"மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி நான் வருத்தப்படுத்த வேண்டாம் என்னை என திருவடி சரணம் என்று நான் நம்பி வந்தேன்....
எடுத்த ஜன்மம் கணக்கு எடுக்க தொலையாது."(வித்யா கல்யாணராமன் பாடுகிறார். _
கோபாலக்ருஷ்ண பாரதி பாட்டை கேட்டுக்கொண்டே, இன்று கீதை என்ன சொல்கிறது என்று படிப்போம்.
माम उपेत्य पुनर्जन्म दुखालायामासास्वतम
மாம் உபேத்ய புனர்ஜன்ம துக்காலயமசாச்வதம்
நாப்னுவந்தி மஹாத்மன: சம்சித்திம் பரமாம் கதா:
உயர்ந்த சித்தியை அடைந்த மஹாத்மாக்கள் என்னை அடைந்த பின்னே துன்பங்களுக்கு உறைவிடமானதும் நிலை அற்றதுமான மறு பிறவி எடுப்பதில்லை.
மறு பிறவி என்றால் என்ன?
ஜீவன் பரமாத்மாவை அடையாத வரை கர்மத்து ஆட்பட்டு ஒரு பிறவி நீங்கியபின் மறு பிறவி எடுப்பது தவிர்க்க இயலாதது. ஒருவன் மரணம் அடைந்துவிடின், பிறகு, தனது கர்மங்களுக்கு உட்பட்டு, தேவர்கள், மனிதர்கள், பசு பக்ஷி ஆகிய ஏதோ ஒரு பிறவி எடுப்பதே மறு பிறவி ஆகும். அது எந்தப்பிறவியாக இருந்தாலும் துக்கமயமானது தான்.
எந்தப்பிறவியும் அழியக்கூடியது. அழியக்கூடியது என்பதற்கு அடையாளம் மரணம். ஒருவனது வாழ்வில் எந்தெந்த பொருடகளுடன் சம்பந்தம் ஏற்படுகிறதோ அவை அனைத்துமே அவனுடன் என்றென்றும் கூடி இருப்பது இல்லை. எது சுகம் அளிக்கிறது என்று நினைக்கிறானோ அதுவே ஒரு கால கட்டத்தில் துக்கத்திற்கு காரணம் ஆகிறது. இருக்கும் பொருட்கள் குறைந்து போகும் அல்லது அழியும் என்ற எண்ணம் கூட துக்கத்திற்கு காரணமாகிறது. எந்தப்பிறவியில் எந்தவிதமான போகம், சுகம் கிடைத்தாலும் அது நீடித்து இருப்பதில்லை. அதை அசாஸ்வதம் ( நிலையற்றது) எனவே சொல்கிறோம்.
ஆகவே தான் மறு பிறவியையும் துக்கத்தின் தாயகம் என்று கூறுகிறர்.