Geetha Chapter 8 Sloka 16:
ஆப்ரஹ்மபுவனால்லோகா: நுயராவர்தினோஅர்ஜுன
மாம் உபேத்ய து கௌந்தேய புனர்ஜன்ம ச வித்யதே
அர்ஜூன் !! ப்ரும்ம லோகம் வரை உள்ள எல்லா உலகங்களும் அழிந்து பின்
உண்டாகும் தன்மைஉடையன . அதாவதி இந்த லோகங்களை அடைந்தாலும்
திரும்பவும் இவ்வுலகில் பிறக்க நேரிடும். ஆனால், குந்தியின் புதல்வனே !!
என்னை அடைந்த பின்னே மறுபிறவி கிடையாது. ஏனென்றால், நானோ காலத்தைக்கடந்தவன். இந்த ப்ரம்ம லோகம் முதலியன எல்லாமே காலவரையறைக்கு உட்பட்டன்.அழிவன.
ப்ரும்ம லோகம் என்பது எது?
ப்ரும்மன் படைப்பின் துவக்கத்தில் பகவானுடைய உந்தித்தாமரையிலிருந்து பிறந்து எல்லா படைப்புகளையுமே செய்தார். அவரையே ப்ரஜாபதி, ஹிரண்யகர்பர், ஸூத்ராத்மா என்று கூறுவர். அவரை இந்த அத்தியாயத்தில் ' அதி தைவம் ' என்று கூறினார். அவர் வசிக்கும் லோகம் பிரும்ம லோகம் . வெவ்வேறு லோக பாலர்களின் வசிக்கும் இடங்களான, பூ, புவ:, ஸ்வ:, முதலிய
உலகங்களையும் குறிக்கிறது. ப்ரம்ம லோகத்தை மேல் எல்லையாகக் கொண்டு அதற்க்குக்கீழ் உள்ள எல்லா உலகங்களையும் சேர்த்து ' அதுவரை' என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.