Sunday, April 4, 2010
அஞ்ஞானத்தின் அடிப்படை.
அஞ்ஞானத்தின் அடிப்படை.
பகவான் ரமணரிடம் ஒருவர் வாதம் செய்ய வந்தார்.
வந்தவர்: ஆண்டவனுக்கு உருவம் ஏது ? அவரை உருவத்தில் தொழுவது தவறுதானே ?
பகவான்: அதிருக்கட்டும். உமக்கு உருவம் உண்டா ?
வந்தவர்: ஆம். இதோ தெரிகிறதே !!
பகவான்: மூன்றரை முழு உயரமும், கருப்பு நிறமும், மீசையும், தாடியுமாக இருக்கும் இது தான் நீரா ?
வந்தவர்: ஆம்.
பகவான்: தூங்கும்போது கூட இதுவேதானா ?
வந்தவர்: ஆம். ஏனெனின், விழித்துக்கொண்ட பின்னரும் நான் இப்படித்தானே இருக்கிறேன்.
பகவான்: உடம்பு செத்த பின்பும் நீர் இது தானா ?
வந்தவர்: ஆம்.
பகவான்: அப்படியானால், செத்த உடம்பை அடக்கம் செய்ய உறவினர்கள் வரும்போது, இந்த வீடு என்னுடையது, நான் இங்கேயே இருப்பேன். என்னை வெளியே கொண்டு போய் புதைக்கக்கூடாது என்று இந்த உடம்பு சொல்லுமா ?
அப்பொழுதுதான் வந்தவருக்குப் புரிகிறது. இவ்வுடல் நானல்ல. இதற்குள்ளிருக்கும் உயிர் நான் என்றார்.
பகவான் : இதுவரையில் உடம்பே நான் என்றிருந்தீர். இதுவே அடிப்படையான அஞ்ஞானம். இவ்வஞ்ஞானத்திலிருந்தே மற்றெல்லா அஞ்ஞானனங்களும் உண்டாகின்றன.
இந்த முதல் அஞ்ஞானம்அழியாதிருக்கும் வரையில் மற்ற அஞ்ஞானங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
Courtesy: Thirupathi Devasthana Panchangam.
Please click at the title to know more about Sage Ramana and His Thoughts.