भूतग्रामः स एवायं भूत्वा भूत्वा प्रलीयते
रात्र्यागमे अवाशा पार्थ प्रभवत्यहरागमे
அர்ஜுனா ! இந்த உயிர் இனங்களின் கூட்டமானது மீண்டும் மீண்டும் பிறந்து தன வசமில்லாது பிரக்ரிதியின் வசப்பட்டு இரவின் துவக்கக் காலத்தில் மறைகிறது. பகலின் தொடக்கத்தில் மறுபடியும் உண்டாகின்றன.
இயல்புக்கு வசப்பட்ட எல்லா பிராணிகளும் திரும்பத் திரும்ப உண்டாகின்றனவே, அவற்றைத் தத்தம் குணங்கள், வினைகளுக்கு ஏற்றவாறு சரியான முறையில் உண்டாகச்செய்வது யார்? ப்ரக்ருதியா பரமாத்மாவா, ப்ரம்மாவா அல்லது வேறு யாராவதா?
இந்த ஸ்லோகத்தில் ப்ரம்மாவின் பகல், இரவு பற்றிய பேச்சு மட்டுமே வருகிறது. ஆகையால், ப்ரம்மாவே ப்ராணிகளுடைய குணங்கள், வினைகளுக்கு ஏற்றவாறு, உடல்களோடு பொருத்தத்தை கருத்தில் கொண்டு, அவற்றை அளித்து பிறக்க வைக்கிறார் என்று தெரிந்து
கொள்க.
இருப்பினும், பிரும்மாவும் அழிகிறார். அப்பொழுது பரமாத்மாவே இன்னொரு பிரும்மனையும்
சேர்த்து படைத்து, பின் எல்லாவற்றையும் பிரும்மா மூலம் படைக்கிறார்.
பிரும்மாவின் இரவில் துவக்கத்தில் அவ்யக்தத்தில் எல்லா ப்ராணிகளும் லயமடைகின்றன
பகல் துவங்கிய உடன் எல்லா ப்ராணிகளும் உயிர்பெறுகின்றன, இந்த அவ்யக்தம் தான்
மிகச் சிறந்ததா அல்லது அதற்கும் மேலே வேறொன்று இருக்கிறதா ?
அடுத்த பதிவில் காண்போம்.