!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Monday, March 31, 2008

Sri Rama leaves for forest

Chapter 3.
The desire of Dasaratha to crown Sri Rama
Kaikeyi's demands....Rama with Sitha and Lakshmana on way to forest..Meeting Guha..
Settling in Chithra kuta hills.
ALL IN A NUTSHELL.


இப்படி எல்லா குணங்களையும் கொண்டவராயும் அரசாள வல்ல சக்தி உடையவராயும் நீதி சாத்திரங்களில்
சொல்லிய சிறந்த குணங்களையும் உடையவராயும், தனக்குப் பிரியராக ஜனங்களின் நன்மையில் முயற்சி உடையவராகவும் உள்ள தனது மூத்த குமாரராகிய ஸ்ரீ ராமனை தசரத மஹாராஜன், தனது மந்திரி மற்றும்
புரோகிதர் முதலியவர்கள் பிரியத்தை த் தெரிந்துகொள்வதற்காக, இளவரசனாக்க தன் இச்சைதனைத்
தெரிவிக்கிறார்.

ஸ்ரீ ராமனை இளவரசாக முடி சூட்டுகைக்கு சேர்த்த பொருள்களை தசரத மஹாராஜவின் இளைய
மனைவியான கைகேசி பார்த்து, பொறையற்றவளாய், முன் சம்பாஸுர யுத்தத்தில் ராஜன் புகழ்ந்து உனக்கு
வேண்டும்போது வேண்டிய இரண்டு வரங்களைக் கேள், கொடுக்கக் கடவேன் என்று சொல்லியிருந்த
இரண்டு வரங்களையும் முடி சூடக் கோடித்த அக்காலத்தில் தசரதரைக் குறித்துக் கேட்டாள். ( அதாவது)
ஸ்ரீ ராமன் இம்முடியைத் தவிர்த்து காட்டுக்கு ப்போகவேண்டும், இம்முடியை என் மகனான பரதனுக்குச்
சூட்டவேண்டுமென்றும் கேட்டாள்.

தசரதன் தர்மம் ஆகிற கயிற்றினால் கட்டுண்டு கைகேயிக்குச் சொன்ன உண்மை வார்த்தைகள் தவறாமல்
நடந்திடவேண்டும் என்பதிற்காகத் தனக்குப் பிரியரான ஸ்ரீ ராமனைக் காட்டுக்கு அனுப்பி விட்டார்.

அந்த ஸ்ரீ ராமன் அரசாட்சி செய்ய வல்லவர் ஆயினும், கைகேயின் திருப்திக்காக தசரதன் இட்ட
கட்டளையினால், அவர்கள் முன் தாம் காட்டுக்குப் போவதாகச் சொன்ன சொல் தவறாமல் காட்டுக்குச் சென்றார்.

அந்த ஸ்ரீராமன் காட்டுக்குப் போகும்போது அவருக்கு இளையவரான் லக்ஷ்மணன் வினயத்துடன் கூடியவராய் தன் தாயான சுமித்திரையின் சொற்படி நடந்து அவளுக்குப் பிரியத்தை விளைவித்தவராய், ஸ்ரீ ராமனிடம் மிக்க
அன்பை உடையவராய், அவரை விட்டு, ஒரு நொடியும் பிரிந்திருக்க மாட்டாதவராய், அவருடன் கூடவே காட்டுக்குச்சென்றார்.

ஸ்ரீ ராமனுக்கு பிரியமான மனைவியாய், அவருக்கு உயிர் போன்றவளான, எல்லா உத்தம பெண்மணிகளின்
இலக்கணங்களோடு கூடியவளும், பெண்களில் சிறந்தவளாய், ஜனங்களின் நன்மையில் முயன்றவளாய், தூயவளான வளும், ஜனகன் இல்லத்தில் விஷ்ணு சக்தியைப் போல மிகவும் விசித்திரமான் லாவண்யங்களை உடையவளாகவும் அவதரித்த சீதா தேவியும் சந்திரனைப் பின் தொடரும் ரோகிணியைப் போல, ஸ்ரீ ராமனைப் பின் தொடர்ந்து
காட்டுக்கு சென்றாள்.

தசரதரும் பட்டணத்தில் உள்ள ஜனங்களும் ஸ்ரீ ராமனைச் சிறிது தூரம் பின் தொடர்ந்து சென்றார்கள்.
ஸ்ரீ ராமன் ச்ருங்கிபேரம் என்கிற ஊரைக் கிட்டி அந்த ஊர் அருகில் உள்ள கங்கைக் கரையில், அது வரையில்
தன்னைத் தேர் மேல் ஏற்றிக் கொண்டு வந்த சுமந்திரனையும் விட்டு விட்டார். அந்த கங்கைக் கரையில் ஸ்ரீ ராகவன் வேடனும் தன்னிடத்தில் அன்புள்ள குகன் என்பவரை நேசித்தார்.

ஸ்ரீ ராகவன், சீதையோடும், லக்ஷமணனோடும் பொருந்தியிருப்பது போல், படித்திராத குகனையும் தன் பக்தன் என அபிமானம் கொண்டு அவருடன் தங்கியிருந்தார்.

பிறகு சிறிது தூரம் சென்று குகனையும் விட்டு விட்டு அம்மூவரும் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொண்டு
காட்டு வழியில் மிகவும் நீர் கொண்ட பல ஆறுகளைத் தாண்டிச் சென்று, பரத்வாஜமுனிவருடைய நியமப்படியே சித்ர கூடமென்னும் மலைதனை அடைந்தார்கள்.

தேவர்களோடும் கந்தர்வர்களோடும் ஒத்த அந்த மூவரும் அந்தச் சித்ர மலையின் அழகிய ஓர் இருப்பிடத்தை
அமைத்துக் கொண்டு, ப்ரிதியோடு கூடியவர்களாக அங்கு சுகமாக வசிக்கத் துவங்கினார்கள்.

......தொடரும்.


This is Abridged Ramayana . for Nithya Paarayana.
Those desirous of enlightening themselves of full enunciation of all the details,
may please click the web link Valmiki Ramayana given at the right of this page.

Sunday, March 30, 2008

Chapter 2. Naradha Starts Replying to Sage Valmiki

எல்லா உலகங்களிலும் உள்ள எல்லா பிராணிகளுடைய உண்மை உருவம் சுபாவங்கள் அனைத்துமே நன்று அறிந்த நாரத பகவான் வால்மீகி மொழியக்கேட்ட இந்தக் கேள்விதனை கேட்டது மட்டுமல்ல, வால்மீகியின் மனதிலுள்ள கருத்துக்களை நன்கு ஊகித்தும் தெரிந்து கொண்டு, இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லி அதனை இவர் கேட்கும்படியான பாக்கியம் வால்மீகிக்குக் கிட்டியுருப்பது குறித்து சந்தோஷமும் அடைந்தார். தம் மனதைத் தன் மனதில் எழும் வார்த்தைகளில் இணைத்து சொல்லத்துவங்கினார்:

ஓ ! வால்மீகி மஹ ரிஷியே ! சொல்லுகிறேன். கேளுங்கள் .

ஓ வால்மீகி மஹ ரிஷியே ! நீங்கள் விவரித்த குணங்கள் யாவையுமே ஒவ்வொன்றும் தனித்தனியே அனேக
இணை குணங்களை விளைக்கத் தக்கவை ஆகும். இந்த குணங்கள் சாதாரண ஜீவர்களிடம் (ஒன்றே சேர ) இயலாதவை. ஆஹா ! நான் இப்போது ராமனின் குணங்களை அல்லவா நினைந்து அனுபவித்து அதில் மகிழ்ச்சியும் அடைந்தவனாக பரவசமுற்றவனாகி இருக்கிறேன். சற்றே பொறுத்து இருங்கள். இன்னமும் யோசிக்கிறேன். இக்குணங்கள் யாவற்றையுமே ஒருமித்துக் கொண்ட ஜீவனை நான் சொல்கிறேன்.

இதோ ! இக்ஷ்வாகு வம்சம். இந்த வம்சத்தில் ஸ்ரீ ராமன் எனும் பிரசித்தி பெற்ற ஒருவர் அவதரித்து இருக்கிறார். நீங்களும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பொது மக்கள் யாவருமே இவரது பெருந்தொழிலை அவர்
செய்துவரும் அனேக காரியங்களைக் கண்டு இவர் ஸ்ரீமன் நாராயணன் என்பது நிச்சயம் என்கிறார்கள். இவர் கருமமே கண்ணானாராகி அதிஹேயமான பிறப்பு இறப்பு எனப்படும் விகாரங்கள் அற்றவர். பெரிதும் சாமர்த்தியசாலியானவர். (தான் செய்யும் கருமங்களால்) ஸ்வயம் பிரகாசமாகி இருப்பவர். உயர்ந்த நிலை
ஆனந்தத்தை உடையவர். தனது கருமங்களால் எல்லா மக்களையும் தன் வசமாக்கிக் கொண்டவர்.

எல்லாம் அறிந்தவர். அந்தந்த சமூக சம்பிரதாயங்களை மாற்றாமல், அவற்றின்படியே அவைகள் நடந்திர வேண்டி நடப்பிக்க வல்லவர். நல்ல வாக்கு உடையவர். பரந்த ஐச்வர்யத்தை உடையவர். அதற்கு ஏற்படும் விரோதிகளைப் போக்க வல்லவர். பருத்த உருண்ட கைகளை உடையவர். உயர்ந்த தோள்களை உடையவர். சங்கு போல மூன்று
ரேகைகளைக் கொண்ட கழுத்தை உடையவர். நீண்டு பருத்த கபோலங்களை உடையவர்.

பரந்த மார்பை உடையவர். பெரும் வில்லைப் பிடிக்கவல்ல உடல் ஆகிருதிதனி உடையவர். மறைந்த கழுத்து எலும்புகளை உடையவர். சத்ருக்களைப் போக்குபவர். முழந்தாள் அளவுக்கு நீண்ட கைகளை உடையவர். பருத்து வட்டமாயுள்ள தலை உடையவர். பாதி சந்திரன் போன்ற நெற்றி உடையவர். இவரது நடையோ அழகியதாம்.

அதிக நீண்டுமில்லாமல், அதிக குறைந்துமில்லாத சமமான ஒரு மேனி உடையவர். குறுமை, நெடுமை ஒன்றோடு ஒன்று சேராது பிரிந்து காணப்படும் அவயவங்களை உடையவர். இவரைக் காண ஆவல் அதிகமாக‌
உறுத்தும் நிறமுடையவர். ஜொலிக்கும் வசீகர காந்தி உடையவர். அகல மார்பினை உடையவர். நீண்ட கண்களை உடையவர். இவரது எல்லா அவயவங்களுமே அழகுடையவை. இவை எல்லாவற்றினையும் தவிர‌
இன்னும் பல பல லக்ஷணங்களையும் உடையவர் ஆவர்.

அறம் அறிந்தவர். சொன்ன சொல் தவறாதவர். பிராணிகளுக்கு நன்மை செய்ய ஆவல் உள்ளவர். நற்கீர்த்தி உடையவர்.ஊஹா போஹம் எனச் சொல்லப்படும் விசித்ர அறிவினை இவர் முற்றிலும் அறிவார். பரிசுத்தமானவர். தம் அடியவர்களுக்கு வசப்பட்டவர். அவர்கள்தம் நலனிலே அக்கரை காட்டுபவர். அதிலேயே
சிந்தை கொண்டவர்.

பிரும்மாவை ப்போன்றவர். மூன்று மூர்த்திகளில் ஒன்றாக அவதரித்தவர். இலக்குமியின் கணவர். அடியார்கள் எல்லோரையும் ஆதரிப்பவர். அவர்களுடைய விரோதிகளைப் போக்குபவர். சத்ரு மித்ர வித்தியாசம் பாராட்டாது எல்லோரையும் காப்பவர். அனைவரையும் அவரவருக்கு ஏற்ற தர்மங்களில் இருத்துபவர்.

தமது தர்மங்களை இடைவிடாது கடைப்பிடிப்பவர். தமது சுற்றத்தினையும் பொறாமை இன்றி காப்பாற்றுபவர். நான்கு வேதங்களான ருக், யஜுர், சாம, அதர்வணம் அறிந்தவர். வியாகரணம் சிக்ஷை, சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்ற ஆறு அங்கங்களையும் நன்றே அறிந்தவர். தனுர் வேதத்தில் பொருந்தியிருப்பவர்.

நியாயம், மீமாம்சம் போன்ற எல்லா சாத்திரங்களின் உண்மைதனையும் அறிந்தவர். அறிந்ததை என்றும்
மறவாதவர். காலத்திற்கேட்ப ஸப்பூர்த்தி எனச் சொல்லப்படும் அறிவினைப்பெற்றவர். எல்லாப் பிராணிகளுக்கும் பிரியமானவர். அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுபவர். தீநஸ்வபாவம் இல்லாதவர். வாக்கு சாதுர்யம் மிக்கவர்.

ஆறுகள் தங்களுக்கு போக்கற்று கடலைச் சேர்வன போல், எல்லா மக்களாலும் சூழ்ந்து காணப்படுபவர்.
எல்லோராலும் பூஜிக்கப்படுபவர். சாதி முதலிய எந்த வித்தியாசமும் இன்றி எல்லாராலும் அண்டத்தக்கவர்.
எப்போது பார்த்தாலும் புதியவராகத் தோற்றமளிப்பவர்.

கெளசலையின் குமாரர் இவர். இப்படி எல்லா நல்ல குணங்களையும் தன்னிடத்தே பொருந்தியவர்.
கடல் எப்படி தன்னுள் உள்ள மணிகள் ஆகியவற்றை பிறருக்குத் தெரியாமல் மறைக்கிறதோ அது போல இவரும்
பிறர் அறியவல்லாத மனோபாவமுடையவர். எவ்வாறு இமய மலை எந்த ஒரு மழையினாலும் அசையாதோ , அப்படியே எந்தவித துன்பங்கள் நேரிடினும் சலியாதவர்.

ஸ்ரீ விஷ்ணுவைப் போன்ற பராக்ரமசாலி. சந்திரனைப் போன்று மகிழ்ச்சியானவர். பிரளய காலத்து அக்னி போலவும் கோபமுடையவர். பொறுமையில் பூமிதனை ஒத்தவர்.

கொடையில் குபேரனை ஒத்தவர். உண்மையில் இவர் தர்ம தேவதை போன்றவர்.

....to be continued.

Every day a chapter (or part thereof) of Sankshepa Ramayana as revealed by Naradha to Sage Valmiki
is being posted.
Viewers are advised to read from the beginning.
Best Suited for nithya paraayana.

View of a Viewer:

எத்தனையோ இடர் வரும்போது ஸ்ரீராமாயணமே காக்கிறது. நீங்கள் ,சம்க்ஷேப ராமாயணமாகவே கொடுத்துவிட்டால் பாராயணம் எளிதாகிறது.
நன்றி.

ராம நாமம் எல்லா இடத்திலும் ஒலிக்கட்டும்.



*****************************************************
‌A link to Valmiki Ramayana (in both Sanskrit, transliteration and translation is given on the right side ) . Viewers who wish to view the corresponding Kanda/Sarga can get linked.

Saturday, March 29, 2008

ஸங்க்ஷேப ராமாயணம்.




ஸங்க்ஷேப ராமாயணம்.

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் .. துவங்குவது ஒரு கேள்வியில் தான்.






ஸ்ரீ வால்மீகி முனி ஸ்ரீ நாரத பகவானிடம் கேட்டது:
தாத்பர்யம் ( மொழி பெயர்ப்பு அல்ல )

ஓ, நாரத பகவானே ! லோகாந்திரத்தில் ஸ்ரீம ந் நாராயணனும் காலாந்திரத்தில்
நரஸிம்ஹாதிகளும் நான் இனிக் கேட்கப்போகிற குணங்களை உடையவர்கள் உண்டென்பது
அறிவேன். இவ்வுலகில் இக்காலத்தில் இவ்விதமான புருஷர்கள் யாரேனும் உண்டோ ? அதையறிந்து
சொல்லுவீராக. அதாவது:

ஸெளசீல்ய குணமுடையவன் யார்? வீர்யத்தை உடையவன் யார் ? தர்மத்தை அறிந்தவன் யார்?
செய்யத்தகாத அதர்மங்களை அறிந்தவன் யார் ? சிறிது உபகாரம் செய்யினும் அதை எப்போதும் மறவாமல்
பெரியதாக நினைப்பவன் யார் ? ஒருவன் அபகாரம் செய்தாலும் அதை ஒருக்காலும் நினையாமல் மறந்து
விடுகிறவன் யார்? மஹா சங்கடத்திலும் பொய் சொல்லாதவன் யார்? சங்கல்பம் செய்ததைத் தவறாமல்
நடத்த வல்லவன் யார்?

தம் பெரியோர்களால் ஆசரித்த குல ஆசாரத்தை ஒருவகையும் விடாமல் ஆசரிப்பவன் யார்? ஸத்ரு மித்ர
பேதமின்றி பிராணி மாத்ரத்திற்கு நன்மை செய்கின்றவன் யார்? சகல சாஸ்திரங்களையும் அறிந்தவன்
யார் ? நினைத்த காரியத்தை முடிக்கவல்ல வல்லமை உள்ளவன் யார் ? எல்லோருக்கும் எப்போதும்
பார்க்கப் பார்க்க ஆனந்தம் தருவனாக இருப்பவன் யார் ?

சலியாத தைர்யமுடையவன் யார் ? கோபத்தினை அடக்கினவன் யார்? சகல பிராணிகளும் ஆவலுடன்
பார்க்கத் தகுந்த அழகுடையவன் யார் ? அசூயை (பிறரிடத்து இல்லாத குற்றங்களை ஏற்றிச் சொல்லுதல்)
இல்லாதவன் யார் ? போர்க்களத்தில் எவனுக்குக் கோபம் வந்தால் தேவர், அசுரர்களும் பயப்படுவார்களோ, அவன் யார்? தன்னடியாருக்கு ஒருவன் தீங்கு இழைப்பின் அப்போது அவனை வென்று அடியார்களை ரக்ஷித்து
காப்பவன் யார் ?

ஓ மஹ ரிஷியே ? நீங்கள் எல்லாவற்றையும் அறிந்தவராகையால், இவ்விதமான புருஷன் யார் என அறிந்து
சொல்ல உமக்கு சாமர்த்தியம் உண்டு. இக்குணங்கள் யாவையுமே ஒருவனிடத்தே சேர்ந்திருப்பது அரிது.
ஆகையால், இவை யாவும் உள்ள ஒருவன் உளன் என்று கேட்பதில் பெரும் உற்சாகம் எனக்குள்ளது.

ஸ்ரீ வால்மீகி கேட்ட கேள்விக்கு ஸ்ரீ நாரதர் பதிலளிக்கத் துவங்குகிறார்:

(அடுத்த பதிவில் காண்போம். )

Wednesday, March 12, 2008

SAHASRA BHOJANA ARADHANA





Please click on the above to get a FULL PICTURE of all details.

THOSE WHO ARE DESIROUS OF PARTICIPATION MAY KINDLY ADDRESS THEIR QUERIES/CONTRIBUTIONS DIRECT TO:
NUNGAMBAKKAM SEVA SAMAJAM TRUST; 43,Noor Veerasamy Lane, Nungambakkam,
Chennai 600034, Tamil Nadu, India.

Tuesday, March 4, 2008

An Inquiry into the nature of this " I " ?

Swami Dayananda Saraswati


In this video recording Swamiji is guiding the listener on an inquiry into the nature of "I". Swami Dayananda offered this talk some years ago during one of his visits to the San Francisco Bay Area. By this traditional and thorough oral unfoldment, Swamiji aims to create a sort of a mirror in the mind of the listener that may allow him/her to recognize the true nature of his/her Self. You may learn more about Vedanta and of Swamiji's work by visiting arshavidya.org.More at http://vedantatalks.org