Saturday, March 29, 2008
ஸங்க்ஷேப ராமாயணம்.
ஸங்க்ஷேப ராமாயணம்.
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் .. துவங்குவது ஒரு கேள்வியில் தான்.
ஸ்ரீ வால்மீகி முனி ஸ்ரீ நாரத பகவானிடம் கேட்டது:
தாத்பர்யம் ( மொழி பெயர்ப்பு அல்ல )
ஓ, நாரத பகவானே ! லோகாந்திரத்தில் ஸ்ரீம ந் நாராயணனும் காலாந்திரத்தில்
நரஸிம்ஹாதிகளும் நான் இனிக் கேட்கப்போகிற குணங்களை உடையவர்கள் உண்டென்பது
அறிவேன். இவ்வுலகில் இக்காலத்தில் இவ்விதமான புருஷர்கள் யாரேனும் உண்டோ ? அதையறிந்து
சொல்லுவீராக. அதாவது:
ஸெளசீல்ய குணமுடையவன் யார்? வீர்யத்தை உடையவன் யார் ? தர்மத்தை அறிந்தவன் யார்?
செய்யத்தகாத அதர்மங்களை அறிந்தவன் யார் ? சிறிது உபகாரம் செய்யினும் அதை எப்போதும் மறவாமல்
பெரியதாக நினைப்பவன் யார் ? ஒருவன் அபகாரம் செய்தாலும் அதை ஒருக்காலும் நினையாமல் மறந்து
விடுகிறவன் யார்? மஹா சங்கடத்திலும் பொய் சொல்லாதவன் யார்? சங்கல்பம் செய்ததைத் தவறாமல்
நடத்த வல்லவன் யார்?
தம் பெரியோர்களால் ஆசரித்த குல ஆசாரத்தை ஒருவகையும் விடாமல் ஆசரிப்பவன் யார்? ஸத்ரு மித்ர
பேதமின்றி பிராணி மாத்ரத்திற்கு நன்மை செய்கின்றவன் யார்? சகல சாஸ்திரங்களையும் அறிந்தவன்
யார் ? நினைத்த காரியத்தை முடிக்கவல்ல வல்லமை உள்ளவன் யார் ? எல்லோருக்கும் எப்போதும்
பார்க்கப் பார்க்க ஆனந்தம் தருவனாக இருப்பவன் யார் ?
சலியாத தைர்யமுடையவன் யார் ? கோபத்தினை அடக்கினவன் யார்? சகல பிராணிகளும் ஆவலுடன்
பார்க்கத் தகுந்த அழகுடையவன் யார் ? அசூயை (பிறரிடத்து இல்லாத குற்றங்களை ஏற்றிச் சொல்லுதல்)
இல்லாதவன் யார் ? போர்க்களத்தில் எவனுக்குக் கோபம் வந்தால் தேவர், அசுரர்களும் பயப்படுவார்களோ, அவன் யார்? தன்னடியாருக்கு ஒருவன் தீங்கு இழைப்பின் அப்போது அவனை வென்று அடியார்களை ரக்ஷித்து
காப்பவன் யார் ?
ஓ மஹ ரிஷியே ? நீங்கள் எல்லாவற்றையும் அறிந்தவராகையால், இவ்விதமான புருஷன் யார் என அறிந்து
சொல்ல உமக்கு சாமர்த்தியம் உண்டு. இக்குணங்கள் யாவையுமே ஒருவனிடத்தே சேர்ந்திருப்பது அரிது.
ஆகையால், இவை யாவும் உள்ள ஒருவன் உளன் என்று கேட்பதில் பெரும் உற்சாகம் எனக்குள்ளது.
ஸ்ரீ வால்மீகி கேட்ட கேள்விக்கு ஸ்ரீ நாரதர் பதிலளிக்கத் துவங்குகிறார்:
(அடுத்த பதிவில் காண்போம். )
Labels:
ramayan,
sankshepa,
venkataraman