!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Thursday, August 23, 2012

Swadharma as varied from Dharma

தர்மத்தைச் செய் என்றால்,
சுருக்கமாகச் சொல்லப்போனால்
உன் கடமையைச்  செய், 
என்று தான் பொருள்.

கடமையைச் செய்ய சித்த சுத்தி வேண்டுமே ! மனம் அங்கு இங்கு என்று அலையாது இருக்க வேண்டுமே !

இது என் பொருள் . இவன், இவள, இவர்கள் எனக்கு வேண்டியவர்கள், பந்துக்கள், உறவினர் நண்பர் என்ற நிலை கடந்து எல்லோரையுமே ஒரு குடும்பமாக நினைக்கும் மன பக்குவம் வேண்டுமே !!

தன்னைப போல் பிறரையும் நினைக்கும் மன திடம்,  ஒரு வைராக்கியம் வேண்டும்.
இந்த்ரியங்கள் வசப்பட்டு அவை கூப்பிடும் திசையில் செல்லாது, மறை வழியில் செல்லவேண்டும் என்ற மன உறுதி வேண்டும்.

கீதையில் பகவான் சொல்லுவார்:
इन्द्रियास्येंद्रिस्यार्थे रागद्वेषौ व्यवस्थतौ 
तयोर्न वसमाकचेतौ ह्यस्य परिपन्थिनौ 
ஒவ்வொரு புலனுக்குரிய பொருளிலும் விருப்பு விருப்புகள் மறைந்து கிடக்கின்றன. மனிதன் அவைகளின் பிடியில் அகப்படாது இருத்தல் வேண்டும். ஏன் எனில், விருப்பு வெறுப்பு என்னும் இரண்டே மனிதனின் மேன்மைக்கான பாதையில் இடையூறு விளைவிக்கும் பெரும் எதிரிகள். ( கீதை 1.34 )

இந்த எதிரிகளிடம் இருந்து தன்னை மீட்க ஒரே உபாயம் ச்ரேயோ மார்க்க என்று பகவானால் காட்டப்படும் வழியில் செல்வது தான் 

இது என்ன ?
தனக்கு காட்டப்படும் வழி என்ன ?
தான் என்ன செய்யவேண்டும் என்பதில் குறியாக இருப்பது தான்.
அடுத்தவரது பணி என்ன நமது பணி என்பதை புரிதல் அவசியம்.

தான் செய்யவேண்டியதை விட்டு விட்டு அடுத்தவர் சரியாக செய்யவில்லை என்று அவர்தம் பணியை எடுத்து செய்வது ஸ்ரேயத்தைத் தராது. நமது பண்டிதனை நாம் சிறப்பெனச் செய்கையில் அதில் மரணம் ஏற்படினும் நிரந்தர சுகம். அதை விடுத்து மற்றவர் கர்மங்களில் கவலைகொண்டு அதைச் செய்ய முயற்சிப்பவர்களுக்கு மரண பயம் ஏற்படுகிறது .

श्रेयान्स्वधर्मो विगुणः परधार्मात्स्वनुश्तितात 
स्वधर्मे निधने श्रेयः परधर्मो भयावहः 
(கீதை 1.35)
ஆக முதற்கண் நமது கடமை என்ன நமக்கென  விதிக்கப்பட்ட கருமங்கள் என்ன என்பதில் தெளிவாக இருத்தல் வேண்டும். தெரிவு மட்டும் போதாது. தெளிவும் வேண்டும். அந்தத் தெளிவு நிலைத்து நிற்க வேண்டும்.   உலகத்தே ஆகர்ஷிக்கும் பொருட்களின் மாயையில் உழன்று நமது கடமைகளை மறக்கக்  கூடாது.

இப்போது,  சட்டம், நியாயம், தர்மம் என்பதைப் பார்த்து அதில் இருந்து ஸ்வதர்மம் எப்படி மேலோங்கியது என்று கவனிக்கத் துவங்கியுள்ளோம்.

ஸ்வதர்மம் என்ற சொல்லின் பொருளில் விருத்தி, அதாவது இக வாழ்வினை நடத்த நாம் செய்யும் தொழில் அல்லது கருமங்கள் அடங்குமா ?

நாளை படிப்போம்.