அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவ அத்யாதமுச்யதே
பூத பாவ பவோத் பவகரோ விஸர்கஹ கர்ம ஸம்ஞிதஹ.
பூத பாவ பவோத் பவகரோ விஸர்கஹ கர்ம ஸம்ஞிதஹ.
अक्षरम् ब्र्ह्म् परमम् स्व भावोध्यात्ममुच्यते
भूत भावोद्ब्वकरो विसर्ग: कर्म सन्चित:
(Geetha 8:3)
भूत भावोद्ब्वकरो विसर्ग: कर्म सन्चित:
(Geetha 8:3)
ப்ரஹ்மம் என்று சொல்வதன் பொருள் மிக உயர்ந்தது.
அழிவற்றது. அந்த பிரும்மம் அதனுடைய ஸ்வரூபம அதாவது ஜீவாத்மா. அத்யாத்மம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. சராசரங்களின் இருப்பை
உண்டுபண்ணுகிற த்யாகம், கர்மம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
பரமம் என்ற சொல் ?
பரமம் என்ற சொல் நிர்குணமான், உருவமற்ற, ஸத், சித், ஆனந்தமயமான பரமாத்மாவைக் குறிக்கும். வேதத்தையோ நான்முகனையோ ப்ரக்ருதியையோ குறிப்பிடாது. எது எல்லாவற்றிலும் சிறந்ததோ, நுண்ணியதோ, அதுவே பரமம் ஆகும்.
'ப்ரஹ்மம்', 'அக்ஷரம்' என்ற சொற்கள் எந்த தத்வங்களைக் குறிப்பிடுகின்றதோ, அவையெல்லாவற்றையும் விட சிறந்தது, மேலானது, ஒன்றேயானது சத் சித் ஆனந்தமயமான பரப்ரம்மம் == அது பரமாத்மாதான். அதனால் தான் ' பரமம்' ' அக்ஷரம்' என்ற சொற்கள் பரமாத்மாவைக் குறிப்பிடுகின்றன.
ஸ்வபாவம் (sva bhava ) என்ற சொல் ?
ஸ்வ sva என்றால் தன்னுடைய, பாவ bhava என்றால் இருப்பு .nature
ஸ்வபாவம் என்றால் தன்னுடைய இயல்பு இருப்பு எனப்பொருள் கொள்ளலாம்.
ஜீவன் உருவிலுள்ள பகவானுடைய சைதன்யத்தின் ரூபமான் பராப்ரக்ருதியான ஆத்ம தத்வம், ' ஆத்ம ' என்ற சொல்லால் கூறப்படுகின்ற உடல், புலன்கள், மனம், புத்தி, முதலியவற்றால் ஆன அபரா ப்ர்க்ருதியை ஆட்கொள்ளும்பொழுது ' அத்யாயம்'
எனப்படுகிறது.
' பூத ' என்பது அசைவன, அசையாதன எல்லாமே அடங்கும்.
இந்த ப்ராணிகள் உண்டாவது, வளர்வது, எல்லாம் எந்த த்யாகத்தினால் நடைபெறுகின்றனவோ, எது படைப்புக்கும் காப்புக்கும் ஆதாரமோ அந்த த்யாகத்தின் பெயர்தான் கர்மம்.
ப்ரளய காலத்தில் உலகே உள்ள சகல ப்ராணிகளும் தத்தம் மனப்பதிவுகளுடன் ( ஸம்ஸ்காரங்கள் உட்பட )பகவானிடத்தில் அடங்கிவிடும்.
பிறகு படைப்பின் துவக்கத்தில், பகவான், " நான் ஒருவனே பலவாறாகப் பல்கிப் பெருகுவேன்' எனச் சங்கல்பம் செய்கையில், மறுபடி உருவாகின்றன.
பகவானுடைய இந்த " ஆதி சங்கல்பம் ' ஒன்றே உணர்வற்ற ப்ரக்ருதியின் கருவில் உணர்வுள்ள விதையை விதைப்பதாம். இதுவே ஜட சேதன கூட்டுறவாகும்.
இதுவே பெரிய த்யாகம் அன்யதா சொல்லப்போனால் விஸர்கம்.
இதிலிருந்தே ப்ராணிகள் பலவாறாகப் பிறக்கின்றன.
பகவான் சொல்லும் ' ஸம்பவ: ஸர்வபூதானாம் ததோ பவதி பாரத " என்பதை நினைவு கொள்ளவும்.