!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Thursday, July 9, 2009

स्कंदर என கூறுவர். स्कंदर என கூறுவர்.


சனத்குமரன் தான் स्कंदन ? சாந்தோக்யத்தில் அப்படி போட்டிருக்கிறதா ? எங்கே உபநிஷத் வாக்கியங்களைத் தர இயலுமா என நண்பர் கண்ணபிரான் அவர்கள் தனது ரசிகர் (Sri R.Devarajan )* டம் கேட்டிருந்தார். அதற்கு பதில் போடலாம் என்று பார்த்தேன், ஒரு பக்கம் போட்டால் யார் படிப்பார்கள் ? தனியாக நமக்கென்ற ஒரு ராஜ்யம் இருக்கிறதே, ப்யூர் ஆன்மிகம், அதில் போட்டுவிடலாம் என்று முனைந்தேன்.

Sanatkumara as Lord Karthikeya

(Boudhayana Kalpa Sutra and Tattrieya Upanished States that Sage Sanatkumara appered as Lord Subramaniya Known as Lord Muruga In south , due to the request of Lord Shiva and Goddess Parvati.Lord Muruga is one of six main Deities of Hindu.)
Courtesy: wikipedia
ததேஷு சுலோகா பஷ்யோ ம்ருத்யும் பச்யதி ரோகம் நோத துக்கதா சர்வாத பச்யத பச்யதி சர்வமாப்நோதி, சர்வஷ் இதி. ஆகார ஸுத்தௌ சத்வசுத்திதி ஸத்வஸுதௌ த்ருவச்ம்ருதிதி, ச்ம்ருதிலம்பே, சர்வக்ரத்தினாம் விபர மொக்ஷஸ் தஸ்மை ம்ருதிதகஷயயா தமசச்பாரம் தச்யதி பகவன் சனத்குமராஸ் த்த ஸ்கந்த இதயா சக்ச்ததே ஸ்கந்தா இத்யாக்ஷச்ததே

எனக்கடைசி வரி முடிகிறது சாந்தோக்கிய உபநிஷத் ஏழாம் அத்தியாயம் கடைசி ஸ்லோகம். இப்படி முடித்தால் என்ன புரியும் என்று
நினைத்து, நாரதருக்கும் சனத்குமரனுக்கும் இடையே நிகழ்ந்த சம்பாஷணையை தொகுத்து தரலாம் என நினைத்தேன்.

அதுவே பின்வருமாறு:

நாரதர் ஒருதரம் சனத் குமாரரிடம் வந்து எனக்கு கற்றுகொடுங்கள் எனக்கேட்டாராம்.
" நீ இதுவரை என்ன கற்றுக்கொண்டிருக்காய்? என அவர் கேட்க,

நாரதரோ " கலை, விஞ்ஞானம், இசை, தத்துவம் இதைத்தவிர வேதறைகள் இத்தனையும் கற்ற பின்னும் எனக்கு மன அமைதி இல்லை. எல்லம் படித்தபின்பும் ஆத்மான்பதை நான் அறியவில்லை. ஆதமாவை அறிந்துகொண்டவன் ஒருவன் துயரபடுவத்திலையாமே ! துயரம் தான் எப்பொழுதுமே என்னுடன் இருக்கிறது. அதில் இருந்து நான் மீள வேண்டும், உம்மை . வந்திக்கிறேன். உதவி செய்யும்" என்றார்.

அதற்கு பதிலளித்த சனத் குமாரன் " நீ படித்ததெல்லாமே வெறும் பெயர்தானே ! பெயரை பிரம்மன் எனக்கொண்டு தியானம் செய்" என்பார்.

நாரதர் கேட்டார்: " பெயரை விட பெரியது ஏதேனும் உளதோ?"

" ஆம். பேச்சு பெயரை விட பெரியதே. பேச்சின் வழியே தான். கல்வியின் பல கிளைகளை நாம் அறிகிறோம். எது சரி, எது தவறு, எது மெய், எது பொய், எது நல்லது, எது கெட்டது, எது மனதுக்கியந்தது எது அவ்வாறு இல்லை என்பதெல்லாமே வாக்கின் வழியேதான். பேச்சு என்று ஒன்று இல்லையெனின், சரியானதும் தவறானதும் எது என்பதை அறியோம், உண்மை, பொய் எது வெனவோ, நல்லது கெட்டது எதுவெனவோ, இன்பம் அளிக்கவல்லது எது அளிக்கவல்லாதது என தெரிவது சாத்தியமில்லை. ஆகவே பிரம்மனை வாக்காக நினைத்து தியானம் செய் எனபார்.

" ஐயா! வாக்கினை விட உயர்ந்தது ஏதேனும் ? "

" ஆம் ! மனம் வாக்கை விட பெரியது. உள்ளங்கையில் இரு நெல் ல்லிப்பழங்களை வைப்பது போல , மனம் பெயரையும், பேச்சையும் தன்னுள்ளே அடக்கும். ஒருவன் புனித வேத றைகளைக் கற்க வேண்டும் என மனதிலே நினைக்கும்போது தான் அவன் கற்கின்றான்; மனதிலே காரியங்களைச் செய்யவேண்டும் என னக்கும்பொழுது தான் அவற்றினைச்செய்கின்றான், இவ்வுலகிலும் அடுத்து வரும் உலகிலும் சந்தோஷமாக இருக்கவீண்டுமேன் எண்ணும்பொழுது தான், அப்பொழுதே சந்தோஷமடைகிறான். ஆதமாவின் உள் உறுப்பு மனமே. மனம் சந்தோஷத்திற்கு ஒரு சாதனம். ஆகவே பிரும்மனை மனதாக எண்ணி தியானம் செய் என்பார்.

நாரதர் தொடர்வார்: " ஐயா ! மனதினும் உயர்ந்தது எதுவும் உண்டோ ? "

" ஆம். மன உறுதி ( மனத்திட்பம் ) மனதை விடப்பெரியது. ஏனெனின், ஒருவன் திடமாக ஒன்றை தன் மனதிலே எண்ணும்பொழுது, அதை தனது வாக்கிலே பேச்சிலே கொணர்ந்து, அதனை தன் வார்த்தைகளில் அந்த உறுதியைப்பிரதிபலிக்கிறான். ஆக, எல்லாமே மன உறுதியில் திடத்தில் வசிக்கிறது எனலாம். ஆக, பிரும்மனை மன உறுதியாக தியானம் செய்"

நாரதர் விடவில்லை. " ஐயா! மன உறுதியை விட பெரிது சிறந்தது ஏதேனும் உண்டோ ?"

" இருக்கிறதே. மன உறுதியை விடா, உறுதியை சீர்தூக்கிச் சிறந்ததெனப் பார்ப்பது பெரிதே. எப்பொழுது ஒருவன் தனது பழைய அனுபவங்களை அலசி, அவற்றின் அடிப்படையில் எதிர்காலத்தில் என்ன வருமென நினைத்து செயல்படுகிறானோ அவன் நிகழ்காலத்தே சரியான உறுதிதனைக்க்கொள்கிறான். ஆக, பிரும்மனை இந்த மன உறுதி மேலாண்மையெனக்கருதி தியானம் செய்."

" இந்த அலசிப்பார்க்கும் சக்திக்கு அப்பாலும் எது " என்பார் நாரதர்.

" உண்டு. மன நிலைப்பு மன உறுதி மேலாண்மையைவிட பெரியது. மனதை ஒரு நிலையாக்கி தியானிப்பவரே இவ்வுலகத்தில் பெரியனவற்றை அடைகின்றனர். சிறியோர் தமக்குள்ளே சண்டையிடுவர், கோள் சொல்வர், ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வர். பெரீயோ மன ஒருமைப்பாட்டினை ப் பெற்றதன் வழியாக அதற்கான பலனையும் அடைகிறார். ஆக, பிரும்மனை மன ஒருமைப்பாடாக எண்ணி தியானம் செய். "

" ஐயா, மன ஒருமைபாட்டினை விட பெரியது ?"

"ஆம். உள் உணர்வு மன ஒருமைப்பாட்டினை விடப்பெரியது. உள் உணர்வு வழியே நாம் கல்வியின் பல கிளைகளை புரிந்து கொள்கிறோம். உள் உணர்வின் காரணமே இவ்வுலகில் சரி, தவறு; நல்லது பொல்லாதது, இனியது, இனியாதது எவை என அறிகிறோம். இவ்வுலகு மட்டுமல்ல, எல்லா உலகத்தையுமே இவ்வுள்ளுணர்வு வழியே தான் உணருகிறோம். ஆக வே இவ்வுணர்வினை பிரும்மனாக நினை. தியானம்செய்" என்பார்.

பிறகும், சனத்குமாரர் தொடர்வார்: " ஆயினும், உண்மையிலே நிலைத்து நில்லும் உண்மையை அறிபவனே உண்மையில் அறிந்தவன் ஆவான் "

" என் மதிப்பிக்குரியவரே ! நான் உண்மை அறிபவனாக விரும்புகிறேன். "

" அப்பொழுது அந்த முடிவிலா உண்மையைத் தெரியவேண்டுமெனக் கேள் "

" ஐயா ! அதே! அதையேதான் கேட்கிறேன் ""

காலத்திற்கும் அப்பாற்பட்ட உண்மையை ஒருவன் அறியும்பொழுதுதான் அதை அவன் இன்னவென்று சொல்கிறான். அதில் லயித்தவன் தன்னை இணைத்தவன் அறிகிறான்.என்றும் நிலைத்து இருக்கும் உண்மையை நம்பிக்கையும் கீழ்படிதலும் உள்ளவனே டைய இயலும்.

"மேலும் நாரதரே ! தன்னை அடக்குவதில் வெற்றி கண்டவனுக்கே ஒரு குரு தோன்றக்கூடும். அது மட்டுமல்ல, தன்னை அடக்குவதில் ஒருவன் மகிழ்ச்சி யடையவேண்டும். இந்த மகிழ்ச்சி என்னவென்க் கேள்."

" ஐயா ! அது பற்றி கேட்கவே விருப்பம்."

" அளவு கடந்ததெதுவே அதுவே மகிழ்ச்சியின் ஊற்றாகும். அளவுக்கு உட்பட்ட எதிலும் இன்பம் இல்லை. அளவற்றதிலே தான் இன்பம் இருக்கிறது. இந்த " அளவற்றதை"ப்பற்றி தெரிய விரும்புவாயா ?

" ஆம் ! ஐயா ! "

எவனொருவன், ஒன்றைத் தவிர மற்ற எதையுமே காணானோ, கேளானோ, அறியானோ, அந்த ஒன்றே அளவற்றது என அறிவான். இன்னொன்றை ப்பார்ப்பவனும், கேட்பவனும் அறிபவனும் அளவுக்குட்பட்டதையே அறிகின்றனர். அளவுகடந்தது எனச்சொல்லியது நிலைத்திருப்பது. மரணமில்லாதது. அளவுக்குட்பட்டது நிலையில்லாதது. மரணத்திற்குட்பட்டது.

"அந்த "அந்த அளவற்றது " எதில் தங்கும் ?"

" அது தன் ஒளியிலே ! புகழிலே !! இல்லை இல்லை. அது எல்லாம் எல்லைகள். அவை எல்லாமே அளவுக்குட்பட்டவை. இப்புவியில் பசுக்கள், குதிரைகள், யானைகள், தங்கம், அடிமைகள், மனைவி, நில புலன்கள், வீடுகள் யாவுமே மனிதனின் புகழைச் சொல்பவை. ஆயினும் இவை எல்லாம் வறியன. ஓர் அளவிற்குட்பட்டவையே.

அளவுகடந்தது ஒன்று எனச் சொல்கையில் அது தன்னிலே தங்காது வேறு எங்கே தங்க இயலும்!!! அளவுகடந்தது எதுவோ அது கீழே, மேலே, பின்புறம், முன்புறம், வலதுபக்கம், இடது பக்கம் யாவற்றில். இந்த அளவுகடந்ததுவே ஆத்மனாம். ஆத்மா கீழே, மேலே, பின்னால்,முன்னால், வலப்பக்கம், இடப்பக்கம் எல்லாவற்றிலும். ஆத்மா சொல்லும்: நான் இது எல்லாமே. எவன் ஒருவன் இந்த ஆத்ம ரகசியத்தை, உண்மையை அறிந்து அதில் தியானம் செய்கிறானோ அவனுக்கு ஆத்மா புலப்படுகிறது. அவன் ஆத்மாவில் சந்தோஷிக்கிறான். அவன் தன் எஜமானன் ஆகிறான். உலகெங்களுக்கெல்லாம் எஜமானன் ஆகிறான். அடிமைகள் இந்த உண்மையை அறியாதவர்.

எவனொருவன், நானே அளவுகடந்தது எனும் உண்மையை, ஆத்மா தான் பிரும்மன் எனும் உண்மையைப் புரிந்து தெரிந்து, தெளிந்து அதில் தியானிக்கிறானோ, அவனுக்கு அண்டத்திலில்ருந்து எளிவரும் எல்லா ஆதார சக்திகளும், அதாவது, நெருப்பு, நீர், வாயு முதலானவையும், மனம், திட சித்தம், பேச்சு போன்றவையும், வேத ஒலிகளும் ஏன்? அண்டமுழுவதுமே அதிலிருந்து தான் வருகின்றன எனக் காண்கிறான்.


" இது எழுதப்பட்ட வாக்கியம். எவன் ஒருவன் இந்த காலத்திற்குட்படாத அளவற்ற உண்மையை அறிகிறானோ, அவனை மரணமோ, வியாதியோ, வலியோ அண்டுவதில்லை.அவன் எல்லாவற்றையுமே ஆத்மாவாகக் கருதி அவற்றை எல்லாமே அடைகிறான்.


ஆத்மா என்பது ஒன்றே. அதுவே எல்லாமா ஆயிற்று.புலன்கள் சுத்தமாகையில், இதயம் சுத்தமாகிறது. இதயம் சுத்தமாகும்பொழுது, ஆத்மனைப்பற்றிய நினைப்பு தொடர்ந்து இடைவிடாது உள்ளது. இவ்வாறு இடைவிடா தொடர்நினைப்பினால், எல்லாத் தளைகளும் நீங்கி, விடுதலை கிட்டுகிறது.


இவ்வாறாக சனத் குமாரன் நாரதருக்கு பாடம் புகட்டுவார். இதய சுத்தியுள்ள அவரோ இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குப் போக வழி கண்டார்.

பிரும்மன் எனும் நகரத்தினுள்ளே உடல், அதனுள்ளே இதயம், அவ்விதயத்துக்குள்ளே ஒரு சிறிய குகை. அக்குகை ஒரு தாமரை வடிவில், அதனுள் வசிக்கும் அதனை என்னேரமும் தியானித்து அறிந்து தெளிவடையவேண்டும்.

அப்படியெனின், அச்சிறு குகையில் இதய தாமரையில் எதைப்பற்றி சிந்தனையும், தியானமும், விசாரமும், புரிதலும் வேண்டும் ?

அண்டம் எத்துணை பெரிதோ அத்துணை பெரிது இதயத்துத் தாமரையில் குடி இருக்கும் அண்டமுமே. அத்தாமரையினுள்ளே, அவ்வுலகம், இவ்வுலகம், கதிரவன், நிலா, மின்னொளி, நட்சத்திரங்கள் யாவையுமே உள. பெரிதில் உள்ள யாவும் இச் 'சிறிய' திலும் உள்ளன. அங்கே இருக்கும் எல்லாமே, இருப்பவை, ஆசைகள் எல்லாமே பிரும்மபுரியில் உள்ளன. அப்பொழுது முதிய வயதில் உடல்

மரணத்தில் கரையும்பொழுது இவையெல்லாம் என்னஆகும்.

உடலுக்குத்தான் முதிய வயது. இதயத் தாமரை கிழமாவது இல்லை. உடல் மரணமடைகிறது. அது சாவதில்லை. இதயத்தாமரை, எங்கே பிரும்மன் எல்லாப்புகழுடனும் ஒளியிடனும் வீற்றிருக்கிறானோ, அது அவன் உடல் அல்ல. அது பிரும்மனின் உண்மை இருப்பிடம். அதில் நிலையாய் நின்றால், எந்த ஒரு செயலினாலும் தொடப்படாது நிற்கும் ஒருவன் வயதானவன் ஆவதில்லை. அவனுக்கு சாவு இல்லை. துன்பத்திலிருந்தும், பசி, தாகம் இவற்றிலிருந்தும் விடுதலை ஏற்ர்ர்ரவானாகிர்றான். அவனது ஆசைகள் சரி என்பதால் அவை பூர்த்தி ஆகின்றன.

நாரதருடைய கலக்கம் நிங்கிடவே பகவான் சனத் குமாரர் தனது இருள் கடந்த நிலையை காட்டி அருளினார்.
அவரை ( சனத் குமாரரை ) स्कंदर என கூறுவர். स्कंदर என கூறுவர்.
==============================================================
**
https://www.blogger.com/comment.g?blogID=18001940&postID=8849159743317720178

//ஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்பதைச் சாந்தோக்ய உபநிஷத்தும்,த்ரிபுரா ரஹஸ்யமும் தெரிவிக்கின்றன//

ஓ...உபநிடதமே சொல்கிறதா?

//'ஸனத்குமாரர் இருள் கடந்த நிலை காட்டினார்;அவருக்கு ஸ்கந்தன் என்று பெயர்;ஸ்கந்தன் என்று பெயர்’ – உபநிஷத் இரண்டு முறை முத்தாய்ப்பு வைக்கிறது//

முடிந்தால், உபநிடத வரிகள் தர முடியுமா தேவ் சார்?

10:07 AM, July 06, 2009