அவ்யக்தோக்ஷர இத்யுக்தஸ்தமாஹு: பரமாம் கதிம்
யம் ப்ராப்ய ந நிவர்தன் தே த த்தாம பரமம் மம
தோன்றா நிலை ( அவ்யக்தம் ) , அழிவில்லாதது ( அக்ஷரம் ) எனச்சொல்லப்பட்ட அதே அக்ஷரம் என்று பெயர் உள்ள நிலைதனை மிக உயர்ந்த கதி என்று கூறுவர். அப்படி, எந்த ஸனாதனமான அவ்யக்த நிலையை அடைந்த பிறகு மனிதர்கள் திரும்புவதில்லையோ அதுவே என்னுடைய பரமபதம்.
இதன் உட்பொருளைப் புரிந்து கொள்ளுமுன் அன்னமாச்சார்யாவின் கீர்த்தனை ஒன்றை piriya sisters பாடிட. பிரும்மனின் அவ்யக்த நிலையினை அனுபவிப்போம்.
பரம தாம் என்றால் என்ன?
பகவானின் நித்ய வாசஸ்தலம் பரம தாமம். அதுதான் ஸத் சித் ஆனந்தமயமான, தெய்வீகமான உணர்வு மயமான பகவானுடைய ஸ்வரூபம். பகவானைத் தவிர வேறன்று. பகவானுடைய நித்ய வாஸஸ்தலத்தை அடைவது, பகவானாகவே ஆகிவிடுவது, பகவத் ஸ்வருபத்தை அடைவது என்ற சொற்களில் கருத்து வேற்றுமை இல்லை. அதுபோல, அக்ஷரத்தை அடைவது, பரம கதியை அடைவது, பகவானை அடைவது என்ற சொற்களின் கருத்துக்களிலும் வேற்றுமை இல்லை. எதை அடைந்துவிட்டால், மனிதன் திரும்பி வரமாட்டானோ, அதுவே என் பரம தாமம். அதுவே அவ்யக்தம் அதுவே அக்ஷரம், அதுவே பரமகதி என்று பகவான் கூறுகிறார்.
ஸாதனை வேற்றுமையால், ஸாதகனின் நோக்கத்தில் பயனில் வேறுபாடு போலத் தோன்றுகிறது. அதையே வெவ்வேறு பெயர்களிலே கூறினார். எல்லாம் ஒன்று தான்.