விநாயகரின் அருள் பெற வழிகள்
விநாயகரின் அருள் பெற வழிகள்
- தொகுப்பு : எஸ்.சரவணன்
மனதால் நினைத்தாலே ஓடி வந்து அருளும் முதன்மைக் கடவுள் விநாயகர். தன்னை வணங்குபவர்களுக்கு மங்களத்தையும் மன்த்தூய்மையையும் உண்டு பண்ணும் விநாயகரின் அருள் பெறும் வழிகள் சிலவற்றை இப்போது காண்போம்.
செவ்வாய் மற்றும் சனிக்கிழமை விநாயகருக்கு மிகவும் உகந்த நாட்கள். அந்த தினங்களில் செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சற்றி வணங்குதல் மிகவும் சிறந்தது.
சுக்ல சதுர்த்தசியன்று அருகம் புல்லை விநாயகருக்கு சாற்றி வழிபட்டால் வெற்றி என்பது உறுதி. அத்துடன், வலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வழிபட்டோமானால் நல்லருள் பெறுவது நிச்சயம்.
திருமணக்காலத்தை விரைவில் காண விரும்புபவர்கள், மஞ்சள் பிள்ளையாரை நாற்பத்தெட்டு நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடிவைத்து பூஜிக்க வேண்டும்.
குடும்பத்தில் உள்ள வறுமையை அறவே அகற்ற வேண்டுமாயின், வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றி வர வேண்டும். அதேநேரத்தில், பீடைகள் முற்றிலும் விலகுவதற்கு நவகிரக தோஷமுள்ளவர்கள் விநாயகருக்குப் பின்புறம் நெய்தீபம் ஏற்றிவர வேண்டும்.
சுக்ல சதுர்த்தி தினத்தில் குழந்தைகள் பெயரில் விநாயகர் சந்நிதியில் அர்ச்சனை செய்து பென்சில் நோட்டுகளால் உறவினர் அல்லாத 11 குழந்தைகளுக்கு இனிப்புடன் தானம் தந்தால், இவ்வாறு செய்பவர்களின் வீட்டுக் குழந்தைகளுக்கு கல்விச் செல்வம் மிகுந்து வரும்.
குழந்தை வரம் வேண்டுவோர், சதுர்த்தியன்று அரிசி நெய்யைச் சாதமாக்கி பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளையாக பாவித்து தூவினால் விநாயகரின் அருள் கிட்டும்.
நாக்கு பிறழாத குழந்தைகளுக்கு தமிழ் மாதத்தில் 3-வது செவ்வாயன்று விநாயகரை வழிபட்டு இனிப்பு, பழங்களை படைத்து தானமாகத் தந்தால் உடனே தகுந்த பலன் கிடைக்கும்.
இவ்வாறு பல்வேறு விதங்களில் செயல்பட்டால் விநாயகரின் அருளைப் பெறுவது மிகவும் சுலபம் என்பதை மனதில் கொண்டு விநாயகரை வழிபட்டு வந்தால் சுபிட்சம் எப்போதும் கிடைக்கும்.
(மூலம் - வெப்துனியா)
Sunday, September 9, 2007
விநாயகரின் அருள் பெற வழிகள் Vinayaka Chathurthi Festival on 15th September 2007 (Saturday)
Labels:
OM