Sankshepa Ramayanam. Ramayana in just 100 verses, as translated by Sri Ramanujacharya, Mada boosi, in 1923.
Today is the narration of the crossing of sea, killing of Ravana, Coronation of
Sri Vibhishana
பின்பு ஸ்ரீ ராமன் ஸுக்ரீவனுடன் கடற்கரையை அடைந்து அங்கு அணை செய்யக்கருதி வருணனை
வேண்டிக் கொள்ள அவன் வராததால், சினம் கொண்டு, அக்கடலை பாணங்களினால் வியாகுலம்
செய்துவிட்டார்.
பின்பு சமுத்திர ராஜன் தன் மனைவிகளுடன் ஸ்ரீ ராமனிடம் வந்தான். அந்த ஸமுத்ர ராஜனுடைய
உத்திரவின்படி நளன் என்பவனைக் கொண்டு கடலில் அணை கட்டினார்.
அவ்வணையின் வழியே இலங்கைக்குச் சென்று போர்க்களத்தில் இராவணனைக் கொன்று ஸீதையை
அடைந்து, இ ந் நாள் பிறர் அகத்தில் இருந்த இவளை எப்படி அங்கீகரிப்போம் என்று வெட்கித்து இருந்தார்.
அனந்தரம், எல்லோரும் ஸீதையை பதிவ்ரதை என்று நம்புவதற்காக ஜனக் கூட்டத்தின் நடுவில் ஸீதையைப்
பார்த்து நீ அக்னிப் பிரவேசம் பண்ணவேண்டும் என்று கடூரமாக மொழிந்தார். ஸீதாதேவி அச்சொல்லைப்
பொறுக்க மாட்டாதவளாய் அக்னியில் குதித்தாள்.
பிறகு " இவள் மஹா பதிவிரதை " என்று அக்னிதேவன் சொல்லக்கேட்டு, சீதாதேவியை எவ்விதத்திலும்
தோஷமற்ற வளாயறிந்து மிகவும் மகிழ்ச்சியுற்றார். அப்பொழுது தேவர்கள் இவரைக் கொண்டாடினார்கள்.
ஸ்ரீ ராகவன் செய்த இராவண வதம் ஆகிற அப்பெருந்தொழிலினால் தேவர்களும் ருஷிகளும் மற்றும் மூன்று
உலகங்களில் உள்ள பிராணிகளும் மரம் முதலானவைகளும் களித்தனர்.
விபீஷணனை ராக்ஷச ராஜனாக இலங்கையில் முடி சூட்டித் தான் கடற்கரையில் ' இராவணனை முடித்து
உனக்கு ராஜ்ஜியத்தைத் தருகிறேன் " என்று சொன்னபடி செய்து மனதில் உள்ள தாபம் தீர்ந்து இராகவன்
ப்ரீதி அடைந்தார்.