முகப்பு
ஸ்வதர்மம் என்று நாம் எதை நினைக்கிறோம் ?
சட்டம் என்ன சொல்கிறது ?
நியாயம் என்ன ?
தர்மம் என்ன ?
இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்வதர்மம் என்றால் என்ன என்பதை எல்லாம் நான் ஒரு முப்பது ஆண்டுகட்கு முன்பு ஒரு ஆவணத்தில் படித்ததில் சிலவற்றினை இங்கு பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.
சட்டம் சமூக விதிகள், நாட்டின் ஒவ்வொரு குடி மகனின் உரிமைகளையும் அவன் பொறுப்புகளையும் சொல்கிறது. சட்டம் நாட்டிற்கு நாடு வேறு படுவது இயற்கையே. நியாயம் என்பது சட்டத்திற்கு ஒரு படி மேலே என்று சொல்லலாம்.
சாதாரணமாக, நியாயமாக இருப்பதெல்லாமே சட்டம் சொல்லாது அல்லது சொல்ல இயலாது. சட்டத்திற்கு ஒரு வரை இருக்கிறது. நியாயம் அந்த வரைக்கு மேல் உள்ளது. உதாரணமாக லௌகீக விஷயங்களை எடுத்துக்கொண்டால், ஒருவனிடம் நான் ரூபாய் ஆயிரம் கடன் வாங்கி ஒரு பிராமிஸரி நோட் எழுதிக்கொடுத்திருக்கிறேன். இந்த ஆவணம் சட்டப்படி ஒவ்வொரு மூன்று வருடம் ( சில மானிலங்களில் இரு வருடம் மூன்று மாதங்கள்) புதுப்பித்துக்கொள்தல் வேண்டும். நான்கு வருடம் ஆகிவிட்டது. கடன் கொடுத்தவன் என் மேல் வழக்கு தொடுத்தால் அந்த வழக்கினை நீதிமன்றம் காலம் கடந்து விட்டது ( time barred ) என்று சொல்லி தள்ளுபடி செய்துவிடும். கடன் கொடுத்தவனுக்கு சட்டப்படி ஒன்றும் செய்ய இயலாது. ஆனால், கடன் வாங்கினது உண்மை அல்லவா? நியாயப்படி கை நீட்டி கடன் வாங்கியவன் அதை திருப்பித் தர வேண்டுமல்லவா ? சட்டம் செய்ய இயலாததை நியாய உணர்வு செய்யும். ஆகவே நியாயம் சட்டத்தை விட பெரிது.
சட்டத்திற்கும் நியாயத்திற்கும் மேல் உள்ள படி தர்மம். தர்மம் என்றால் பிச்சை போடுவது அல்ல. தர்மம் செய் என்றால் உனக்கு என்று விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்.
"நமது கடமை என்ன?" என்பதில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் வருவது சாத்தியமே. சகோதரர்களுக்கு இடையிலேயே பிதுரார்ஜித சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் என்ன உரிமை இருக்கிறது என்பதை விட அவர்கள் தமது தாய் தந்தையரை அவர்கள் முதிய வயதில் யாருடைய பாதுகாப்பில் இருக்குவேண்டும், இந்த விஷயத்தில் அவரவர்கள் கடமை என்ன என்பதில் சண்டை வந்து விடுகிறது
இந்தக் காலத்தில். தனக்கும் மிஞ்சிய அபரிதமான சொத்துக்கள் ஒருவனிடம் இருக்கும்பொழுது அதிலிருந்து வரும் வருமானத்தில் இருந்து ஒரு பகுதியை ஏழை எளியவருக்கு தானம் செய் . பில் கேட்ஸ் செய்கிறார்.பிர்லா அறக்கட்டளைகளை நாம் பார்க்கின்றோம். நமது தேசத்தந்தை காந்தி சொன்னார்: நமது சொத்துக்களுக்கு நாம் ஒரு அறக்காவலர் ( trustee) என்ற மனப்பான்மை சொல்லப்போனால் ஒரு மனப்பக்குவம் வரவேண்டும் என்றார். நம்மில் 99.9 விழுக்காடு அது வருமா என்பது சந்தேகமே.
ஐயம் இட்டு உண் என்பது முது மொழி. நம்மைப்போல் பிறரையும் எண்க. ஊரோடு ஒத்து வாழ். இவையெல்லாம் தர்மம் என்பதற்கு ஒரு உதாரணமாகச் சொல்லலாம். இந்த தர்மத்தைச் செய்வதிலே ஒரு சித்த சுத்தி வேண்டும். இயல்பாக ஏற்படுகின்ற விருப்பு வெறுப்பு நிலைகளைக் கடந்தால் மட்டுமே நமது சித்தம், மனம் நிர்மலமாக, மாசற்றதாக ஆக இயலும். அந்த விருப்பு வெறுப்பு, காய்தல்-உவத்தல் நீங்கிய நிலையிலே, தனக்கென வாழாது பிறர்க்குரியவராக தன்னையே நினைக்கும் மனம் நமக்கெல்லாம் வரும்பொழுது நாம் தர்மத்தை செய்கின்றோம் என எண்ணலாம்.
மனம் போகும் வழியில் மனிதன் போகலாமா என்று நமது கவி அரசர் கண்ணதாசன் ஒரு தடவை பாடினார் இன்று நாட்டில் உலகில் தேவைக்கு அதிகமான பொருட்கள் தேவையே இல்லாத பொருட்கள் எல்லாமே விளம்பரங்களின் உத்தியினால் வியாபாரம் ஆகின்றன. அந்த நிலையில் நீ உனது தர்மத்தைச் செய் என்று வியாபாரியிடம் சொன்னாலோ அல்லது வாங்குபவரிடம் சொன்னாலோ அது கேலிக்கு உரியதாகவே இருக்கிறது. தேவையற்ற பொருளை தேவையில்லாத நபர்களிடம் விற்பது இன்றைய கால நிலை.
மனித மனம் தேவையற்ற பொருட்களின் பால் நிலைத்து நிற்கும்போது, அவனை நோக்கி நீ தர்மத்தை செய் என்றே சொல்ல இயலாது . அந்த நிலையில் உன்னுடைய ஸ்வ தர்மம் என்று சிந்தனை செய் என்று சொல்ல முடியுமா ?
இந்த காலத்தில் ஸ்வ தர்மம் என்றால் என்ன ? நாளை பார்ப்போம்.
...தொடரும்