பஞ்ச பூதங்களும் ப்ரும்மனின் அவ்யக்த நிலையில் தோன்றி, பின் மறையும் நிலையை கீதையின் பதினெட்டாவது ஸ்லோகம் வர்ணிக்கிறது.
அதற்கு முன்னே சிவ தாண்டவத்தை பார்ப்போம்.
இப்போது ஸ்லோகமும் கருத்தும்
அவ்யக்தாத் வ்யக்தவ்ய: ஸர்வா: ப்ரப்ஹவ்ந்த்யஹராகமே
ராத்ர்யாகமே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்த ஸம்ஜ்ஞகே
ப்ரம்மாவின் பகல் ஆரம்பிக்கும்பொழுது, எல்லாவிதமான உயிர்த் துளிகளும்
அவ்யக்த்திலிருந்து ( பிரும்மாவின் சூக்ஷ்ம சரீரத்திலிருந்து) வெளியாகின்றன.
மேலும், பிரும்மாவின் இரவு ஆரம்பிக்கும்பொழுது அவ்யக்தம் எனப்படும் ப்ரும்மாவின்
சூக்ஷ்ம சரீரத்தில் மறைகின்றன.
அவ்யக்தம் என்றால் என்ன ?
ப்ரக்ருதியின் நுண்ணிய விளைவே பிரும்மாவின் உடல், அதாவது ஐந்து பூதங்கள்
உண்டாவதற்கு முன் நிலை.