நாம் என்ன கொண்டு வந்தோம்
ஒன்றும் இல்லை. ஒன்றும் எடுத்துக் கொண்டு போகப்போவதும் இல்லை. இடையில் கிடைப்பதை எல்லாம் எனது எனது என்று ஏதோ ஒன்று நம்முள் இருந்து சொல்லிக்கொண்டே இருக்கிறதே ? அந்த " எனது " என்ற நினைப்பில் இருந்து விடுபடுவது எப்படி ?
ஈஸ்வர த்யானம் ஒன்றுதான் வழி. அந்த பரமேஸ்வரன் அனுக்ரஹம பண்ணினது தான் எல்லாமே என்ற நினைப்பு வரவேண்டும். அதற்கான முதற் சிந்தனை .
மம என்பதில் இருந்து ந மம என்று நமக்கு உள் மனம் உறுதியாகச் சொல்லவேண்டும்.
அது எப்படி சாத்தியம்?
மேற்கொண்டு நீங்கள் படிப்பதும் ந மம.
எழுதியவர் ஸ்ரீ திருமூர்த்தி வாசுதேவன் அவர்கள். எனது வலை நண்பர். பாக்யவான். உணர்ந்து எழுதியிருக்கிறார்.
அவர் யார் எனத் தெரிய, படித்து முடிந்தபின் தலைப்பைச் சுடவும்.அவரது வலைப்பக்கத்திற்கு தொடர்ந்து சென்று படிக்கவும். மேலே நீங்கள் படிப்பது அவர் எழுதியது.

ந மம!
என்னுடையதில்லை.
பகவானே நீயாக உவந்து இதை எனக்கு கொடுத்து இருக்கிறாய். இதில் என் முயற்சி மிகச்சிறிதே! இது என்னுடையதில்லை, உன்னுடையதே! இப்படி ஒரு மனோ பாவம் வர வேண்டும். இதற்குப்பின் அந்த அன்னத்தை பிரசாதமாக எடுத்துக்கொள்கிறோம்.
அக்னியில் இடுவதானால் பிரச்சினை இல்லை. அது அக்னியால் ஜீரணிக்கப்படும். ஆஹுதி செய்தி மீந்ததை ப்ரசாதமாக எடுத்துக்கொள்வோம். கோவிலில் வினியோகம் ஆகிவிடும். வீட்டில் செய்தால் என்ன செய்வது? யாருக்காவது கொடுத்துவிடுவதே மிகசிறந்தது. பிரசாதமாக கொஞ்சம் வைத்துக்கொள்ளலாம்.
"நீ தினசரி பூஜை என்கிறாயே, நிவேதனம் என்கிறாயே, அப்புறம் நீதானே சாப்பிடுகிறாய்? நிவேதனம் செய்தது கொஞ்சமாவது குறைந்ததா? கடவுள் இருந்து அவர் இதை சாப்பிட ஆரம்பித்தால் யாரும் நிவேதனம் செய்ய மாட்டீர்கள்." இப்படி சிலர் கேலி செய்வதுண்டு. நிவேதனம் என்றால் சாப்பிட வைப்பது அல்ல. காட்டுவது. கண்டு அருளப்பண்ணுதல் என்பர் ஸ்ரீ வைஷ்ணவர்கள். இது பலருக்கும் - ஆன்மீக நண்பர்கள் உள்பட- தெரியவில்லை. அதனால் நிவேதனம் செய்யும் போது சாப்பிட ப்ராணாஹுதி செய்வது போலவே செய்கிறார்கள்.
தினசரி நிவேதனமே இதே தாத்பர்யம்தான். என்னுடையதில்லை, உன்னுடையது. இப்படி செய்தால் உணவில் உள்ள குற்றங்களை பகவான் நீக்கி விடுவான் என்பது நம்பிக்கை. காயத்ரி ஜப யக்ஞத்தில் சமைக்க வந்த ஒருவர் சொன்னது: சாதாரணமாக சமைத்தால் அது சுமார் 4 மணி நேரம் கழித்து ருசி மாற ஆரம்பித்துவிடும். ஆனால் அதை நிவேதனம் செய்து இருந்தால் ருசி மாறாமல் அப்படியே இருக்கிறது என்பது என் அனுபவம்!
சரி, ஏன் இந்த ந மம? நாம் என்ன கொண்டு வந்தோம் பிறந்த போது? இந்த காற்றும், நீரும், மண்ணும் அவன் கொடுத்தவை. இவற்றை வைத்து கொஞ்சம் மாற்றி உபயோகிக்கிறோம். அவ்வளவே. ஆகவே இந்த உண்மையை அவ்வப்போது நினைவூட்டிக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் நமது மமதை போகும் - கர்வம் நீங்கும். அது நல்ல ஆன்மீக முன்னேற்றத்தை தரும். ஆகவே நாம் சொல்வோம், ந மம!
please cut and paste the URL below: ( to proceed to learn more)
please cut and paste the URL below: ( to proceed to learn more)
http://anmikam4dumbme.blogspot.com/2011/11/blog-post_10.html
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் அன்ன அபிஷேகம் . அது குறித்த பாடல் ஒன்று இங்கே.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் அன்ன அபிஷேகம் . அது குறித்த பாடல் ஒன்று இங்கே.