என்ன இவ்வளவு பெரிய படம் போட்டுட்டேன்னு பார்க்குறீங்களா! இந்த படத்துக்கோ, நீளம் - அகலம் என்ற அளவுகள் உண்டு. அலகிலா ஜோதியனுக்கு அது போன்ற எல்லைகளில்லை. இந்தப் படத்தைக் காட்டுவதற்குப் போதுமானது, இரண்டு பரிணாமங்கள். ஆனால் எத்தனை பரிணாமங்கள் இருப்பினும் அத்தனையானாலும் முதுமாய் விளக்க இயலாதது பரம சொருபம். அதுவென்றே, அதுவொன்றே என அடங்காதவரை.
Courtesy: ஜீவா வெங்கடராமன்.
அனன்ய சேதா: சததம யோ மாம் சமரதி நித்யச;
தச்யாஹம் சுலபா: பார்த்த நித்ய யுக்தச்ய யோகின:
அர்ஜுன !! எவனொருவன் வேறு சிந்தனை எதுவுமே நீங்கி எப்பொழுதும் புருஷோத்தமன் ஆன என்னையே இடைவிடாமல்
நினைக்கிறானோ, அந்த என்னிடம் ஒன்றிவிட்ட யோகிக்கு நான் எளிதில் அடையக்கூடியவன்.
சத்தம் நித்தியச: என்று இரண்டு சொற்களை ஏன் சொல்லவேண்டும் ?
சத்தம் என்றாள் ஒரு கண நேரம் கூட இடைவெளி இல்லாது த்யானம் செய்வது.
நித்தியச: என்றாள் இப்படி தொடர்ந்து நினைப்பது உயிர் உள்ளவரை.
பகவானை இடைவிடாது சிந்திப்பதால், பகவானை எளிதாக அடைய முடியும் என்று சொன்னார். அப்படி சிந்தனை செய்பவனுக்கு மறு பிறவி கிடையாது என அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறார்.
காத்திருப்போம்.