ்ரீராமனுக்கு ஸீதையைக்
கண்டதை ஆவலுடன் சொல்ல திரும்பி வந்தார்.
புத்திமானாகிய அந்த ஹனுமான் ஸ்ரீராமனிடம் வந்து அவரை வலம் வந்து " பார்த்தேன் ஸீதையை " என்று
சொல்லி அங்கு நடந்த கதையைச் சொன்னர்.
Labels:
HANUMAN,
kanden Sithaiyai,
raghava