परथास्मात भावोंयो अव्यक्तो अव्यक्तात सनातन;
(இதற்கு முந்தைய ஸ்லோகம் இங்கே இருக்கிறது )
இந்த ஸ்லோகத்தில் பொருளை மனதில் வங்கி கொள்ள முயற்சி செய்துகொண்டே
இந்த அற்புதமான பாடலை கேட்போம். விரிவான பொருள் பின்னே வருகிறது.
Anup Jalota - Itna to karna swamy
அனூப் ஜலோடா பஜன் கருத்து. : பிரார்த்தனை. அந்த அழியாத பரம் பொருள் எனது அந்திம காலத்தில் என் நினைவுக்கு வர வேண்டும்.
எல்லா பூதங்கள் என்றால் எவை? அவயகதம் அழிவதில்லை என்றால் என்ன பொருள்?
பிரும்மாவில் துவங்கி, பிரும்மாவின் பகல் இரவுகளில் உண்டாகி, மறைகின்ற, தத்தம் மனம் , புலன்கள், உடல்கள், போகப்பொருட்கள், இருக்கும் இடங்களோடு கூட எத்தனை சராசர உயிரனங்கள் உண்டோ, அவை எல்லாமே இந்த எல்லா பூதங்கள் ( உயிர் இனங்கள் )என்று பொருள். மகா பிரளயத்தின் பொது, ஸ்தூல, சூக்ஷ்ம உடல்களைக் கூட, இழந்து அவ்யாக்ருதமான மாயை என்ற பெயர் கொண்ட மூல பிரக்ரிதியில் லயமடைகின்றன. இதுவே அவற்றின் அழிவு எனப்படும்.
அப்போது கூட, அந்த பிரக்ரிதியை ஆல்பவனான சனாதனன் அவிகதான் பரம தைவீக புருஷனான பகவான் பிரக்ரிதியுடன் அந்த எல்லா ஜீவன்களையும் தன்னிடத்தே லயம் அடையச் செய்து, தாம் மட்டும் தம் மகிமையிலே நிலை பெற்றவராய் விளங்கு கிறார்.
எல்லா பூதங்களும் அழிந்தாலும் அவர் அழிவதில்லை.