!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





When the connection with the Divine happens, no matter where you are, you can achieve and get what you wish for. Whatever blessing you give starts to manifest.

- Sri Sri Ravi Shankar

Thursday, January 14, 2016

POOJA FOR BHOGI.

 courtesy: VASUDEVAN TIRUMURTHY SIR. 
AANMEEKAM FOR DUMMIES.
THANK U SO MUCH SIR.

இன்று போகியை ஒட்டி செய்ய வேண்டிய பூஜை இந்த்ர பூஜையும் கோ பூஜையும்.

பூஜ விதானம் இதோ:

[பசுஞ்சாணத்தை ஒரு பிம்பமாக பிடித்து வைத்து, அதில் இந்திரனை ஆவாஹனம் செய்து அடுத்து வரும் பூஜையை செய்யலாம்.]

இந்த்³ரபூஜா ||
ஐராவத க³ஜாரூட⁴ம்ʼ ஸஹஸ்ராக்ஷம்ʼ  ஶசீபதிம் |  வஜ்ராயுத⁴ த⁴ரம்ʼ தே³வம்ʼ ஸர்வலோக மஹீபதிம் ||

இந்த்³ராண்யா ச ஸமாயுக்தம்ʼ வஜ்ரபாணிம்ʼ ஜக³த்ப்ரபு⁴ம் |  இந்த்³ரம்ʼ த்⁴யாயேத் து தே³வேஶம்ʼ ஸர்வ மங்க³ல ஸித்³த⁴யே ||

அஸ்மின் கோ³மயபி³ம்பே³ இந்த்³ராணீ ஸமேதம் இந்த்³ரம்ʼ த்⁴யாயாமி, இந்த்³ராணீ ஸமேதம் இந்த்³ரம் ஆவாஹயாமி ||

இந்த்³ராய நம​:, ரத்னஸிம்ʼஹாஸனம்ʼ ஸமர்பயாமி |  ஐராவத க³ஜாரூடா⁴ய நம​:, பாத்³யம்ʼ ஸமர்பயாமி |

வஜ்ரபாணயே நம​:, அர்க்⁴யம்ʼ ஸமர்பயாமி |  ஶசீபதயே நம​:, ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |

 ஸஹஸ்ராக்ஷாய நம​:, ஸ்நபயாமி | ஸ்நானானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |

ஸர்வலோக மஹீபதயே நம​:, வஸ்த்ரம்ʼ ஸமர்பயாமி |

தே³வேஶாய நம​:, உபவீதம்ʼ ஸமர்பயாமி |

இந்த்³ராணீ ஸமேதாய நம​:, ஆப⁴ரணானி ஸமர்பயாமி |

ஜக³த​: ப்ரப⁴வே நம​:, க³ந்தா⁴ன் தா⁴ரயாமி |  க³ந்த⁴ஸ்யோபரி ஹரித்³ராகுங்குமம்ʼ ஸமர்பயாமி |

இந்த்³ராய நம​:, புஷ்பமாலாம்ʼ ஸமர்பயாமி |

அர்சனா:
இந்த்³ராய நம​:, மஹேந்த்³ராய நம​:, தே³வேந்த்³ராய நம​:, வ்ருʼத்ராரயே நம​:, பாகஶாஸனாய நம​:, ஐராவத க³ஜாரூடா⁴ய நம​:, பி³டௌ³ஜஸே நம​:, ஸ்வர்னாயகாய நம​:, ஸஹஸ்ர நேத்ராய நம​:, ஶுப⁴தா³ய நம​:, ஶதமகா²ய நம​:, புரந்த³ராய நம​:, த்ரிலோகேஶாய நம​:, ஶசீபதயே நம​:

 இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, நானாவித⁴பரிமலபத்ரபுஷ்பாணி ஸமர்பயாமி |

இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, தூ⁴பம் ஆக்⁴ராபயாமி |

இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, தீ³பம்ʼ த³ர்ஶயாமி |

இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, மஹா நைவேத்³யம்ʼ நிவேத³யாமி |
 நிவேத³னானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |

இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, தாம்பூ³லம்ʼ ஸமர்பயாமி |

இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, கர்பூரனீராஜனம்ʼ ஸமர்பயாமி |  நீராஜனானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |

இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, அனந்த கோடி ப்ரத³க்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி |
ஹே தே³வ கா³ம்ʼ ரக்ஷ, மாம்ʼ ரக்ஷ, மம குடும்ப³ம்ʼ ரக்ஷ |

||  கோ³பூஜா ||
{பிரத்யஷ்யமா பசு இல்லைன்னா அதன் பிம்பம்; அதுவும் இல்லைனா இந்த பசும் சாணத்திலேயே ஆவாஹணம் செய்யலாம். பசுஞ்சாணத்துக்கு எங்கே போக ன்னு கேட்டா... சாரி! விடை இல்லை! }

காமதே⁴னோ​: ஸமுத்³பூ⁴தே ஸர்வ காம ப²ல ப்ரதே³ |  த்⁴யாயாமி ஸௌரபே⁴யி த்வாம்ʼ வ்ருʼஷ பத்னி நமோஸ்து தே ||  கா³ம்ʼ த்⁴யாயாமி |
ஆவாஹயாமி தே³வேஶி ஹவ்ய கவ்ய ப²லப்ரதே³ |  வ்ருʼஷபத்னி நமஸ்துப்⁴யம்ʼ ஸுப்ரீதா வரதா³ ப⁴வ ||  கா³ம்ʼ ஆவாஹயாமி |

காமதே⁴னவே நம​:, ஆஸனம்ʼ ஸமர்பயாமி |  பயஸ்வின்யை நம​:, பாத்³யம்ʼ ஸமர்பயாமி |

ஹவ்ய கவ்ய ப²ல ப்ரதா³யை நம​:, அர்க்⁴யம்ʼ ஸமர்பயாமி |

 க³வே நம​:, ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |

ஸௌரபே⁴ய்யை நம​:, ஸ்நபயாமி, ஸ்நானானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |

க்ஷீர தா⁴ரிண்யை நம​:, வஸ்த்ரம்ʼ ஸமர்பயாமி |
 மஹாலக்ஷ்ம்யை நம​:, ஆப⁴ரணம்ʼ ஸமர்பயாமி |

ரோஹிண்யை நம​:, க³ந்தா⁴ன் தா⁴ரயாமி, க³ந்தோ⁴பரி ஹரித்³ராகுங்குமம்ʼ ஸமர்பயாமி |
ஶ்ருʼங்கி³ண்யை நம​:, அக்ஷதான் ஸமர்பயாமி |

புஷ்பை​: பூஜயாமி |
காமதே⁴னவே நம​:, பயஸ்வின்யை நம​:, ஹவ்ய கவ்ய ப²லப்ரதா³யை நம​:, வ்ருʼஷபத்ன்யை நம​:, ஸௌரபே⁴ய்யை நம​:, மஹாலக்ஷ்ம்யை நம​:, ரோஹிண்யை நம​:, ஶ்ருʼங்கி³ண்யை நம​:, க்ஷீர தா⁴ரிண்யை நம​:, காம்போ³ஜ ஜனகாயை நம​:, ப³ப்⁴லு ஜனகாயை நம​:, யவன ஜனகாயை நம​:, மாஹேய்யை நம​:, நைஶிக்யை நம​:, ஶப⁴லாயை நம​:, நானாவித⁴ பத்ர புஷ்பாணி ஸமர்பயாமி |

த³ஶாங்க³ம்ʼ கு³க்³கு³லூபேதம்ʼ ஸுக³ந்த⁴ம்ʼ ஸுமனோஹரம் |
 தூ⁴பம்ʼ தா³ஸ்யாமி தே³வேஶி வ்ருʼஷ பத்ன்யை நமோஸ்து தே ||
இந்த்³ராய நம​:, இந்த்³ராண்யை நம​:, தூ⁴பம்ʼ ஆக்⁴ராபயாமி |

ஸாஜ்யம்ʼ த்ரிவர்திஸம்ʼயுக்தம்ʼ வஹ்னினா யோஜிதம்ʼ மயா |
  க்³ருʼஹாண மங்க³லம்ʼ தீ³பம்ʼ த்ரைலோக்யதிமிராபஹம் ||
ஜயந்தஜனகாய நம​:, காம்போ³ஜஜனிகாயை நம​:, தீ³பம்ʼ த³ர்ஶயாமி |

தி³வ்யான்னம்ʼ பாயஸாதீ³னி ஶாகஸூபயுதானி ச |
  ஷட்³ரஸாதீ³னி மாஹேயி காமதே⁴னோ நமோஸ்து தே ||
மஹேந்த்³ராய நம​:, மாஹேய்யை நம​:, தி³வ்யான்னம்ʼ க்⁴ருʼத கு³ட³ பாயஸம்ʼ நாரிகேலக²ண்ட³த்³வயம்ʼ  கத³லீ ப²லம்ʼ ஶாக ஸூப ஸஹிதம்ʼ  ஸர்வம்ʼ மஹா
நைவேத்³யம்ʼ நிவேத³யாமி |  நிவேத³னோத்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |

ஏலா லவங்க³ கர்பூர நாக³வல்லீ த³லைர்யுதம் |
  பூகீ ³ப²ல ஸமாயுக்தம்ʼ தாம்பூ³லம்ʼ  ப்ரதிக்³ருʼஹ்யதாம் ||
காஶ்யபேயாய நம​:, ஸௌரப்⁴யை நம​:, கர்பூர தாம்பூ³லம்ʼ ஸமர்பயாமி |

நீராஜனம்ʼ க்³ருʼஹாணேத³ம்ʼ கர்பூரை​: கலிதம்ʼ மயா |
  காமதே⁴னுஸமுத்³பூ⁴தே ஸர்வாபீ⁴ஷ்டப²லப்ரதே³ ||
ஹரயே நம​:, மஹாலக்ஷ்ம்யை நம​:, கர்பூரனீராஜனம்ʼ ஸமர்பயாமி |

இந்த்³ராய நம​:, வ்ருʼஷபத்ன்யை நம​:, வேதோ³க்தமந்த்ரபுஷ்பம்ʼ ஸமர்பயாமி

யானி கானி ச பாபானி ஜன்மாந்தரக்ருʼதானி ச |
  தானி தானி வினஶ்யந்தி ப்ரத³க்ஷிணபதே³ பதே³ ||
ப்ரக்ருʼஷ்டபாபனாஶாய ப்ரக்ருʼஷ்டப²லஸித்³த⁴யே |
 ப்ரத³க்ஷிணம்ʼ கரோமி த்வாம்ʼ ப்ரஸீத³ க்ஷீரதா⁴ரிணி ||
ஜயந்தஜனகோ தே³வ ஸஹஸ்ராக்ஷ: புரந்த³ர: |
  புலோமஜாபதிர் ஜிஷ்ணு: தஸ்மை நித்யம்ʼ நமோ நம​: ||
இந்த்³ராணீபதயே நம​:, வ்ருʼஷபத்ன்யை நம​:, அனந்த கோடி நமஸ்காரான் ஸமர்பயாமி ||

ச²த்ர சாமராதி³ ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்பயாமி ||

யஸ்ய ஸ்ம்ருʼத்யா ச நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதி³ஷு |
ந்யூனம்ʼ ஸம்பூர்ணதாம் ஏதி ஸத்³யோ வந்தே³ தமச்யுதம் ||
மந்த்ரஹீனம்ʼ  க்ரியாஹீனம்ʼ  ப⁴க்தி ஹீனம் ʼ ஶசீபதே |
  யத் பூஜிதம்ʼ மயா ப⁴க்த்யா பரிபூர்ணம்ʼ தத³ஸ்து தே ||

மயா க்ருʼதயா பூஜயா ப⁴க³வான் ஸர்வாத்மக​: ப்ரீயதாம் ஓம்ʼ தத் ஸத்³ ப்³ரஹ்மார்பணமஸ்து |


Wednesday, January 13, 2016

நான் யார்? - 9


குதிரை மாதிரி தாவுதுன்னு நல்லாச்சொன்னீங்க! அது மட்டுமா? முடிவே இல்லாம கடல் அலை போல எண்ணங்கள் வந்துகிட்டேதானே இருக்கு? அது எப்ப ஓயறது; எப்ப மனசு ஏகாக்கிரதையை அடையறது? எண்ணமே வராம இருக்கறதை அப்பறமா பாத்துக்கலாம்!
நம்மோட உண்மை சொரூபத்தை பாத்து அதுல லயம் ஆக ஆக நினைவுகள் எல்லாம் நீங்க ஆரம்பிச்சுடும்.
13. விஷயவாசனை (நினைவு)கள் அளவற்றனவாய்க் கடலில் அலைபோலத் தோன்றுகின்றனவே; அவைகளெல்லாம் எப்போது நீங்கும்?
சொரூபத் தியானம் கிளம்பக் கிளம்ப நினைவு களெல்லாம் அழிந்துவிடும்.
அது சரி! எவ்ளோ வருஷமா இந்த எண்ணங்கள் எல்லாம் இருக்கு! ஒண்ணே திருப்பித்திருப்பி வேற வரது…. என்னை ஏமாத்தினவனைப் பத்தி, அடிச்சவங்களைப்பத்தி, திட்டினவங்களை பத்தி…. இதெல்லாம் கொஞ்சமா நஞ்சமா? அதோட இந்த ஜன்மத்துலதான் இதுன்னா இன்னும் ஏகப்பட்ட முன் ஜன்மங்களில எத்தனை விஷயங்களில ஈடு பட்டு வாசனை எல்லாம் சம்பாதிச்சு இருக்கேனோ! இதெல்லாம் ஒடுங்கிப்போய் சொரூபத்திலேயே இருக்கிறதுன்னா சாத்தியமா என்ன?
அப்படி சந்தேகம் எல்லாம் வரக்கூடாது! வெளியுலகத்தில நமக்கு ஏதாவது வேணும்ன்னா எவ்வளோ சிரமப்பட்டு சம்பாதிக்கிறோம். ஒரு சின்ன வேலை நடக்கணும்; அதுக்காக நடையா நடக்கிறோம். உழைக்கிறோம். என்னென்னவோ த்யாகம் எல்லாம் செய்து அதை அடைய தயாரா இருக்கோம். ஆனா சும்மா இரு ந்னு சொன்னா அதுக்கு ஏன் இவ்வளோ ஆட்சேபணை எல்லாம் வரது? சந்தேகமே இல்லாம விடாப்பிடியா சொரூபத்யானத்தை கடை பிடிக்கணும்.
உம்… நான் எவ்வளோ பாபங்கள் செஞ்சு இருக்கேன் தெரியுமா?
அதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும்! பாப புண்ணியங்கள் செஞ்சது எல்லாம் கடந்த காலம். பாபியோ புண்ணியம் செஞ்சவனோ, யாரா இருந்தாலும் அதையே நினைச்சு வருத்தப்பட்டுக்கொண்டு இருக்காம மேலே நடக்க வேண்டியதை பார்க்கலாம். ஊக்கத்தோட சொரூப த்யானம் செய்யறதுதான் செய்ய வேண்டிய ஒரே விஷயம்.
மனசு என்கிறது ஒண்ணுதான். நல்ல மனசு கெட்ட மனசுன்னு ரெண்டு மனசு இல்லை. அந்த மனசு எது கூட நிற்கிறது என்கிறதை பொருத்து நல்லது கெட்டதாகிறது. நம்மோட வாசனைகள் -பழக்க வழக்கங்கள் - நல்லதா இருந்தா அது நல்ல மனசு; கெட்டதா இருந்தா கெட்ட மனசு.
நம்ம மனசை கவனிச்சு சரி பண்ணவே நமக்கு முடியலை. இதுல எதுக்கு அனாவசியமா மத்தவங்க காரியத்திலேயும் லோக விஷயங்களிலேயும் மனசை அலைய விடணும்? லோகத்தோட விஷயத்தை லோகமே பாத்துக்கட்டும். மத்தவங்க அவங்கவங்க விஷயத்தை பாத்துக்கட்டும். அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு நமக்கு எதுக்கு சிந்தனை? எவ்வளோதான் கெட்டவங்களா இருந்தாலும் அவங்ககிட்ட ஒரு வெறுப்பு வைக்கக்கூடாது. விருப்போ, வெறுப்போ அது தேவையில்லாத இன்னொரு சம்பந்தத்தை ஏற்படுத்துது இல்லையா? இப்படிப்பட்ட பற்றை விடணும்.
யார் யாருக்கு எதை கொடுத்தாலும் அது தனக்கேதான் கொடுக்கப்படுது. தன்னை விட அந்நியமா வேற யாரும் இல்லையே?
ம்ம்ம் இன்னொரு விஷயம் நினைவுக்கு வரது. யாகம் முடிந்து தக்‌ஷிணை கொடுக்கற சமயத்துல சொல்லற மந்திரம். யாகம் செய்தவர் அதோட பலன் தனக்கு வரணும்ன்னு தக்‌ஷிணை கொடுக்கறாராம். செய்து வைத்தவர் ’ரைட்டு; அதுக்கு பதிலா பணம் வரட்டும்’ ன்னு வாங்கிக்கறாராம்! எப்படியோ எதை கொடுத்து வாங்கினாலும் ஒவ்வொத்தருக்குமே ஒவ்வொண்ணு கிடக்கறது. இது புரிஞ்சா யாரும் கொடுக்க மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க.
நான் என்னுது ந்னு ஒரு நினைவு எழுந்தாத்தான் உலகமே எழுகிறது; இது அடங்கினா எல்லாமே அடங்கறது! எவ்வளவுக்கு எவ்வளோ நாம அடங்கி தாழ்ந்து போகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளோ நல்லது. அப்படி இருந்தா எங்கே இருந்தா என்ன? அது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலோ, குச்சு வீடு, குடிசையோ எதானாலும் பிரச்சினை இல்லை! வெள்ளத்துக்கு நடுவிலே இருக்கோமோ நல்ல வெய்யிலோ ஒரு பொருட்டு இல்லை. எங்கே இருந்தாலும் நலமாவே இருப்போம்.
14. தொன்றுதொட்டு வருகின்ற சகல விஷய வாசனைகளும் ஒடுங்கி, சொரூபமாத்திரமாய் இருக்க முடியுமா?
'முடியுமா, முடியாதா?' வென்கிற சந்தேக நினைவுக்குமிடங் கொடாமல், சொரூபத் தியானத்தை விடாப் பிடியாய்ப்பிடிக்க வேண்டும். ஒருவன் எவ்வளவு பாபியா யிருந்தாலும், 'நான் பாபியா யிருக்கிறேனே! எப்படிக் கடைத்தேறப் போகிறேன்?' என்றேங்கி அழுது கொண்டிராமல், தான் பாபி என்னுமெண்ணத்தையு மறவே யொழித்து சொரூபத் தியானத்திலூக்க முள்ளவனாக விருந்தால் அவன் நிச்சயமாயுருப்படுவான். நல்ல மனமென்றும் கெட்ட மனமென்று மிரண்டு மனங்க ளில்லை; மன மொன்றே. வாசனைகளே சுப மென்றும், அசுப மென்று மிரண்டு விதம். மனம் சுப வாசனை வயத்தாய் நிற்கும்போது நல்ல மனமென்றும், அசுப வாசனை வயத்தாய் நிற்கும் போது கெட்டமன மென்றும் சொல்லப்படும். பிரபஞ்ச விஷயங்களிலும் பிறர் காரியங்களிலும் மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவர்களாயிருந்தாலும், அவர்களிடத்தில் துவேஷம் வைக்கலாகாது. விருப்பு, வெறுப்பு இரண்டும் வெறுக்கத்தக்கன. பிறருக் கொருவன் கொடுப்ப தெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்ளுகிறான். இவ்வுண்மையை அறிந்தால் எவன்தான் கொடா தொழிவான்? தானெழுந்தால் சகலமும் எழும்; தானடங்கினால் சகலமு மடங்கும். எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு நன்மையுண்டு. மனத்தை யடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலு மிருக்கலாம்.

Tuesday, January 12, 2016

கிறுக்கல்கள் = 78


ஒரு நாத்திகன் சண்டை போடுவது என்ற முடிவோடு மாஸ்டரிடம் வந்தார். ”ஏதாவது ஒரு.. ஒரே ஒரு பிரயோசனம் ஆன்மீகத்தால வாழ்க்கையில உண்டா சொல்லுங்க!”
மாஸ்டர் சொன்னார், “இதோ ஒண்ணு! யாரேனும் உன் மனசை புண் படுத்த நினைத்தால் அவை பாதிக்காத உயரத்துக்கு நீ உன் மனதை உயர்த்திக்கொள்ளலாம்!”

Monday, January 11, 2016

நான் யார்? -11



ரொம்ப கஷ்டமா தோண்றதே! வேற வழி இல்லையா?
இல்லை.
நான் ஜபம் செய்ய ரெடி. இல்லை ப்ராணாயாமம் செய்யச்சொல்லறீங்களா, அதுக்கும் ரெடி. சாப்பாட்டு நியமம் ஏதாவது சொல்லறீங்களா? கடை பிடிக்க ரெடியா இருக்கேன். ஆனா இது ரொம்ப கஷ்டமா தோண்றதே?
கஷ்டம் என்கிறதெல்லாம் ஒரு மனத்தடைதான். இதுக்கு விசாரணையைத்தவிர வேற வழி கிடையாது. நீங்க சொல்ற மத்த விஷயங்கள் எல்லாம் ஒரு உதவியா இருக்க முடியும். அதுக்கு மேல இல்லை. மனசு அடங்கினாப்போலத்தான் இருக்கும்; ஆனா பட்டுன்னு திருப்பி கிளம்பிடும்.
ப்ராணாயாமத்தாலேயும் மனசு அடங்கும். அதுக்கு தகுந்த குரு வேணும். சும்மா, தானே புத்தகத்தை கண்டு பிடிச்சு செய்தா நிறையவே பிரச்சினைகள் காத்திருக்கு! ப்ராணாயாமம்ன்னா ப்ராணனை மேலாளுவதுன்னு பொருள். வெகு காலம் தகுந்த மேற்பார்வையில் பயிற்சி செய்து ப்ராணனை அடக்க கத்துக்கலாம். மனசும் ப்ராணனும் பிறக்கிற இடம் ஒண்ணே. பிராணன் மனசோட ஸ்தூல ரூபம். மனசு ப்ராணனோட சூக்கும ரூபம்!
மனசோட ரூபம் நினைவுகள்ன்னு பார்த்தோம் இல்லையா? நான் என்கிறதுதான் முதல்ல நமக்கு தோணுகிற நினைவு. அதுக்கே அகங்காரம்ன்னு பேர். இந்த அகங்காரம் எழுகிற இடத்துலேந்துதான் ப்ராணனும் எழுகிறது. அதனால் மனசை நிறுத்த ப்ராணன் நிறுத்தப்படும்; ப்ராணனை நிறுத்த மனசு நிறுத்தப்படும். அப்படியே செய்தாலும் திருப்பி ப்ராணன் எப்போ எழுமோ அப்ப மனசும் எழும்.
சுஷுப்தில மனசு அடங்குதுன்னு பார்த்தோம் இல்லையா? அப்ப ப்ராணனும் அடங்கறதா? இல்லை. அப்படி நடந்தா ஒரு ஆசாமி தூங்கறப்ப ப்ராணன் போயிடுத்து; செத்துபோயிட்டான்னு மத்தவங்க நினைப்பாங்க இல்லே? அதனால் ஈஸ்வர சிருஷ்டியில அப்படி நடக்கறதில்லை. உடம்பை பாதுகாக்க ப்ராணன் செயல் பட்டுகிட்டு இருக்கும். ஒருவர் செத்துபோறப்பத்தான் மனசு ப்ராணனையும் சேர்த்து இழுத்துகிட்டு போகிறது.
ஆக மொத்தம் ப்ராணாயாமம் மனசை கட்டுப்படுத்த உதவலாம். ஆனா மனசை நாசம் செய்யாது.
இதே போலத்தான் மூர்த்தி த்யானமும். இது என் கடவுளின் வடிவம்ன்னு ஒரு கற்பனை செய்து கொண்டு அதையே திருப்பித்திருப்பி த்யானித்துக்கொண்டு இருந்தா மனசு லயமாகிறது. அதாவது அந்த வடிவத்திலேயே நினைச்சு அதை சுத்தியே இருந்து கொண்டு இருக்கு.
சாதாரணமா நாம ஒரு விஷயத்தையே நினைக்கிறதில்லை. சதுரங்க ஆட்டத்தில குதிரை நகருகிற மாதிரி திசை மாறி மாறி தாவிட்டே இருக்கும். இதுல நம்பிக்கை வரலையா? இதை முயற்சி செய்து பாருங்க. இதை படிக்க ஆரம்பிக்கிற முன்னே என்ன நினைச்சுகிட்டு இருந்தீங்க? அதுக்கு முன்னே? அதுக்கும் முன்னே? இப்படியே பின் தொடர்ந்து போனா ஆச்சரியமா இருக்கும். கடைசியா கண்டுபிடிச்ச நினைவுக்கும் மத்ததுக்கும் தொடர்பே இராது!
இப்படி மனசு திசை திரும்பி திரும்பி போகிறதாலத்தான் அதுக்கு பலம் இல்லாம போகிறது. ஒரு விஷயத்தை சுத்தியே அது வட்டம் போட்டுகிட்டு இருந்தா அது இன்னும் பலமா இருக்கும். அதுதான் மூர்த்தி த்யானத்துல நடக்கிறது. ஒரு வடிவத்தையே சுத்தி சுத்தி வரும்போது அதுக்கு பலம் அதிகமா இருக்கு. அது ஏகாக்கிரதை அடைவதா சொல்வாங்க. கான்ஸண்ட்ரேஷன்!
மந்திர ஜபம் செய்யறதும் இதைத்தான். மூர்த்தி த்யானம் விஷுவல், ஜபம் ஆடிட்டரி! ஒரே வடிவத்தை நினைச்சு கொண்டு இருக்கறதும் ஒரு சத்தத்தையே திருப்பித்திருப்பி கேட்கிறதும், இரண்டுமே மன ஏகாக்கிரதையை உண்டு செய்கிறது. அதுவே மனக்குவிப்பு!
மனசால சும்மா இருக்க முடியாது! ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கணும். அதனால அதுவா ஒரு வேலையை தேடி அலையாம நாமளே அதுக்கு ஒரு வேலையை கொடுக்கறோம். மந்திரமோ அல்லது த்யானமோ!
யானை சும்மா இருக்காது. அதை பார்க்கப்போனா அது இப்படீஈஈ ஆடிண்டே இருக்கறதை பார்க்கலாம். எப்பவும் ஏதாவது செஞ்சு கொண்டு இருக்கணும். அதனால பாகன் அதுகிட்ட ஒரு சின்ன கழியை கொடுத்துடுவானாம். அதுவும் சமத்தா அதை பிடிச்சுகிட்டே இருக்குமாம். அது போல ஒரு சின்ன விஷயத்தை மட்டும் செய்ய மனசை ஏவினா அது அலையாம இருக்க வாய்ப்பு அதிகம். ஆனா இதுக்கே நிறைய பயிற்சி வேணும்!
நாம எதை சாப்பிடறோமோ அதுக்கும் நமது எண்ணங்களுக்கும் தொடர்பு இருக்கு. எதையாவது சாப்பிட்டா அதுக்கு தகுந்த படி எண்ணங்கள் கிளைச்சு எழும். இதனாலத்தான் விரதம் இருக்காங்க. விசேஷமான தினங்களில உபவாசம் இருப்பாங்க. உப வாசம் - கூடவே வசிக்கிறது…. அதாவது இறைவன் கூடவே வசிக்கிறது. இன்னிக்கு ஏகாதசி; ஒண்ணுமே சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டு அவங்க அவங்க காரியத்தை பார்க்கறது இல்லே! அதுல என்ன ப்ரயோஜனம்? செய்கிற வேலைக்கு சக்தி இல்லாம போகலாம்! ஒண்ணுமே சாப்பிடாம பூஜை, ஜபம், த்யானம்ன்னு இறைவன் கூடவே இருக்கணும் என்கிறதே விரதத்தோட கருத்து.
எதை சாப்பிடறோமோ அதுக்கும் நமது எண்ணங்களுக்கும் தொடர்பு இருக்குன்னு சொன்னேன் இல்லையா? அத இப்ப விக்ஞான பூர்வமாகவே ஒத்துக்கிறாங்க, ஆயுர்வேதத்தில பெரிய லிஸ்டே இருக்கு. எண்ணை தேய்ச்சு குளிச்சுட்டி எருமைத்தயிர் போட்டு சாதம் ஒரு கட்டு கட்டினா தாமசம் அதிகமாகி நல்ல தூக்கம் வரும்! சாத்வீகமானதை மட்டுமே சாப்டா மனசு வீணா அலையாம விசாரத்துக்கு அனுகூலமா, ஹேதுவா இருக்கும். பகவான் ரமணர் இந்த விஷயத்தில ரொம்பவே ஸ்ட்ரிக்டா இருப்பார்!
12. மன மடங்குவதற்கு வேறு உபாயங்க ளில்லையா?
விசாரணையைத் தவிர வேறு தகுந்த உபாயங்களில்லை. மற்ற உபாயங்களினால் அடக்கினால், மனமடங்கினாற்போ லிருந்து மறுபடியும் கிளம்பிவிடும்.
பிராணாயாமத்தாலும் மன மடங்கும்; ஆனால் பிராணனடங்கியிருக்கும் வரையில் மனமு மடங்கியிருந்து, பிராணன் வெளிப்படும்போது தானும் வெளிப்பட்டு வாசனை வயத்தாயலையும். மனத்திற்கும் பிராணனுக்கும் பிறப்பிட மொன்றே. நினைவே மனதின் சொரூபம்; நான் என்னும் நினைவே மனதின் முதல் நினைவு; அதுவே யகங்காரம். அகங்காரமெங்கிருந்து உற்பத்தியோ, அங்கிருந்துதான் மூச்சும் கிளம்புகின்றது, ஆகையால் மன மடங்கும்போது பிராணனும், பிராண னடங்கும்போது மனமு மடங்கும். ஆனால் சுழுத்தியில் மன மடங்கி யிருந்தபோதிலும் பிராண னடங்கவில்லை. தேகத்தின் பாதுகாப்பின் நிமித்தமும், தேகமானது மரித்து விட்டதோ வென்று பிறர் ஐயுறாவண்ணமும் இவ்வாறு ஈச்வர நியதியால் ஏற்பட்டிருக்கிறது. ஜாக்கிரத்திலும் சமாதியிலும் மனமடங்குகிறபோது பிராண னடங்குகிறது. பிராணன் மனதின் ஸ்தூல ரூபமெனப்படும். மரணகாலம் வரையில் மனம் பிராணனை உடலில் வைத்துக் கொண்டிருந்து, உடல் மரிக்குங்காலத்தில் அதனைக் கவர்ந்து கொண்டு போகின்றது. ஆகையால் பிராணாயாமம் மனத்தை யடக்க சகாயமாகுமேயன்றி மனோநாசஞ் செய்யாது.
பிரணாயாமம் போலவே மூர்த்தித் தியானம், மந்திர ஜபம், ஆகார நியம மென்பவைகளும் மனத்தை அடக்கும் சகாயங்களே. மூர்த்தித் தியானத்தாலும், மந்திர ஜபத்தாலும் மனம்ஏகாக்கிரத்தை யடைகிறது. மனமானது சதா சலித்துக் கொண்டேயிருக்கும். யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியைக்கொடுத்தால் அது எப்படி வேறொன்றையும் பற்றம லதையேபற்றிக் கொண்டு செல்லுமோ, அப்படியே மனதையும் ஏதோ ஒரு நாமம் அல்லது ரூபத்திற் பழக்கினால் அதையே பற்றிக்கொண்டிருக்கும். மனம் அளவிறந்த நினைவுகளாய் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது. நினைவுக ளடங்க வடங்க ஏகாக்கிரத் தன்மை யடைந்து, அதனாற் பலத்தை யடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம்சுலபமாய் சித்திக்கும். எல்லா நியமங்களினுஞ் சிறந்த மித சாத்வீக ஆகார நியமத்தால் மனத்தின் சத்வ குணம் விருத்தியாகி ஆத்மவிசாரத்திற்கு சகாய முண்டாகிறது.

Saturday, January 9, 2016

கிறுக்கல்கள் -77


மாஸ்டருக்கு ஒருவர் பணிவு என்கிற பெயரில் தன்னைத்தானே தாழ்த்திச் சொல்லிக் கொள்ளுவதில் உடன்பாடில்லை. அது போலி என்பார். இந்த கதையையும் சொல்லுவார்.
சர்சில் ஒரு நாள் பாதிரியார் உணர்ச்சி வசப்பட்டு மார்பில் அடித்துக்கொண்டு உரக்கக்கூவி அழுதார். “ஆண்டவரே, நான் கீழிலும் கீழானவன். கடையினும் கடையேன். எனக்கு உங்கள் கருணையை கேட்கக்கூட தகுதி இல்லை. நான் ஒன்றுமே இல்லை. பூஜ்யம். என் மீது இரக்கம் காட்டுங்கள்”
இதை பார்த்துக்கொண்டு இருந்த சர்ச் மணி அடிப்பவனும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டான். அவனும் முட்டி போட்டுக்கொண்டு மார்பில் அடித்துக்கொண்டு உரக்க கூவ ஆரம்பித்தான். “ ஆண்டவரே! நான் பாவி. சூன்யம். என் மீது இரக்கம் காட்டுங்கள்”

இது காதில் விழுந்ததும் பாதிரியார் திரும்பி முறைத்தார். “ ஹா! தோ பாருய்யா, யார் தாந்தான் சூன்யம்ன்னு கூவறது!”