तस्मात् सर्वेषु कालेषु माम अनुस्मार युथ्य च
म्य्यार्पित मनोर्बुद्धि माम एव एश्यासी नसम्सयःமய்யார்பிதமனோர்புத்திர் மாம் ஏவ ஏஷ்யஸி அஸம்சய:
ஆதலால், அர்ஜுனனே ! நீ எல்லா நேரங்களிலுமே இடைவிடாது என்னையே
தொடர்ந்து எண்ணுவாய். போர் புரிவாய் . இவ்வாறு என்னிடத்தே அர்ப்பணம் செய்யப்பட்ட மன்ம், புத்தியுடன் கூடியவனாக, நீ ஐயம் ஏதுமின்றி என்னையே அடைவாய் .
தஸ்மாத் என்ற சொல்லுக்கு விசேடமான் பொருள் இருக்கிறதா ?
5, 6 ஸ்லோகங்களில் குறிப்பிட்ட பொருளுடன் இந்த ஸ்லோகத்தின் தொடர்பு
இருக்கிறது. அதனாலேயே இந்த ஸ்லோகத்தை பகவான் ' தஸ்மாத் '
எனத்துவங்குகிறார்.
இந்த உடல் ஒரு நொடிப்பொழுதில் அழியக்கூடியது. அழிவது. ஆயுளை நம்புவதற்கில்லை. ஆகவே, எது அதிகமாகச்சிந்திக்கப்படுகிறதோ அதுவே அந்திம காலத்தில், இறுதி நொடிகளில் நினைவுக்கு வரும். அதனால் பகவானை இடைவிடாது சிந்திக்காமல், போகப் பொருட்களைச் சிந்தித்துக்கொண்டே இருந்து உடலை விட நேர்ந்தால், பகவானை அடையவதற்காக ஏற்பட்ட, இம்மனிதப்பிறவி வீணே சென்றுவிடும். ஆகவே தொடர்ந்து, இடைவிடாது பகவானை சிந்திக்கவேண்டும்.
" எல்லாக்காலங்களிலும் என்னையே தொடர்ந்து நினைத்துக்கொண்டிரு "
எனச்சொல்லி விட்டு, " போரும் புரி " என்று சொன்னால் எப்படி ?
ஒவ்வொருவருக்கும் ஒரு தர்மம், ஸ்வதர்மம் உண்டு. அர்ஜுனன் அரச குலத்தோன்.க்ஷத்திரியன். அவரது ஸ்வதர்மம் ராஜ்யத்தை ரக்ஷிப்பது. ராஜ்ய பரிபாலனம். இதை விட்டு வெளியே செல்வது உகந்தது ஆகுமோ ! ஒவ்வொருமே தனது ஸ்வதர்மத்தை முதற்கண் கடைப்பிடிக்கவேண்டும் என்பது பகவான் ஆணை.
ஸ்வதர்மத்தைச் செய்யும்பொழுது நிஷ்காம்யமாக, அதாவது பலனை தனது நலனோடு ஒப்பிடாது, செய்யவேண்டும்.ஸ்வதர்மம் செய்யும்பொழுது கர்மாக்களைத் தவறாது செய்யவேண்டும். பகவானை தொடர்ந்து சிந்திப்பதும் ஸ்வதர்மத்தில் நிர்ணயிக்கப்பட்ட கர்மாக்களைச் செய்வது ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதில்லை. ஆகவே,கடமைகளை நிறைவேற்றவேண்டும் என்பதில் இன்னொரு கருத்து இருக்க இயலாது.
பகவானையும் தொடர்ந்து சிந்திக்கவேண்டும். கர்மாக்களையும் செய்யவேண்டும்.
ஒரே நேரத்தில் எப்படி சாத்தியம் ?
இயலும். முடியும். ஸாதகனுடைய பாவனை, ஆர்வம், பொறுப்பு இவைகளுக்கேற்ப, இதற்கான வழிகள் உள்ளன. பகவானிடத்தே அ நன்யமான பக்தி உடையவர் எவரோ, பகவனைத்தவிர வேறு எதுவுமே இல்லை, எல்லாமே பகவான் தான், பகவானுடையது தான் , எல்லாமே அவனது விளையாடலே என அறியும் பக்தன் ஸாதகன் ஒருவனுக்குத் தனது
ஸ்வதர்மத்தில் உண்டான கர்மங்களைச் செய்வதில் உள் மன முரண்பாடு எதுவுமே இல்லை.
மனதையும் புத்தியையும் பகவானிடத்தில் அர்ப்பணம் செய்துவிடு என்றால் ?
புத்தியினால், பகவானுடைய அனந்தம், ரஹஸ்யம், தத்வம் அறியப்படுகிறது.
அதனால் ச்ரத்தையும் உறுதியும் ஏற்படுகிறது. இந்த உறுதியினால் மட்டுமே பகவானிடத்து ப்ரேமை உண்டாகிறது. சரணடைய வேண்டும் என்ற மனோபாவம் பிறக்கிறது. பகவானை இடைவிடாது சிந்திப்பதே மனதையும் புத்தியையும் பகவனிடத்தில் அர்ப்பிப்பது ஆகும்.
குறிப்பு: கீதையின் இந்த விளக்கங்கள், ஸ்வாமினாத ஆத்ரேயர், தஞசாவூர்
அவர்களின் மொழிபெயர்ப்பை
வழித்துணையாகக் கொண்டவை.