பரதன் அயோத்திக்குப் போனபின், பரதன் இவ்வளவு கேட்டுக்கொண்டபின்னும், தான் செய்த பிரதிக்ஞயை விடாது, ராஜ்ய சுகத்தில் மனம் சேராது இருக்கும் ஸ்ரீ ராகவன், இந்த சித்ர கூடத்தில் பட்டணத்தில் உள்ள ஜனங்கள் வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆகையினால், இங்கிருக்ககூடாது என ஆலோசித்து, பிதாவின் சொல்லைப் பரிபாலனம் செய்வதற்காக தண்டக வனத்திற்கு சென்றார்.
செந்தாமரைக்கண்ணனான ஸ்ரீ ராகவன் அப்பெரிய காட்டினுள் புகுந்து அங்கு உள்ள வினோதங்களைப் பார்த்துக் களித்தவண்ணம் சென்றார். போகும் வழியில் வந்த விராதன் இன்னும் அசுரனைக் கொன்று பிறகு சரபங்க முனியையும் ஸுதீக்ஷ்ணரையும் அகஸ்திய மஹாமுனிவரையும் அவரது தம்பியான ஸுதர்சனரையும் பார்த்தார்.
அகத்தியரின் நியமனத்தின்படி, அவர் குடிலில் வைத்திருந்த இந்த்ர தனுசையும்
கத்தியையும், அம்புகளோடு எப்போதும் கூடியுருக்கும் இரண்டு அம்பறாத்தூணிகளையும் அன்புடன் (ப்ரிதியுடன் ) எடுத்துக்கொண்டார்.
ஸ்ரீ ராகவன் அந்த சரபங்க ஆச்ரமத்தில் இருக்கும்போது, முனிவர்கள் அசுர ராக்ஷனை வதம் செய்யவேண்டுமென இவரிடம் பிரார்த்திப்பதற்கு அங்கு வந்தார்கள்.
ஸ்ரீ ராகவன் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி அரக்கர்களைக் கொல்லுவேன் எனச் சபதம் செய்தார்.
(அதாவது) அக்னியோடு ஒத்த தேஜஸ்ஸை உடையவராய், தண்டக ஆரண்யத்தில் வசிக்கின்ற ரிஷிகளைக் குறித்து நான் யுத்தத்தில் அரக்கர்களைக் கொல்லுவேன் என்றார்.
ஸ்ரீ ராகவன் அந்தக் காட்டில் வசித்துக்கொண்டிருக்கும்போது, தான் விருப்பமுள்ள உருவை எடுக்கவல்ல, ஜகஸ்தானத்தில் வசித்துக்கொண்டிருக்கும் சூர்ப்பனகை என்னும் அரக்கியின் மூக்கை அறுத்து விட்டார்.
பிறகு, சூர்ப்பனகையின் சொல்லைக் கேட்டுச் சண்டைக்கு வந்த அரக்கர்களையும் அவர்களுக்குத் தலைவரான கரன், தூஷணன், த்ரிசிரஸ்ஸு என்பவர்களையும் அவர்களுடைய சேனையைஉம் ஸ்ரீ ராமன் யுத்தத்தில் கொன்றார்.
அவ்வனத்தில் வாசம் செய்கிற ஸ்ரீ ராமன் அந்த யுத்தத்தில் ஜ்னஸ்தானத்தில் இருக்கிற பதினாயிரம் அரக்கர்களையும் கொன்றார்.
பின்பு, இராவணன் கர தூஷணர்கள் இறந்த செய்தியை சூர்ப்பனகை அறிவிக்கக் கேட்டு, மிகுந்த கோபம் கொண்டு, ஸ்ரீ ராமனுக்குத் தீங்கு விளைவிக்க, மாரீசன் என்பவனைத் தனக்குத் துணையாக இருக்கும்படி வேண்டினான்.
அந்த மாரீசனோ " ஓ இராவணா ! அந்த ஸ்ரீ ராமனுடைய பராக்கிரமத்தை ஜுசுத்தான போரில் கேட்டாயன்றோ ! இனியும் நீ அந்தப் பெரு மிடுக்கோடு கூடியவரை எதிர்ப்பது உனக்கு உரியதல்ல எனச்சொல்லி, இராவணனைப் பலவிதமாகத் தடுத்தான்.
....தொடரும்.
..to be continued..
Readers desirous of doing NITHYA PAARAYANA
ARE ADVISED TO START FROM FIRST CHAPTER POSTED ON 28TH MARCH 2008