Sunday, April 6, 2008
Sri Rama Pattabishekam ஸ்ரீ ராம பட்டாபிஷேகம
ஸ்ரீ ராகவன், தேவர்களின் வரத்தினால் யுத்தத்தில் இறந்த வானரர்களையும் எழுப்பிக் கொண்டு அவர்களுடன் கூட புஷ்பக விமானத்தில் ஏறி அயோத்திக்குச் சென்றார்.
பரத்வாஜ மஹாமுனிவருடைய ஆச்ரமத்தை அடைந்து, அங்கு நின்றும் இராகவன், தான் வருவதாக பரதனிடம் அறிவிக்க அவரிடம் ஹனுமானை அனுப்பினார்.
ஸ்ரீ ராமன் முன் நடந்த கதைகளை ஸுக்ரீவனிடம் சொல்லிக்கொண்டு புஷ்பகத்தின் மேல் ஏறி பரதன் இருக்கிற நந்தி கிராமம் என்கிற ஊருக்குச் சென்றார்.
அந்த நந்திக் கிராமத்தில் ஸ்ரீ ராகவன் தம்பிகளுடன் கூட இன்னாள் தரித்த சடையை வாங்கி நீராடி ஸீதாதேவியுடன் சிம்மாசனத்தில் உட்கார்ந்து பட்டாபிஷேகம் செய்துகொண்டு இராஜ்யத்தை அடைந்தார்.
அக்காலத்தே ஜனங்கள் மயிர்க்கூச்சலுடன் மனம் சந்தோஷித்து, தாம் விரும்பிய விருப்பத்தை எல்லாம் அடைந்து மகிழ்ச்சியுடன் உடல் பருத்து அறம் பொருந்திய காரியங்களை நடத்திக் கொண்டு உடல் நோய் அற்றவர்களாய்,
ஏழ்மையற்றவராய், பயமுற்றவராய் ஆனார்கள்.
அக்காலத்தில் ஜனங்கள் தங்கள் புத்திர மரணத்தையோ பெண்கள் தமது கணவர் மரணத்தையோ பார்ப்பதில்லை. அவர்களிடத்தில் அவர்கள் இன்புற்றவறாக இருப்பர்.
அக்கினியினால், ஜலத்தினால், காற்றினால், ஜ்வரத்தினால், பசியினால், திருடர்களினால், எவ்வித
உபாதையும் உண்டாகாது.
பட்டணங்களில் செல்வமும் தேசங்களில் தானியமும் ஸம்பூரணமாக உண்டாகப் போகிறது. ஜனங்கள்
க்ருதயுகத்திற் போல், இந்த த்ரேதா யுகத்திலும் ஸந்தோஷத்தை அடைவார்கள்.