Chapter 3.
The desire of Dasaratha to crown Sri Rama
Kaikeyi's demands....Rama with Sitha and Lakshmana on way to forest..Meeting Guha..
Settling in Chithra kuta hills.
ALL IN A NUTSHELL.
இப்படி எல்லா குணங்களையும் கொண்டவராயும் அரசாள வல்ல சக்தி உடையவராயும் நீதி சாத்திரங்களில்
சொல்லிய சிறந்த குணங்களையும் உடையவராயும், தனக்குப் பிரியராக ஜனங்களின் நன்மையில் முயற்சி உடையவராகவும் உள்ள தனது மூத்த குமாரராகிய ஸ்ரீ ராமனை தசரத மஹாராஜன், தனது மந்திரி மற்றும்
புரோகிதர் முதலியவர்கள் பிரியத்தை த் தெரிந்துகொள்வதற்காக, இளவரசனாக்க தன் இச்சைதனைத்
தெரிவிக்கிறார்.
ஸ்ரீ ராமனை இளவரசாக முடி சூட்டுகைக்கு சேர்த்த பொருள்களை தசரத மஹாராஜவின் இளைய
மனைவியான கைகேசி பார்த்து, பொறையற்றவளாய், முன் சம்பாஸுர யுத்தத்தில் ராஜன் புகழ்ந்து உனக்கு
வேண்டும்போது வேண்டிய இரண்டு வரங்களைக் கேள், கொடுக்கக் கடவேன் என்று சொல்லியிருந்த
இரண்டு வரங்களையும் முடி சூடக் கோடித்த அக்காலத்தில் தசரதரைக் குறித்துக் கேட்டாள். ( அதாவது)
ஸ்ரீ ராமன் இம்முடியைத் தவிர்த்து காட்டுக்கு ப்போகவேண்டும், இம்முடியை என் மகனான பரதனுக்குச்
சூட்டவேண்டுமென்றும் கேட்டாள்.
தசரதன் தர்மம் ஆகிற கயிற்றினால் கட்டுண்டு கைகேயிக்குச் சொன்ன உண்மை வார்த்தைகள் தவறாமல்
நடந்திடவேண்டும் என்பதிற்காகத் தனக்குப் பிரியரான ஸ்ரீ ராமனைக் காட்டுக்கு அனுப்பி விட்டார்.
அந்த ஸ்ரீ ராமன் அரசாட்சி செய்ய வல்லவர் ஆயினும், கைகேயின் திருப்திக்காக தசரதன் இட்ட
கட்டளையினால், அவர்கள் முன் தாம் காட்டுக்குப் போவதாகச் சொன்ன சொல் தவறாமல் காட்டுக்குச் சென்றார்.
அந்த ஸ்ரீராமன் காட்டுக்குப் போகும்போது அவருக்கு இளையவரான் லக்ஷ்மணன் வினயத்துடன் கூடியவராய் தன் தாயான சுமித்திரையின் சொற்படி நடந்து அவளுக்குப் பிரியத்தை விளைவித்தவராய், ஸ்ரீ ராமனிடம் மிக்க
அன்பை உடையவராய், அவரை விட்டு, ஒரு நொடியும் பிரிந்திருக்க மாட்டாதவராய், அவருடன் கூடவே காட்டுக்குச்சென்றார்.
ஸ்ரீ ராமனுக்கு பிரியமான மனைவியாய், அவருக்கு உயிர் போன்றவளான, எல்லா உத்தம பெண்மணிகளின்
இலக்கணங்களோடு கூடியவளும், பெண்களில் சிறந்தவளாய், ஜனங்களின் நன்மையில் முயன்றவளாய், தூயவளான வளும், ஜனகன் இல்லத்தில் விஷ்ணு சக்தியைப் போல மிகவும் விசித்திரமான் லாவண்யங்களை உடையவளாகவும் அவதரித்த சீதா தேவியும் சந்திரனைப் பின் தொடரும் ரோகிணியைப் போல, ஸ்ரீ ராமனைப் பின் தொடர்ந்து
காட்டுக்கு சென்றாள்.
தசரதரும் பட்டணத்தில் உள்ள ஜனங்களும் ஸ்ரீ ராமனைச் சிறிது தூரம் பின் தொடர்ந்து சென்றார்கள்.
ஸ்ரீ ராமன் ச்ருங்கிபேரம் என்கிற ஊரைக் கிட்டி அந்த ஊர் அருகில் உள்ள கங்கைக் கரையில், அது வரையில்
தன்னைத் தேர் மேல் ஏற்றிக் கொண்டு வந்த சுமந்திரனையும் விட்டு விட்டார். அந்த கங்கைக் கரையில் ஸ்ரீ ராகவன் வேடனும் தன்னிடத்தில் அன்புள்ள குகன் என்பவரை நேசித்தார்.
ஸ்ரீ ராகவன், சீதையோடும், லக்ஷமணனோடும் பொருந்தியிருப்பது போல், படித்திராத குகனையும் தன் பக்தன் என அபிமானம் கொண்டு அவருடன் தங்கியிருந்தார்.
பிறகு சிறிது தூரம் சென்று குகனையும் விட்டு விட்டு அம்மூவரும் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொண்டு
காட்டு வழியில் மிகவும் நீர் கொண்ட பல ஆறுகளைத் தாண்டிச் சென்று, பரத்வாஜமுனிவருடைய நியமப்படியே சித்ர கூடமென்னும் மலைதனை அடைந்தார்கள்.
தேவர்களோடும் கந்தர்வர்களோடும் ஒத்த அந்த மூவரும் அந்தச் சித்ர மலையின் அழகிய ஓர் இருப்பிடத்தை
அமைத்துக் கொண்டு, ப்ரிதியோடு கூடியவர்களாக அங்கு சுகமாக வசிக்கத் துவங்கினார்கள்.
......தொடரும்.
This is Abridged Ramayana . for Nithya Paarayana.
Those desirous of enlightening themselves of full enunciation of all the details,
may please click the web link Valmiki Ramayana given at the right of this page.