கீதையின் எட்டாவது அத்தியாயம் : பதினொன்றாவது ஸ்லோகம்.
யத க்ஷரம் வேத விதோ வதந்தி விசந்தி ய்த் யதயோ விதராகா:
யதிச்சந்தோ ம்ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பதம் சங்க்ரஹேண ப்ரவக்ஷ்யே : 8: 11
यदक्षरम वेदवेदो वदन्ति विसंत्ति यध्यतयो वीतरागा:
यदिच्च्चंतो ब्रह्मचर्य चरन्ति तत्ते पदम् संग्रहेण प्रवक्ष्ये வேதம் எல்லாவற்றையும் கற்று உணர்ந்தவர்கள் எந்த ஸத், சித், ஆனந்தமயமான பரம பதத்தைஅழிவில்லாதவன் எனச் சொல்கிறார்களோ, பற்று அற்ற முயற்சியுடைய ஸன்யாசிகள் மஹாபுருஷர்கள் எவற்றினுள் புகுகிறார்களொ, எந்த பரமபத்தை நேசிக்கும் ப்ரம்மசாரிகள், ப்ரம்மசரிய நெறிதனைக் கடைப்பிடிப்போமெனச் சொல்கிறார்களோ, அந்த பரம பதத்தைப் பற்றி நான் உனக்குச் சுருக்கமாக கூறுவேன்.
வேதவித என்ற சொல் யாரைக்குறிக்கும் ?
எதை அறிவதால், பிரும்மத்தைப் பற்றிய அறிவு கிடைக்குமோ, அதையே வேதம் என்பர். நான்கு ஸம்ஹிதைகள், ஐத்ரேயம் முதலிய ப்ராம்மண வடிவிலும் இது கிடைக்கும். பரப்ரும்மமான பரமாத்மா தான் எல்லா வேதங்களுக்கும் ப்ராணன். அவனே ஆதாரம். கருப்பொருள் அந்த தாத்பரியத்தை உணர்ந்து, அதை அடைவதற்கு ஓயாது ஸாதனை புரிந்து முடிவில் அதை அடைந்துவிட்டவர்களான ஞானிகளையை, மஹா புருஷர்களையே 'வேதவித' என்ற சொல் குறிக்கிறது. வேதவித் என்றால் வேதங்களின் உண்மையை அறிந்தவர் என்பது பொருள்.
" எதை அழிவில்லாதது" என வேதங்களை அறிந்தவர் கூறுவர் ?
எதை என்பது ஸத் சித் ஆனந்தமயமான பரப்ரும்மத்தைக்குறிக்கும். வேதம் அறிந்த ஞானிகள், மஹாத்மாக்கள், ' இது அக்ஷரமானது' என்று கூறுகிறார். அதாவது எந்த நிலையிலும், எப்பொழுதும், எவ்விதத்திலும் அழிவதில்லை. இது என்றும் அழியாத, ஒரே ஸ்வருபமும் ரஸமும் உடையது. இந்த அக்ஷரம் அவ்யக்தம்.
எந்தப் பரம பதத்தை விரும்புவர்கள் ப்ரம்மசர்ய நெறியை கடைப்பிடிக்கிறார்களோ என்று ஏன் சொல்லுகிறார்?
பிரும்மசர்யத்தின் முக்கிய குறிக்கோள் விந்துவைக் காப்பதும் அதைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்வதும். அதனால் மட்டுமே கர்ம வாஸனைகள் அழிந்து ப்ரம்மத்தை அடைவதில் உதவி கிடைக்கும். மேல் நோக்குடைய விந்து உடையவர்களான ( ஊர்த்வரேதஸ்கள் ) திடமான் பிரும்மசாரிகளின் வீர்யம் எந்த நிலையிலும் கீழ் நோக்கிச் செல்வதில்லை. ஆகவே அவர்கள் ப்ரம்மத்தின் மார்க்கத்தில் எளிதாக முன்னேற இயலும். இதற்குக் கீழ் நிலையில் உள்ளவரோ, கீழ் நோக்கான விந்து உடையவர். ஆயினும், மனம், சொல், உடல் இவற்றில் புணர்ச்சியை அறவே ஒழித்து அதைக் காப்பாற்றுவர். இதுவும் ஒருவிதத்தில் ப்ரும்மசர்யமே.
கருட புராணம் கூறுகிறது.
கர்மணா மனஸா வாசா ஸர்வாவஸ்தாஸு ஸர்வதா
ஸர்வத்ர ஸமது நத்யாகே ப்ரஹ்மசர்யம் ப்ரசக்ஷதே :
(பூர்வ கண்டம் அத்தியாயம் 238/6)
ஆகவே, எல்லா இடங்களிலுமே, எல்லா நிலைகளிலும், ஆச்ரமங்களிலும், எப்பொழுதும், மனம், சொல், செயல், இவற்றில் புணர்ச்சியைத் த்யாகம் செய்வதையே ப்ரும்மசர்யம் எனச் சொல்க.
ஏன் இதை சுருக்கமாகச் சொல்லப்போகிறேன் என்று சொல்கிறார் என்பதை அடுத்த இரண்டு ஸ்லோகங்கள் சொல்கின்றன.
( காத்திருப்போம். )