!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Wednesday, December 15, 2010

Bhaghavath Geetha 8th chapter 6th Sloka

यम यम वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेवरम 
तम तमेवैति कौन्तेय सदा त्ध्भावाभाविता:
Geetha 8.6


 யம் யம் வாபி ஸ்மரந் பாவம் த்யஜ்யந்தே கலேவரம்
 தம் தமேவைதி கௌந்தேய சதா தத்பாவபாவித:


  குந்தியின் மகனே !  அர்ஜுனா !  மனிதன் ஒருவன் மரணத்தருவாயில் எந்தெந்த ஸ்வரூபத்தைச் சிந்திக்கிறானோ   அப்படிச் சிந்தித்தவண்ணமாய், தன் உடலை விட்டு நீங்குகிறானோ, அந்தந்த ஸ்வரூபத்தையே அடைகிறான்.  ஏன் எனில், அவன் எப்பொழுதும் அதே சிந்தனையில் இருந்திருக்கிறான்.

    bhavam  பாவம் என்ற சொல் எதைக்குறிக்கும் ? நினைப்பது என்றால் என்ன ?

    பகவான், தேவதைகள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், புழுக்கள், பூச்சிகள், மரங்கள், வீடு, சொத்து, சம்பத்தி,     நிலம் ஆகிய எல்லா உணர்வுகளையும் அல்லது ஜடமானவை என்று நாம் நினைக்கின்ற எவ்வளவு பொருட்கள் உண்டோ அவையெல்லாமே ' பாவம் ' தான்.  கடைசிக்காலத்தில் எந்த ஸ்வருபத்தைப் பற்றி சிந்திக்கிறானோ, அதுவே அதை நினைப்பதாகும்.

    கடைசிக்காலம் என்றால் ?

    இந்த ஸ்தூல உடலில் இருந்து, ப்ராணன், புலன்கள், மனம், புத்தி இவையடங்கிய ஸூக்ஷ்ம சரீரமுடைய ஜீவாத்மா     பிரியும் தருணத்தையே கடைசிக்காலம் என்று பகவான் சொல்லுகிறார்.

   நல்ல அல்லது தீய பிறவிகள் பெறுவதற்கு ஸத்வ, ரஜஸ, தமஸ் என்ற முக்குணங்கள் தான் காரணம் என்று பகவான் முன்னம் சொன்னார். இங்கே கடைசிக் காலத்து நினைவு என்கிறார். ஏன் ?
   மனிதன் எந்த் செயல்களைச் செய்தாலும், அவை ஸம்ஸ்காரங்களாக அவனுடைய உள்ளத்தில் பதிந்துவிடுகின்றன.      எண்ணற்ற ஸம்ஸ்காரங்கள் அவனுடைய உள்ளத்தில் நிரம்பியிருக்கின்றன. இந்த ஸம்ஸ்காரங்களுக்கு ஏற்றவாறு தான், எந்தத் துணை, நிமித்தமாக அமைகிறதோ, அதன் படி செயலும், நினைவும் உண்டாகின்றன. ஸாத்வீக கர்மங்கள் செய்வதால், ஸாத்வீகமான ஸம்ஸ்காரங்கள் எப்பொழுது குவிகின்றதோ, அப்பொழுது அவனிடத்தில் ஸத்வகுணம் மேலிடுகிறது. அதற்கு ஏற்றவாறே நினைவும் ஸாத்வீகமாக அமைகிறது.  அதே போலவே ராஜஸ், தமஸ் செயல்களை  அதிகம் செய்வதால், அந்த ஸம்ஸ்காரங்கள் பெருகி, ரஜோ தமோ குணமும் மேலீட்டு, அந்திம காலத்தில் அந்த நினைப்புகளே ஏற்படுகின்றன. இவ்விதம், கர்மம், குணம், நினைவு மூன்றுமே ஒன்றுபடுவதால், இவற்றில் எதை அடுத்த பிறவிக்கு காரணம் எனக் கூறினாலும் தவறில்லை. எல்லாம் ஒன்று தான்.
Courtesy: Gita Press gorakhpur
Based on the translations of Swamynath Atreyar Thanjavur.