Wednesday, December 22, 2010
பகவத் கீதையின் எட்டாவது அத்தியாயம் பத்தாவது ஸ்லோகம்
ப்ரயாணகாலே மனஸாசலே ந பக்த்யா யுக்தோ யோக பலே ந சைவ
ப்ருவோர்மத்யே ப்ராணமாவேச்ய ஸ தம் பரம் புருஷமுபைதி திவ்யம்
प्रयाण काले मनसाचलेन भक्त्या युक्तो योगबलेन चैव
भ्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्यक स तम परम पुरुषमुपैति दिव्यं
பக்தியுடன் கூடிய அந்த மனிதன் இறக்கும் நேரத்திலும் யோகத்தின் வலிமையால், புருவங்களின் மத்தியில் ப்ராணனை நன்றாக நிலை நிறுத்தி மேலும் அசையாத மனதால் நினைத்துக்கொண்டு அந்த திவ்ய ரூபத்தோடு கூடிய மேலான புருஷணான பரமாத்மாவையே அடைகிறான்.
' பக்த்யா யுக்த" என்றால் ?
பக்வானிடம் வைக்கும் அன்பே பக்தி. யாரிடம் அன்பு இருக்கிறதோ, அவரிடம்
பக்தியும் உண்டாகும். இங்கு நிர்குண நிராகார ப்ரம்மமே நான் எனச் செய்யப்படும் அஹம்க்ரஹ உபாசனை. இங்கு ஞானயோகம் பற்றிய பேச்சு இல்லை.
யோக பலம் ?
அப்யாச யோகம் இங்கு சொல்லப்படும் யோகம். ப்ராணனை அடக்குவதுதான் யோக பலம். புருவங்களின் மத்தியில் ஆக்ஞா சக்ரம் உள்ளது. இரு இதழ்களை உடையது. இந்த சக்கரத்தின் அருகில் ஏழு கோசங்கள்: இந்து, போதினி, நாதம், அர்த்த சந்திரிகை, மஹா நாதம், கலை, உன்மனீ என்பன. ப்ராணன்களின் வழியாக உன்மணி கோசத்தை அடைந்த ஜீவன் பரமாத்மாவை அடைவான். அவன் பின் பிறப்பெடுப்பது தடுக்கப்பட்டு விடுகிறது.
அசையாத மனம் என்றால் என்ன ?
நா ந்ய காமி என்ற சொல்லின் பொருள் தான் அசைவற்ற மனம். த்யானிக்கும்
பொருளில் ஊன்றி விடும்பொழுது மனம் அதை விட்டு நகருவதில்லை. அசைவதில்லை.
Labels:
Geetha 8.10