பகவத் கீதையின் எட்டாவது அத்தியாயம் 12 13 ச்லோகங்ககளை படிப்பதற்கு முன் ப்ரும்மம் ஒகடே எனும் பக்த த்யாகராஜரின் பாடலைக் கேட்கவும்.
Brahmam Okate
ஸர்வத்வாராணி ஸம்யம்ய ம நோ ஹ்ருதி ந்ருத்ய
மூர்த் ந்யாத ஈயாத்ம ந; ப்ராண்மாஸ்திதோ யோக தாரணாம்.
ஓம் இத்யேகாக்ஷரம் ப்ரஹ்மவ்யாஹரத்மாம்னுஸ்மரன்
வ: ப்ரயாதி த்யஜந்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்.
सर्व द्वाराणि संयम्य मनो हृदि निरुध्य च
मूध्न्यार्धायात्मना: प्राणमास्थितो योग धारणाम
ॐ इत्याकेक्षाराम ब्रह्मा व्याहरंमामानुस्मरण
या; प्रयाति त्याजन्देहम स याति परमं गतिम्.
ஐம்புலன்களின் வாசற்கதவுகளை அடைத்து வைத்து, (தேவையில்லாத) வெளிவிஷயங்கள் உள்ளே வராது தடுத்து, மனதையும் இதயத்தில் நிலையாக்கச்செய்து, பின், அவ்விதம் வசத்தில் உள்ள மனதில் ப்ராணனை உச்சந்தலையில் நிலைபெறச்செய்து, பரமாத்மா ஸம்ந்தமான, யோக தாரணை ஒன்றிலேயே நிலைத்து நின்று, எவனொருவன் " ஓம் " என்னும் ஒரே எழுத்தான ப்ரம்ஹத்தை, என்னைச் சிந்தனை செய்துகொண்டு இவ்வுடலை நீத்துச் செல்கின்றானோ, அவன் உயர்ந்த கதியை அடைகிறான்.
ஐம்புலன்கள், தசத்வாரம் எல்லாம் சொல்லுகிறார்கள்.
இந்த வாயில்களை அடைத்து வைப்பது எங்ஙனம்?
கண்,காது முதலியவை ஐந்து அறிவுப்புலன்கள்.
பார்வை, ஸ்ரவணம், வாக்கு முதலியவை செயற்புலன்கள்.
மொத்தம் பத்து. இவையே வாயில்கள்.
இவை வழியே விஷயங்கள் உணரப்படுகின்றன.வெளிப்படுத்தப்படுகின்றன.
இவற்றினைச் சிற்றின்பப்பொருள்களிடத்திலிருந்து அகற்றி, மேலும் புலன்களின் தன்மை, செயற்தன்மை இவற்றினை அவ்விடங்களிலேயே நிறுத்தி, புலன்களின் போக்கை உள்முகமாகச் செலுத்தவேண்டும். இதுவே புலன்களை அடக்குவதாகும். யோக சாஸ்திரத்தில் இதுவே ப்ரத்யாஹாரம் எனச்சொல்லப்படுவது.
இதயம் எங்கு இருக்கிறது?
தொப்புள், தொண்டை இவ்விரண்டிற்கும் நடுவே. சஹஸ்ராரே பத்மம் என்பார்களே ! இதயக்கமலம் அது. இங்கு மனம், ப்ராணன் உள்ளது. இங்கும், அங்கும், எங்கும் திரியும் மனதை சங்கல்ப, விகல்பங்களிலிருந்து விடுவித்து, மனதில் உள்ளடக்கி, இதயத்தில் மனதைத் திடமென வைக்கவேண்டும்.
ப்ராணனை உச்சந்தலையில் நிலைபெறச்செய்வதென்றால் ?
மனதை இதயத்தில் நிலை நிறுத்திய பின், ப்ராணனை மேல் நோக்கு நாடியின் மூலம், இதயத்தின் மேலாக எழுப்பி, உச்சந்தலையில் நிலைபெறச்செய்யவேண்டும்.
ஓம் காரத்தை ஒரே எழுத்துடையது என்று ஏன்?
10/25 ஸ்லோகத்திலும் ஓம்காரம் ஒரே எழுத்துடையது ( கிராமஸம்யேகமக்ஷரம்) என்று சொல்லப்படுகிறது. அது இரண்டு அற்ற பரப்ரும்மத்தின் பெயர் அல்லவா. பெயரும் பெயருக்கு உடையவனும் வேறாக இல்லை. அந்த ஓம்காரத்தையே ஓர் அக்ஷரம், ப்ரஹ்மம் எனச்சொல்கிறோம்.
ஏதத் த்யேவாக்ஷரம் ப்ரஹ்ம ஏதத் த்யேவாக்ஷரம் பரம்
ஏதத் த்யேவாச்கஹ்ரம் ஜ்ஞாத்வா யோ யதிச்ச தி தஸ்ய தத்
என கடோபனிஷத் கூறுகிறது.(1:2:16)
ஏதத் த்யேவாச்கஹ்ரம் ஜ்ஞாத்வா யோ யதிச்ச தி தஸ்ய தத்
என கடோபனிஷத் கூறுகிறது.(1:2:16)