அசாத்ய சாதகன் அனுமன்
அவன் புகழ் பாடிட இன்று ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது.
மணிராஜ் என்னும் பெயருடன், ராஜேஸ்வரி அவர்கள் வலைக்குச் சென்ற நான் பஞ்ச முக ஆஞ்சநேயர் பற்றி ஒரு பதிவு கண்டேன்.
இன்று காலை எழுந்தவுடன் கணினியில் முதலாக அனுமனைத் தரிசிக்கும் பாக்கியம் திருமதி ராஜேஸ்வரி அவர்களால் கிடைத்தது. அவர்களுக்கு என் நன்றி. பெரிதும் மகிழ்ச்சி பஞ்சேந்திரியங்களையும் தன் வயப்படுத்தி, ராமனை தியானிப்பதிலேயே தன் வாழ் நாளைச் செலவிட ஊக்குவிக்கும் நிதர்சன தெய்வம் பஞ்ச முக ஆஞ்சனேயர். அவர் அஸாத்ய ஸாதகன். எதெயெல்லாம் இயலாதென நினைக்கிறோமோ அவை யாவற்றையும் இயலுமென நிரூபித்துக் காண்பிப்பவர் அந்த வாயுபுத்ரன் அனுமன். ஸ்ரீ ராமன் பெயர் எங்கெலாம் ஒலிக்கிறதோ அங்கேலாம் கண்ணீர் மல்க தியானத்தில் அமர்ந்து இருப்பவர் அனுமன்.

அசாத்ய சாதக ஸ்வாமின், அசாத்ய தவ கிம் வத !!
என்பார்கள். சுவாமி ! தாங்கள் இயலாது என்பதையும் சாதித்து காண்பிப்பவர்கள். தங்களுக்கு இயலாது என்பது எது ?
கூடல் என்னும் பெயரிலே பதிவிடும் குமரன் அவர்கள் " அஞ்சிலே .." எனத் துவங்கும் அனுமன் பாடலுக்கு அருமையாகப் பொருள் சொல்லியிருக்கிறார்.
"அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கை கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்"
அவரது வலைக்குச் செல்ல தலைப்பைக் கிளிக்கவும்.