ஸ்வரூப பெருமை இந்த ஸ்லோகத்தில் விளக்கப்படுகிறது.
கவிம் புராணமனுசாஸிதாரமணோர்ரணீயாம்ஸமனுஸ்மரேத் ய:
ஸர்வஸ்ய தாதார சிந்த்யரூபமாதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத
எந்த மனிதர், எல்லாமறிந்தவரும், அ நாதியானவரும், ( தொன்மையானவர்) எல்லாவற்றையும் ஆள்பவரும், நுண்ணியதைக்காட்டிலும் மிகவும் நுண்ணியவரானவரும், எல்லாவற்றையும் தாங்கிக் காப்பாற்றுபவரும், சிந்தனைக் கெட்டாத வடிவுடையவரும், சூரியனைப் போன்று எப்பொழுதும் சைதன்ய பிரகாச வடிவானவரும் அவித்யைக்கு மிகவும் அப்பாற்பட்டவரும், சுத்த ஸத், சித் ஆனந்த மயமானவருமான பரமேஸ்வரனை எப்பொழுதும் நினைப்பவன்.
பரமாத்மா எப்பொழுதும் எல்லாவற்றையும் அறிந்தவர்.
நடந்தது, நடக்கப்போவது, ஸ்தூலமானது, நுண்ணியது,
உலகில் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ, எவை எல்லாம் உண்டோ,
அவை யாவையும் உள்ளபடி அறிந்தவர். சர்வஞ்யர். அவர் அறியாதது ஒன்றும் இல்லை.
அவரே எல்லாவற்றிக்கும் ஆதி. அவருக்கு முன்னாள் யாரும், எதுவும், இருந்தது இல்லை. உண்டானதும் இல்லை. அவரே எல்லாவற்றிக்கும் காரணம். எல்லாவற்றையும் விட பழமையானவர். சனாதனர். எல்லாவற்றிக்கும் எஜமானர். எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவர். எங்கும் நிறைந்து இருப்பவர். பரந்த இந்த பிரும்மாண்டத்தையே தாங்குபவர். அவரே ஆதாரம். இருப்பினும் எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டவர்.
அடுத்து வருவது சாதனை முறை, அதன் பயன்.