सहस्र युग पर्यंत ब्रह्मणों विदु;
रात्रि युगासहस्र्रंताम ते अहोरात्रविदो जना:
பிரம்மாவுக்கு எது ஒரு பகலோ அது ஓராயிரம் சதுர் யுகங்களைக் கொண்டது. இரவும் ஓராயிரம் சதுர்யுகன்களைக் கொண்டது. எந்த மனிதர்கள் இதனை தத்வ ரீதியாக அறிவாரோ அவர்கள் பகல் இரவு என்ற காலத்தின் தத்தவத்தை அறிந்தவர்கள்.
கலியுகம் 432000 ஆண்டுகள்.
த்வாபரயுகம் 864000 ஆண்டுகள்.
திரேதாயுகம் 12,96,000 ஆண்டுகள்.
சத்தியயுகம் 17,28,000 ஆண்டுகள்.
ஆக மொத்தம் 43,20,000 ஆண்டுகள்.
இது ஒரு தேவ யுகம். இவ்விதம் ஆயிரம் தேவ யுகங்கள் அதாவது நமது மனித ஆண்டுகளாக நானூற்று முப்பத்திரண்டு கோடி ஆண்டுகள் பிரம்மாவுக்கு ஒரு பகல் அது போல் ஒரு இரவும் ஆகும்.
பிரம்மாவின் பகல் இரவு அளவுகளைக்கூறி, அப்பகலின் துவக்கத்தில் உற்பத்தியும், இரவில் பிரளயமும் உண்டாகும் எனசொல்கிறார்.