Sankshepa Ramayanam..Vali hatham.. Coronation of Sugriva.
பலசாலியாகிய இராகவன் தான் பிறந்தது முதல் நடந்த கதைகளை ஸுக்ரீவனுக்குச் சொல்லி ஸீதாதேவியின்
சம்பந்தமாக நடந்தவற்றையும் எடுத்துச் சொன்னார்.
ஸுக்ரீவனும் இராமனுடைய நடவடிக்கைகளை எல்லாம் கேட்டு மகிழ்ச்சி அடைந்தவனாய், அக்னி முன்னால்
அவருடன் நட்பு பூண்டான்.
பிறகு, வானர அரசனான ஸுக்ரீவன், வாலிக்கும் தனக்கும் நேர்ந்த விரோதத்தின் வரலாற்றைக் கேட்ட ஸ்ரீராமனுக்கு விசுவாசம் கொண்டு, கண்ணீர் விட்டுக் கொண்டே, நடந்த கதைகள் எல்லாம் சொன்னான்.
அப்பொழுது ஸ்ரீ ராகவன் தான் வாலியைக் கொல்வதாகச் சபதம் செய்தார். அவருக்கு ஸுக்ரீவன் வாலியுடைய பலத்தை எல்லாம் அறிவித்தான்.
இராகவனுடைய பலத்தை அறிவதற்காக, ஸுக்ரீவன், அங்கு பெருமலை போல் விழுந்திருந்த துந்துபியின்
வலிய சரீரத்தைக் காட்டி, " இதை வாலி தன் காலின் பெருவிரலினால் தூக்கி எறிவன் " என்றான்.
மஹா பலசாலியான இராகவன் அந்த எலும்பைப் பார்த்து " இது எவ்வளவு ?" என்று அலக்ஷ்யமாகக்
காலின் பெருவிரலினால் எடுத்து பத்து யோஜனைக்கு அப்புரம் போய் விழும்படி எறிந்தார்.
(வெகு நாட்களாக உலர்ந்து கிடக்கிற அவ்வரக்கனுடைய உடலைத் தூக்கி எறிந்த மாத்திரத்தில் இவர்
வாலியைக் கொல்ல வல்லவரோ என்று ஸுக்ரீவன் மனதில் சந்தேகம் இன்னும் இருப்பதை அறிந்து ) இன்னும்
அவனுக்கு நம்பிக்கை உண்டக்குவதற்காக ஒரு பெரிய அம்பினால் ஏழு மரா மரங்களை எய்தார். அந்த அம்பு
அந்த மரங்களையும் அருகில் இருந்த மலையையும் பிளந்து பூமியுள்ளே சென்று கீழ் உலகங்களில் ஆறாவது
ஆகிய ரஸாதலம் என்னும் உலகத்தையும் பிளந்துவிட்டது.
அதைக்கண்ட ஸுக்ரீவன் இவர் வாலியைக் கொல்லவல்ல பலசாலிதான் என்று நம்பிக் களிப்புற்றவனாய்,
அப்பொழுது, இராகவனைக் கூட்டிக் கொண்டு வாலியைக் கொல்லுவதற்காக, மலைக்குள் இருக்கிற
கிஷ்கிந்தைக்குப் போனான்.
பிரகு ஸுக்ரீவன் சந்தோஷத்தினால் புகழ் பெற்று, " இனி நாம் வானர அதிபதி ஆவோம் " என்று நிச்சயித்து பெரும் கூச்சலிட்டான்.
அக்கூச்சலைக் கேட்டு வாலி கிஷ்கிந்தையிலிருந்து வெளிக் கிளம்பினான்.
இப்பொழுது நீர் யுத்தத்திற்குப் போவது உசிதம் அன்று சொன்ன தன் மனைவியான தாரையை நல்வார்த்தைகள் சொல்லிச் சமாதானப்படுத்தித் தான் வந்து ஸுக்ரீவனுடன் யுத்தம் செய்தான்.
அப்போர்க்களத்தில் இராகவன் ஓர் அம்பினால் வாலியை முடித்துவிட்டார்.
ஸுக்ரீவன் கேட்டுக் கொண்டபடியே ஸ்ரீ ராகவன் வாலியை யுத்தத்தில் முடித்து, அந்த ராஜ்யத்தைக்
கொடுத்து, ஸுக்ரீவனுக்கு முடி சூட்டினார்.
Please read from the first chapter which commenced from 28th March 2008.