य: प्रयाति स मत्भावं याति नास्यत्र संशय;
அந்தகாலே ச மாமேவ ஸ்மரன்முக்த்க்வா கலேவரம்
ய: ப்ரயாதி ஸ ஸத்பாவம் யாதி தாஸ்யத்ர ஸம்சய:
உடலைவிட்டு உயிர் நீங்கும் தருணத்திலும் எவன் ஒருவன் என்னையே நினைத்துக்கொண்டு உடலை நீத்துக் கிளம்புகிறானோ, அவன் எனது ஸ்வரூபத்தையே அடைகிறான். இதில் சற்றும் ஐயம் இல்லை.
' அந்தகாலே ' என்ற சொல்லுடன் 'ச' என்று சேர்த்துச் சொல்லுவதன் பொருள் என்ன?
' ச ' என்பது " கூட " என்னும் பொருளில் உள்ளது. இதனால், மரணகாலத்தின் தனிப்பட்ட பெருமை உணர்த்தப்படுகிறது.
எவனொருவன், ஜீவித நாட்களில், எப்பொழுதும், என்னையே நினைத்துக்கொண்டு இருப்பானோ, அவனைப்பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது ?
எவன் ஒருவன் இந்த மனிதப்பிறவியின் கடைசி மணித்துளியில் கூட, என்னையே நினைத்து உடலை விடுகிறானோ,
அவனும் என்னையே அடைகிறான் என்பதே பகவான் கூறுவதாகக் கொள்ளவேண்டும்.
" மாம் " என்ற சொல் ?
ஏழாம் அத்தியாயத்தில் என்னுடைய முழு ஸ்வரூபத்தை வர்ணிப்பேன் எனக்கூறிய பகவான், ஏழாம் அத்தியாயம், 30ம் ஸ்லோகத்தில் வர்ணித்தவாறு, ' மாம்" என்ற சொல் அந்த முழுமையான, ஸமக்ர ஸ்வரூபத்தை குறிப்பிடுகிறது. பகவானுடைய எல்லா ரூபங்களும் அதிலே இணைந்துவிடுகின்றன. யார் எந்த ரூபத்தில் பகவானை நினைந்தாலும், அவர் பகவானையே ஸ்மரிக்கிறார். பகவானுடைய அந்தந்த அவதாரங்களுக்கு உண்டான திரு நாமங்கள், குணாதிசங்கள், ப்ரபாவங்கள், லீலைகள் எல்லாமே பகவானை நினைப்பதற்கு காரணம் ஆகும். ஆகையால், அவற்றை நினைவில் வைத்துக்கொள்வதாலேயே, பகவானுடைய நினைப்பும் தானாகவே வருகிறது. ஆகவே பகவானுடைய நாமம், குணங்கள், ப்ரபாவங்கள், சரித்திரங்கள் எல்லாமே அடங்கும்.
" ஏவ " என்று ஏன் கூறவேண்டும் !!
அந்திம காலத்தில், மனைவி, மக்கள், தாய் தந்தை, உறவினர், சேர்த்துவைத்த செல்வம், ஆண்ட , ஆள்கின்ற பதவி, கெளரவம் இவற்றை சிந்திக்காமல், இவற்றில் எதிலுமே சிக்காமல், என்னையே நினைக்கவேண்டும் என பகவான் சொல்வதாகக் கொள்ளவேண்டும். ஒருமுனைப்பாய் பகவத் சிந்தனை ஒன்றே பகவனை அடையும் வழி.
" மத் பாவம்" என்று கூறுவது ஏன்? இவ்வாறு பகவனை நினைப்பவர், ஸாயுஜ்யத்தை அடைவரா ? அல்லது நிர்குண பிரும்மத்தை அடைவாரா ?
இது சாதகனின் விருப்பம்.