!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Sunday, April 20, 2008

ஆஞ்சனேயரை ஸ்மரிப்பவர்களுக்கு




ஜகத்குரு ஸ்ரீ காஞ்சிப் பெரியாவாள் அருள் வாக்கு.

புத்திர் பலம் யசோர் தைர்யம் நிர்பயத்வம் ஆரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்.

ஆஞ்சனேயரை ஸ்மரிப்பவர்களுக்கு அவர் என்னென்ன அனுக்கிரஹிக்கிறார் என்று இந்த‌ ஸ்லோகம் சொல்கிறது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக் வன்மை, இத்தனையும் தருகிறார் அவர். சாதாரணமாக இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லாமல் இருப்பான்.பெரிய‌
பலசாலி புத்தியில்லாமல் இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக இருப்பான்.
பயந்தாங்கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும் அவற்றைப் பிரயோகிக்க‌
சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும்
தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான். இந்த மாதிரி
ஏறு மாறான குணங்கள் இல்லாமல், எல்லா ஸ்ரேயஸ்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார்
ஆஞ்ச நேயர். காரணம், சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத பல குணங்கள்,
சக்திகள், அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருந்தன். நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவை
கூட அவரிடம் ஸ்வபாவமாகச் சேர்ந்திருந்தன. உதாரணமாகப் பெரிய புத்திசாலிக்கு அகங்காரம்
இல்லாத பக்தி இராது. ஆஞ்ச நேயரோ தேக பலம், புத்தி பலம், இவற்றைப்போலவே வினயம்,
பக்தி, இவற்றிலும் முதல்வராக நிற்கிறார். வலிவு இருக்கிறவன் கெட்ட வழியில் போவதுண்டு.
அவனுக்கு பக்தி இருக்காது. பக்தி இருக்கிறவர்களுக்கு கூட அதன் ஞானத்தின் தெளிவு இலலாமல்
மூட பக்தியாகவோ, முரட்டு பக்தியாகவோ இருப்பதுண்டு. ஆஞ்ச நேயர் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியின்
பரம பக்தராக இருக்கும்போதே பரம ஞானியாகவும் இருந்தார். எப்படி தக்ஷிணாமூர்த்தி ஸனகாதி
முனிவர்களை முன்னிட்டு உபதேசம் செய்கிறாரோ, அப்படியே ஸ்ரீராமன் ஆஞ்சனேய ஸ்வாமியை
முன்னால் வைத்துக்கொண்டு ஞான உபதேசம் செய்கிறார் என்று "வைதேஹி ஸஹிதம் " ஸ்லோகம்
சொல்கிறது. பைசாச பாஷையில் கீதைக்குத் தத்துவமயமான ஒரு பாஷ்யம் இருப்பதாகவும் அது
ஆஞ்ச நேயர் செய்தது என்றும் சொல்வார்கள். அப்படிப்பட்ட தத்துவ ஞானி அவர் ஒன்பது வியாகரணமும்
தெரிந்த ' நவ வியாகரண வேத்தா ' என்று ராமரே அவரைப் புகழ்கிற அளவுக்குப் பெரிய கல்விமான்.

ஞானத்தின் உச்ச நிலை, பலத்தில் உச்ச நிலை, பக்தியில் உச்ச நிலை, வீரத்தில் உச்ச நிலை, கீர்த்தியில்
உச்ச நிலை, சேவையில் உச்ச நிலை, வினயத்தில் உச்ச நிலை இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற‌
ஸ்வரூபம் ஒன்று உண்டு என்றால் அது ஆஞ்ச நேய ஸ்வாமிகள் தான்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய பிரம்மசர்யத்தைச் சொல்லவேண்டும். ஒரு க்ஷணம் கூடக்
காமம் என்கிற நினைப்பே வராத மஹா பரிசுத்த மூர்த்தி அவர்.

அவரை நம் தேசத்தில் அனுமார் என்போம். கன்னடச்சீமையில் அவரே ஹனுமந்தையா. சித்தூருக்கு
வடக்கே ஆந்திரா முழுவதும் ஆஞ்சனேயலு. மஹாராஷ்டிரம் முழுவதும் மாருதி. அதற்கும் வடக்கில்
மஹாவீர் .

ஆஞ்ச நேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் நமக்கு தைரியம் வரும், பயம் நிவ்ருத்தி ஆகும். புத்தி வரும். பக்தி வரும். ஞானம் வரும். காமம் நசித்துவிடும்.

ராம் ராம் என்று எங்கெங்கே சொல்லிக் கொண்டிருந்தாலும், ரகுனான கீர்த்தனம் எங்கெங்கே நடந்தாலும்
அங்கெலாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்ச நேயர் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக்கொண்டு நின்று கேட்கிறார். இந்த காலத்தில் நமக்கு மற்ற எல்லா அனுக்கிரஹங்களோடு
முக்கியமாக அடக்கமாக இருக்கிற பண்பு ரொம்பவும் அவசியப்படுகிறது. அதை நமக்கு ஆஞ்ச நேயர்
அனுக்கிரஹம் பண்ணவேண்டும். அவரைப் பிரார்த்திப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை.

நன்றி : கல்கி.