Saturday, May 22, 2010
அனுமன், அந்த அஞ்சனா புத்ரன், அஸாத்ய் ஸாதகன், ராம் பக்தன்,
அனுமந்தா அனுமந்தா
அஞ்சனை மைந்தா அனுமந்தா!
அனுமந்தா அனுமந்தா
ஆஞ்ச நேயா அனுமந்தா!
ஆஞ்ச நேயா அஞ்சனை மைந்தா
அஞ்சாத வீரா அனுமந்தா!
துஞ்சாமல் அனுதினம் கண்போல ராமரை
நெஞ்சார போற்றிடும் அனுமந்தா!
கதிரவன் தன்னை பழமென்று எண்ணி
கைகளில் பிடித்தாய் அனுமந்தா!
காற்றினில் ஏறி கடலினைக் கடந்து
இலங்கையைப் பொடித்தாய் அனுமந்தா!
புத்தியில் பக்தியில் சக்தியில் உனக்கு
நிகரில்லை எவரும் அனுமந்தா!
அத்தனை இருந்தும் அடக்கத்தின் உருவாய்
திகழ்பவன் நீயே அனுமந்தா!
கருத்திட்ட வண்ணன் கமலக் கண்ணன்
கதையினைச் சொன்னால் அனுமந்தா!
கருத்துடன் அமர்ந்து கண்ணீர் பெருக
கேட்டிடு வாயே அனுமந்தா!
நெருப்பிட்ட வாலினை முடிவில் லாமல்
நீண்டிடச் செய்தாய் அனுமந்தா!
விருப்புடன் எந்தன் பக்தியும் அதுபோல்
வளர்ந்திட அருள்வாய் அனுமந்தா!
--கவிநயா
இன்று சனிக்கிழமை.வழ்க்கமாக ஆஞ்சனேயர் சன்னதிக்குச் சென்று அர்ச்சனை செய்வது வழக்கம்.
இன்று இயலவில்லை.
இருப்பினும் அனுமன், அந்த அஞ்சனா புத்ரன்,
அஸாத்ய் ஸாதகன், ராம் பக்தன்,
ராம கானம் எங்கு ஒலிப்பினும் அங்கு பாஷ்ப வாரி பொழிந்துகொண்டு
அமைதியாக தன் இதயத்திலே ராமனை நினைந்து நினைந்து உருகியவன்
அவன் இன்று கவி ந்யா வாயிலிருந்து கவிதயாகப் புறப்பட்டு,
என்னைப் பாடவைத்துவிட்டான்.
என் கண்களைக் குளமாக்கிவிட்டான்.
இதோ ! உங்கள் கானம்.
சுப்பு ரத்தினம்.
Please click at the title to move on to the author of the above song: Ms.Kavinaya.
அனுமனுக்கு அபிஷேகம் இதோ:
Labels:
anjaneya,
Hanumantha