சூரியன்
சீலமாய் வாழச் சீரருள் புரியும்,
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி.
சூரிய போற்றி, சுதந்திர போற்றி,
வீரியா போற்றி, வினைகள் களைவாய்.
சந்திரன்.
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி, திருவருள் தருவாய்.
சந்திரா போற்றி, சத்குரு போற்றி
சங்கடந்தீர்ப்பாய் சதுரா போற்றி.
அங்காரகன் (செவ்வாய்)
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு.
புதன்.
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந்தந்தருள்வாய் பண்ணொலிலானே
உதவியே யருளும் உத்தமா போற்றி.
குரு ( வியாழன் )
குணமிகு வியாழக் குரு பகவானே
மனமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்.
ப்ருகஸ்பதி வியாழப் பரதகுரு தேசா
கிரகதோஷ மினிறி கடாக்ஷித்தருள்வாய்.
சுக்கிரன் (வெள்ளி)
சுக்கிரமூர்த்தி சுபகிரக மீவாய்.
வக்கிரமின்றி வரமிகத் தருவாய்.
வெள்ளி சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே.
சனி.
சங்கடந்தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்.
சச்சரவன்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா.
ராகு.
அரவெனும் ராகு அய்யனே போற்றி.
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக வருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக் கனியே ரம்மியா போற்றி.
கேது
கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்கு களின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி.
புத்தாண்டு தினமான இன்று ( ஜனவரி 1, 2010 ) நாம் எல்லோரும் நவகிரகங்களைத் துதித்து
நல்வழி காண்போம்.
மன அமைதி பெறுவோம்.