. இந்த உலகம் கனவா அல்லது கற்பனையா?
Is the world we experience through our senses indeed a dream or an Imagination?
We give below a conversation between Bhagawan Ramana and one of his disciples.
பகவான் ரமணருக்கும் அவரது சீடருக்கும் நடந்த சம்பாஷணை கீழே தரப்படுகிறது.
பகவான்: நீ சத்தியம் ஒன்றையே தேடுபவனாக இருந்தால் உலகம் உண்மையற்றது என்று அங்கீகரிப்பதைத் தவிர வேறு வகை இல்லை.
உலகம் மெய் என்னும் எண்ணத்தை நீ விட்டால் ஒழிய உன் மனம் உலகத்தையே நாடும்.
மெய் அல்லாத ஒன்றை உளதாகக் கொண்டால், உள்ளதாம் மெய் உணர்வது என்றும் இல்லை.
இது ரஜ்ஜூ சர்ப்ப நியாயத்தால் விளங்கும். ஸர்ப்பத்தைக் காண்கிற வரை ரஜ்ஜுவைக்
காண முடியாது.
ஆரோபித சர்ப்பம் மெய் என்று உணரப்பட, அதிஷ்டான ரஜ்ஜூ முற்றிலும் பொய் ஆகிவிடும்.
அதாவது, ரஜ்ஜுவை ரஜ்ஜுவாகத் தெரிந்து கொள்ளாத பொழுது கற்பித மாத்திரம் சர்ப்பம்
யதார்த்த சர்ப்பமாகவே பார்க்கப்படுகிறது.
நீ கனவு காணும்போது கூட கனவுலகை மெய்யாகவே பார்க்கிறாய். கனவு கனவாக இருக்கும் வரை இது குற்றமில்லை. இறந்துபோன ஒருவனோடு பேசிக்கொண்டிருப்பதுபோல
நடப்பதற்கரிய ஏதோ ஒன்றைப்பற்றி நீ கனவு காணலாம். கனவு நிகழும்போதே "இந்த மனிதன் இறந்து போனவன் அல்லவா? " என்ற சந்தேகம் ஒரு க்ஷணம் ஏற்படினும், உன் மனம் சொப்பனத்தை எப்படியோ மெய் என ஏற்றுக்கொள்கிறது. கனவு நிகழும்பொழுது அம்மனிதன் இருக்கிறான் என்பது மெய்தானே? கனவு கனவாக இருக்கும் வரையில், அதன் உண்மையை
சந்தேகிக்க இடம் இல்லை.
அதுபோலவே இவ்விழிப்புலகத்தின் மெய்யை நீ விழித்திருக்கும்போது சந்தேகிக்க சக்தி
அற்றவனாக இருக்கிறாய்.
தான் சிருஷ்டி செய்த இந்த உலகத்தைத் தானே பொய் என்று மனம் எப்படி ஒப்புக்கொள்ளும்?
விழிப்புலகத்துக்கும், கனவு உலகத்துக்கும் உள்ள ஒற்றுமை இதுதான். இரண்டும் மனதின்
கற்பனையே. மனம் இவ்விரண்டில் ஏதொன்றில் ஈடுபட்டு இருக்கிறது. கனவு காணும்போது கனவு உலகத்தை பொய் என்று மறுப்பது இல்லை. அது போல விழித்திருக்கும்போது விழிப்புலகத்தையும் பொய் என மறுக்க நமது மனம் சக்தி அற்ற தாகும்.
இதற்கு மாறாக, மனத்தை உலகத்திலிருந்து திருப்பி அகமுகம் ஆக்கி அப்படியே அமர்ந்தால்
அதாவது எல்லா அனுபவங்களுக்கும் ஆதாரமாகிய ஆத்மா ஒன்றிலேயே விழிப்புடையவனாக இருந்தால், நீ இப்பொழுது உணரும் உலகம் கனவில் நீ கண்ட உலகம் போல பொய்யாகவே தோன்றும்.