!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि
A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.

When the connection with the Divine happens, no matter where you are, you can achieve and get what you wish for. Whatever blessing you give starts to manifest.

- Sri Sri Ravi Shankar

Friday, January 31, 2020

அற்புத ஞானத்தின் விளக்கம்"

" அற்புத ஞானத்தின் விளக்கம்"
Courtesy: Madam Anuradha Viswesam.


ஞானத்தை அறிந்துகொள்வதில் அளவில்லா ஆர்வத்துடன் பணிவுடன் அர்ஜுனன் அதைப் பற்றிய விளக்கத்தை கண்ணனிடம் கேட்டவுடன் உள்ளம் மகிழ்ந்து கருணையுடன் விவரிக்கின்றார்,
" ஞானம் தேsஹம் ஸவிஜ்ஞாநமிதம்
வக்ஷ்யாம்ய சேஷத: |
யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூயோ Sந்யஜ்-
ஜ்ஞாதவ்யமவசிஷ்யதே ||

(7 - 2)
" எதை அறிந்து கொண்டபின் இது விஷயமாக மேலும் அறிந்து கொள்ள வேண்டியது வேறு எதுவும் எஞ்சியிராதோ , விக்ஞானத்துடன் கூடிய இந்த ஞானத்தை முழுமையாக நான் உனக்குச் சொல்வேன்."
இதில் ஞானம் உயர்ந்தது.
விக்ஞானம் அடைமொழி.
இங்கு இவ்வுலகம் பகவானிடம் இருந்தே தோன்றி பகவானிடமே லயமடைகிறது என்று அறிதல் ஞானமாகும். .
அனைத்தும் பகவானே,
பகவாேனே அனைத்துமாக இருக்கிறார்,
பகவானைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது.....
என அனுபவத்தில் உணர்தல் விக்ஞானம் எனப்படும்,
ஒருவரின் அனுபவம் முழுவதுமாக புத்திக்கு வருவதில்லை.
புத்திக்கு வருமளவு மனதிற்கு வருவதில்லை.
மனதில் இருப்பதை முழுவதுமாக விண்டுரைக்க முடிவதில்லை
இப்படி இருக்க பகவானுடைய அனுபவத்தை ஒருவரால் எப்படி விவரிக்க முடியும்?
மனிதர்களால் இது சாத்தியமில்லை.
பகவானை அறிந்துகொள்ள ஆர்வம் உடையவர்களுக்கு பகவான் தன்னை பற்றி அரிய வைக்கின்றான் என்பதைத்தான் இப்படி சொல்கிறார்.
"ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவைன்தான் சித்திபெற முயல்கிறான். அப்படி முயல்கிறவர்களிலும் யாரோ ஒருவன்தான் தத்துவரீதியாக என்னை அறிகிறான். | "
தர்மாத்மா, வைராக்யம் நிறைந்தவைன், ஞானி, ஜீவன் முக்தன், பிரம்மத்தில் லயித்தவன்.......
அனைவரிலும் பகவானிடம் ஆட்பட்டிருக்கும் பக்தனே மிகமிக அரியவன் என்று மானஸம் கூறுகிறது.
தன்மீது பிரேமை கொண்ட பக்தனுக்கே தன்னுடைய அரிய அனுபவத்தை உணர வைக்கின்றார்.
பக்தியில் லயிப்பவர்கள் முக்தியைக் கூட விரும்புவதில்லை.
காரணம் அளவில்லா கருணையுடன் இவர்களை எதிலும் சிக்கிக்கொள்ள பகவான் விடுவதில்லை.
இந்த உலகம் எப்படி தோன்றுகின்றது தன்னிடமிருந்து என்று விளக்க ஆரம்பிக்கின்றார்
பஞ்சபூதங்களுடன் மனம் புத்தி அஹங்காரம் என்னும் எட்டு விதமான பிரிவு பட்டதாக இதுவே அபரா எனும் ப்ரக்ருதி.
ப்ரக்ருதியில் இருந்து வேறுபட்டதாக ஜீவனாக அமைந்துள்ளது பரா எனப்படும் ப்ரக்ருதி,
" ஏதத்யோ நீதி பூதாநி
ஸர்வாணீத்யுபதாரய |
அஹம் க்ருத்ஸ் நஸ்ய
ஜகத: ப்ரபவ ப்ரலயஸ்ததா || "" 7-6)
" எல்லா ப்ராணிகளின் தோற்றத்திற்கும் அபரா என்னும் இவ்விரு பிரக்ருதிகளின் கலப்பே காரணமாகிறது என்று தெரிந்துகொள்
நானே எல்லா உலகுக்கும் தோற்றுவாயாகவும் | அவ்வாேறே அடங்கும் இடமாகவும் உள்ளேன், "
இதில் மறைந்துள்ள வியக்கத்தக்க உண்மை என்னவென்றால்........
ஜீவனின் மறுபிறவிக்கு பிரக்ருதியிடம் ஆசை பற்று எனும் தொடர்பு தான் காரணமாகின்றது.
அவரவர் குணங்கள் தான் காரணம்.
" மத்த: பரதரம் நாந்யத் -
கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய |
மயி ஸர்வமிதம் ப்ரோதம்
ஸுத்ரே மணிகணா இவ || (7-7)
" அர்ஜுன |
என்னைக் காட்டிலும் வேறு ஒரு உயர்ந்த காரணம் இல்லை
இவ்வுலகனைத்தும் நூலில் நூலினால் ஆன மணிகளைப் போல என்னிடம் கோர்க்கப்பட்டுள்ளன. "
" ரஸோSஹமப்ஸு கெளந்தேய
ப்ரபாஸ்மி சசிசூர்யயோ 
ப்ரணவ: ஸர்வேே தேஷு சப்த:
கே பெளருஷம் ந்ருஷு|| (7-8)
" குந்தியின் புதல்வனே !
நீரில் சுவையாகவும் ,
சந்திர, சூரியர்களில் ஒளியாகவும் வேதங்களனைத்திலும் ஓங்காரமாகவும் ஆகாயத்தில் ஒலியாகவும் ( மற்றும்) மனிதர்களிடம் திறமையாகவும் நான் இருக்கிறேன்."
பகவானின் வாக்கினால் அவரைப் பற்றி அறிந்து கொள்ளும் பொழுது மேன்மேலும் பக்தி பெருகுகின்றது.
இந்த உலகம் பூராவும் பகவான் நிறைந்துள்ள

Friday, January 17, 2020

LIVE : Gayatri Mantra Meaning : गायत्री मंत्र जाप : ગાયત્રી મંત્ર : | Om...

Saturday, December 28, 2019

Kashi Vishwanath Darshan and Mangala Aarti by Dr. Vijay Rana

Kashi Vishwanath Darshan and Mangala Aarti by Dr. Vijay Rana